தேசிய மற்றும் பௌத்த கொடிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதாக ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு…

தேசிய மற்றும் பௌத்த கொடிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதாக ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு…

நாட்டின் தேசிய மற்றும் பௌத்த கொடி தேவையினை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு தனது அமைச்சு தயாராக உள்ளதாக பத்திக், கைத்தறி மற்றும் உள்நாட்டு சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உறுதியளித்தார்.

தேசிய மற்றும் பௌத்த கொடிகளை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் பெருந்தொகை அந்நியச் செலாவணி  செலவிடப்படுகின்றுது. அடுத்த வருடம் முதல் தேவையான கொடிகளை உயர் தரத்துடன் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பத்திக் மற்றும் கைத்தறித் துறையில் உள்ள உற்பத்தியாளர்கள் தயாராகவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பத்திக் உற்பத்தியிலான தேசிய கொடியை நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்

Share This Post