Month: நவம்பர் 2019

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு விஜயம்

பாரம்பரிய மரபுகளுக்கு ஏற்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (20) காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தை வழிபட்டார். தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை பிரதான நான்கு விகாரைகளின் பஸ்நாயக்க நிலமேகளுடன் தியவடன நிலமே பிரதீப் நிலங்கதேல வரவேற்றார். ஜனாதிபதி அவர்கள் இன்று மல்வத்தை பீடம், அஸ்கிரிய பீடம் மற்றும் இலங்கை ராமாஞ்ஞய மகாநிக்காய ஆகியவற்றின் சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து அவர்களது நல்லாசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளார். ” order_by=”sortorder” order_direction=”ASC”…

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக வருகை தந்திருக்கும் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்களை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்டிருக்கும் அவரது அழைப்பை கௌரவத்துடன் ஏற்றுக்கொண்டேன். அத்தோடு இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை பலப்படுத்தவும்,…

மூன்று புதிய செயலாளர்கள் நியமனம்

மூன்று புதிய செயலாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (19) நியமிக்கப்பட்டனர். கலாநிதி பி.பீ.ஜயசுந்தர ஜனாதிபதியின் செயலாளராகவும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எஸ்.ஆர்.ஆட்டிகல திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு ஓசத சேனாநாயக்க அவர்கள் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். சமயக் கிரியைகளை தொடர்ந்து இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் பங்குபற்றினார். பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்த, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, தயாசிறி ஜயசேகர, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல,…

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்பு

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (18) அநுராதபுரத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தும் அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன அவர்கள் வாசித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர். அநுராதபுரம் ருவன்வெலிசேயவில்…

புதிய ஜனாதிபதிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து.…..

ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றிபெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிராந்திய நாடுகளின் தலைவர்கள் நேற்று (17) வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில், “எமது இரண்டு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருங்கிய சகோதரத்துவ உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி, சுபீட்சம் பாதுகாப்புக்காகவும் உங்களுடன் நெருங்கி பணியாற்ற விரும்புகின்றேன்.” எனவும் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருப்பதையிட்டு இலங்கை மக்களுக்கு…