“விரு அபிமன்“ கோவிட் 19 காப்புறுதி பாதுகாப்பு சான்றிதழ் ஜனாதிபதியிடம் கையளிப்பு…

“விரு அபிமன்“ கோவிட் 19 காப்புறுதி பாதுகாப்பு சான்றிதழ் ஜனாதிபதியிடம் கையளிப்பு…

“விரு அபிமன்“ கோவிட் 19 காப்புறுதி பாதுகாப்பின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து காப்புறுதி பாதுகாப்பு சான்றிதழ் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் வெல்லவத்தவினால் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

கோவிட் 19 தொற்றுநோய் அபாயத்துடன் இலங்கை காப்புறுதி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் காப்புறுதித் திட்டத்தின் முதல் கட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இது கோவிட் ஒழிப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களையும், முப்படையினர் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளையும் உள்ளடக்கியது.

இரண்டாம் கட்டமாக அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களையும் பங்குதாரராக்கிக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட் 19 காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டால் “விரு அபிமன்“ காப்புறுதி பாதுகாப்பு ரூ. 100,000 வழங்குகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது கிடைக்கும் தொகை ரூ.1,000 ஆகும். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அதிகபட்சம் 90 நாட்களுக்கு உட்பட்டு ரூ .2,000 கொடுப்பனவு வழங்கப்படும்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This Post