செய்கடமை COVID – 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்தால் ரூ. 100 இலட்சம் நன்கொடை

செய்கடமை COVID – 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்தால் ரூ. 100 இலட்சம் நன்கொடை

லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து, செய்கடமை COVID – 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு, 100 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.

அதற்கான காசோலை, இம்மாதம் 21ஆம் திகதியன்று முற்பகல், குறித்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி தீப்தி லொக்குஆரச்சி அவர்களினால், ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளரும் பணிக்குழாம் பிரதானியுமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ.எகொடவெல அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களும், இந்த அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு, நன்கொடைகளை வைப்புச் செய்து வருகின்றனர். காசோலை அல்லது டெலிகிராஃப் தந்திப் பரிமாற்றத்தின் ஊடாகவும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற குறியீட்டை அழுத்தியோ, அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க முடியும். தொலைபேசி இலக்கம் – 076 – 0700700/ 011 – 2320880/ 011 – 2354340/ 011 – 2424012 ஆகியவற்றுக்கு அழைப்பை ஏற்படுத்தி, மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

23.09.2021

Share This Post