‘ஹெல வெதகமே யடகியாவ’ நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு …

‘ஹெல வெதகமே யடகியாவ’ நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு …

மேல் மாகாண தலைமை சங்க நாயக்க தேரர் நாரஹேன்பிட அபயராமாதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எழுதிய ‘ஹெல வெதகமே யடகியாவ’ நூலின் முதற் பிரதி இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கையின் பண்டைய சுதேச மருத்துவம் மற்றும் அதன் பொற்காலம் மற்றும் பெறுமானங்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் இந்த நூலில் உள்ளன.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர், மிரிசவெட்டிய விகாரையின் தலைமை தேரர் சங்கைக்குரிய ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக தேரர் மற்றும் கொடகே வெளியீட்டகத்தின் தலைவர் தேசபந்து சிறிசுமன கொடகேயும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

EWIS Colombo Limited உள்நாட்டு கணினி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த புதிய EWIS Neo pro. Laptop கணினி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.

மிரிசவெட்டிய விகாரையின் தலைமை தேரர் சங்கைக்குரிய ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக தேரர் அதை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கினார்.

Share This Post