‘தீகவாபிய அருண’ நிதியத்திற்கு பௌத்தயா தொலைக்காட்சி ரூ .50 மில்லியன் அன்பளிப்பு …

‘தீகவாபிய அருண’ நிதியத்திற்கு பௌத்தயா தொலைக்காட்சி  ரூ .50 மில்லியன் அன்பளிப்பு …

‘தீகவாபிய அருண’ நிதியத்திற்கு பௌத்தயா தொலைக்காட்சி நன்கொடையாக வழங்கிய ரூ .50 மில்லியனுக்கான காசோலை இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பௌத்தயா தொலைக்காட்சி பணிப்பாளர் குழுவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமைகள் முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணியின் முதல் மற்றும் முக்கிய பாதுகாப்பு பணியாக தீகவாபிய சைத்யவின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்காக ‘தீகவாபிய அருண’ நிதியம் பெப்ரவரி 12 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினதும் பிரதமர் அவர்களினதும் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தீகவாபி புனரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்படும் ஓய்வு மண்டபத்தின் உத்தேச செலவு ரூ .75 மில்லியன் ஆகும். இதற்காக திரு. சுதத் தென்னகோன் 25 மில்லியன் ரூபாவை நன்கொடை அளித்தார்.

பௌத்தயா தொலைக்காட்சி மீதமுள்ள ரூ .50 மில்லியனை நன்கொடையாக வழங்கியுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரண்ணாகொட, கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகள் முகாமைத்துவத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, செயலணியின் செயலாளர் ஜீவன்தி சேனாநாயக்க, திலித் ஜயவீர, சுரணிமல சேனாரத்ன, ஹர்ஷ அலஸ், சுதத் தென்னகோன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This Post