ரொஷான் ரணசிங்கவுக்கு புதிய இராஜாங்க அமைச்சுப் பதவி…
சுகாதாரத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் மீண்டும் சேவைக்கு திரும்பும் வரை பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜயசுமன இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பேராசிரியர் சன்ன ஜயசுமன மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.
திரு. ரொஷான் ரணசிங்க மாகாண சபைகள் மற்றும் உள்ளளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் திரு. ரொஷான் ரணசிங்க காணி முகாமைத்துவ விவகாரம், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.
திரு. ரொஷான் ரணசிங்க இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.