பல்நோக்கு அபிவிருத்தி செயலணி செயலாளர் அலுவலத்தின் பணிப்பாளர் நாயகம் நந்த மல்லவஆரச்சி கடைமைகளை பொறுப்பேற்றார்

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி செயலாளர் அலுவலத்தின் பணிப்பாளர் நாயகம் நந்த மல்லவஆரச்சி கடைமைகளை பொறுப்பேற்றார்

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்தமல்லவஆரச்சி அவர்கள் இன்று (07) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

கொழும் 01, செதம் வீதி, இலக்கம் 17 இல் அமைந்துள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தில்  இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கமைய “வறுமையற்ற இலங்கை” யைக் கட்டியெழுப்பும் எண்ணக்கருவினை செயற்படுத்துவதற்காக பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டிய சிறி வஜிராராமையின் விகாராதிபதி  சங்கைக்குரிய திருக்குணாமலையே ஆனந்த நாயக்க தேரர் அவர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினர்.

Share This Post