ஜனாதிபதி வரலாற்று முக்கியத்துவமிக்க அனுராதபுரம் அட்டமஸ்தானவில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றார்…

ஜனாதிபதி வரலாற்று முக்கியத்துவமிக்க அனுராதபுரம் அட்டமஸ்தானவில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றார்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அனுராதபுரத்தில் உள்ள அட்டமஸ்தான என அழைக்கப்படும் வரலாற்று முக்கியத்துவமிக்க எட்டு புராதன விகாரைகளில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

நேற்று (11) பிற்பகல் அனுராதபுரத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், அட்டமஸ்தானாதிபதி சங்கைக்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச நாயக்க தேரரரை சந்தித்து சுமூகமாக கலந்துரையாடினார்.

ஜய ஸ்ரீ மகாபோதி வளாகத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு வருகை தந்திருந்த மக்களுடனும் சுமூகமாக கலந்துரையாடி விபரங்களை கேட்டறிந்தார்.

வரலாற்று முக்கியத்துவமிக்க ருவன்வெலி மகாசேய விகராதிபதி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரையும் சந்தித்த ஜனாதிபதி அவர்கள், ருவன்வெலி மகாசேயவிலும் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

அங்கு வருகை தந்திருந்த மக்களுடனும் ஜனாதிபதி அவர்கள் உரையாடினார்.

ஜனாதிபதி அவர்கள் ஜெதவன விகாராதிகாரி சங்கைக்குரிய ஹல்மில்லேவே ரத்னபால தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டதுடன், சமயக் கிரியைகளிலும் ஈடுபட்டார். ஜெதவன விகாரையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார்.

அபயகிரி விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், விகாராதிபதி சங்கைக்குரிய கல்லங்சியே ரத்னசிறி தேரரை சந்தித்து சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.

அபயகிரி விகாரையில் சமயக் கிரியைகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், விகாரையின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.

 

Share This Post