ஜனாதிபதி ராமன்ய மகா நிகாயவின் புதிய மகா நாயக்க தேரரை சந்தித்தார்…

ஜனாதிபதி ராமன்ய மகா நிகாயவின் புதிய மகா நாயக்க தேரரை சந்தித்தார்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ராமான்ய மகா நிகாயவின்  புதிய மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய மகுலேவே விமல நாயக்க தேரரை சந்தித்தார்.

தேரர் அவர்கள் வசிக்கும் மீரிகம, மினிஒழுவ, வித்யாவாச பிரிவெனாவுக்கு இன்று (27) முற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள் புதிய மகா நாயக்க தேரரை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பௌத்த சாசனத்திற்கும், சமய மற்றும் தேசிய ரீதியாகவும் ராமான்ய மகா நிகாயவினால் மேற்கொள்ளப்படும் சேவைகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அப்பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தன்னுடையவும் அரசாங்கத்தினதும் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

மகாநாயக்க தேரரின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தித்த ஜனாதிபதி அவர்கள், விசேட குறிப்பொன்றுடன் நினைவுப் புத்தகத்தில் கைச்சாத்திட்டார்.

இலங்கை ராமான்ய மகா நிகாயவின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நெதகமுவே விஜய மைத்ரி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இதன் போது வருகைதந்திருந்தனர்.

தேரர் அவர்கள் பிரித் பாராயனம் செய்து ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வதித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தனவும் இங்கு வருகை தந்திருந்தார்.

Share This Post