ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விஜயம்…

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விஜயம்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (19) முற்பகல் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தார்.

2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு குறித்த விவாதத்தின் இரண்டாவது நாள் இன்று.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் சபைக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் அங்கிருந்து விவாதத்தை செவிமடுத்தார்.

புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டத் தொடரில் உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி அவர்கள் சபைக்கு வருகைதந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

 

Share This Post