Month: டிசம்பர் 2019

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி

சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடைந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. இவ்வுலக வாழ்க்கையில் ஒளியேற்றுவதே நத்தாரின் உண்மையான அர்த்தமாகும். இதற்காக எம்மை பற்றியுள்ள சகல தீய எண்ணங்களையும் களைந்து, அன்பு, கருணை, மனித நேயம் ஆகியவற்றால் எமது மனங்களை நிரப்பிக்கொள்வோம். பாவத்திலிருந்து மீண்ட இயேசு பிரான் சகல மக்களுக்கும் காட்டிய ஆன்மீக…

வாழ்க்கைச் செலவு அமைச்சரவை உப குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

 அடுத்த போகம் முதல் விஞ்ஞானபூர்வமான முறைமைக்கு ஏற்ப அறுவடைகள் கொள்வனவு…  நாடளாவிய ரீதியில் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு… வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராயும் அமைச்சரவை உப குழு முதன்முறையாக மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பற்றாக்குறையின்றியும் நிவாரண விலையிலும் மக்களுக்கு உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுப்பது பற்றி இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. மேலும் அடுத்த போகம் முதல் அறுவடைகளை…

சுதேச கலைகளின் வளர்ச்சிக்காக முழுமையான உதவி வழங்கப்படும்– ஜனாதிபதி

சுதேச கலைகளினதும் கலைஞர்களினதும் மேம்பாட்டிற்காக தனது பதவிக்காலத்தில் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உறுதியளித்தார். எமது பாரம்பரியங்களையும் நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவத்தை பாதுகாக்கும் கொள்கையில் அதற்காக திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் கலைஞர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்…

மத்திய வங்கியின் ஆளுநராக பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷமன் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தேசமான்ய பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷமன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார். 1994ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை கொழும்பு பல்கலைகழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய அவர், இலங்கையின் புகழ்பெற்ற ஒரு பொருளாதார நிபுணராவார். கல்வித்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷமன் அவர்களுக்கு 2005ஆம் ஆண்டு தேசமான்ய விருது வழங்கப்பட்டது. பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷமன் இலங்கை மத்திய வங்கியின்…

பொலன்னறுவை மாவட்டத்தில் அனர்த்தத்திற்குள்ளான மக்களை மீளக் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளாகிய பொலன்னறுவை மாவட்ட மக்களை மீளக்குடியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பில் கண்டறிவதற்கான விசேட கலந்துரையாடலில் இன்று (23) பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார் இதுவரை பொலன்னறுவை மாவட்டத்தில் அனர்த்தத்திற்குள்ளான 451 குடும்பங்களை சேர்ந்த 1588 பேர் 10 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு 08 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 250 வீடுகள்…

அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்க சுற்றுநிரூபங்களையும் ஒழுங்குவிதிகளையும் தடையாகக் கொள்ளவேண்டாம்– ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

 நிவாரண நிலையங்களுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்…  அனர்த்த நிலைமை சீரானதன் பின்னர் மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க பணிப்பு… திடீர் வெள்ளப்பெருக்கினால் அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு தேவையான நிவாரணங்களை துரிதமாக பெற்றுக்கொடுப்பதற்கு சுற்றுநிரூபங்களையும் ஏனைய ஒழுங்குவிதிகளையும் தடையாகக் கொள்ளவேண்டாம் எனவும் அவ்வாறு காணப்படுமாயின்  அவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்காக செயற்படுத்தப்படும் நிவாரண வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்யும் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (23) முற்பகல்…

தம்புத்தேகம விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

திடீர் வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளான அனுராதபுர மாவட்ட மக்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (23) பிற்பகல் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது அங்குள்ள பொருட்களின் விலை மற்றும் தரம் ஆகியவற்றை ஜனாதிபதி அவர்கள் மேற்பார்வை செய்ததுடன், வர்த்தகர்களையும் நுகர்வோரையும் சந்தித்து பொருளாதார மத்திய நிலையத்தின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார். உயர் தரத்துடன் நுகர்வோருக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் பொருளாதார மத்திய நிலையத்தை முன்னெடுத்து…

அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை கண்டறிய ஜனாதிபதி அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவைக்கு கண்காணிப்பு விஜயம்

அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு துரித நிவாரணம்… சேதமடைந்துள்ள வீதிகள் மற்றும் குளங்களை சீர் செய்வதற்கு துரித நடவடிக்கை… பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட இழப்பு பற்றிய தகவல்கள் சேகரிப்பு…. அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (23) அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது இன்று முற்பகல் அனுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளை…

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மகாசங்கத்தினரும் மக்களும் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர் – கொட்டபிடியே ராகுல தேரர் 

எமது தனித்துவத்திற்கும் இறைமைக்கும் முக்கியத்துவமளித்து அபிமானமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மகாசங்கத்தினரும் மக்களும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி மகாசங்க சபையின் தலைவரும் பாளி மற்றும் பௌத்த கல்வி பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் பணிப்பாளரும் வாதுவ தல்பிடிய போதிராஜ மகா விகாரையின் விகாராதிபதியுமான பேராசிரியர் கொட்டபிடியே ராகுல தேரர் தெரிவித்தார். சவால்களுக்கு மத்தியில் பின்னடையாது முன்னோக்கி பயணித்து மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்த தேரர், இதற்காக ஜனாதிபதி…

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் ஜனாதிபதியின் முயற்சிக்கு மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம்

தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருந்த நாட்டினை சரியான திசையில் பயணிக்க செய்து, சுபீட்சமிக்க, வளர்ச்சியடைந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் முயற்சிக்கு ஒட்டுமொத்த மகாசங்கத்தினரின் ஆசிர்வாதமும் அனுசரணையும் கிடைத்துள்ளதாக வண.எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார். இன்று (20) பிற்பகல் கொழும்பு தர்மாயதன விகாரைக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், வண.எல்லே குணவங்ச தேரரை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டபோதே தேரர் அவர்கள் இதனைத் தெரிவித்தார். “நாட்டை முன்னேற்றுவதற்கான ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற வேண்டும்.…