தம்புத்தேகம விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

தம்புத்தேகம விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

திடீர் வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளான அனுராதபுர மாவட்ட மக்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (23) பிற்பகல் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது அங்குள்ள பொருட்களின் விலை மற்றும் தரம் ஆகியவற்றை ஜனாதிபதி அவர்கள் மேற்பார்வை செய்ததுடன், வர்த்தகர்களையும் நுகர்வோரையும் சந்தித்து பொருளாதார மத்திய நிலையத்தின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.

உயர் தரத்துடன் நுகர்வோருக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் பொருளாதார மத்திய நிலையத்தை முன்னெடுத்து செல்லவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்

Share This Post