Month: ஜனவரி 2020

இருதரப்பு உறவை வலுப்படுத்த லக்சம்பர்க் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

லக்சம்பர்க் வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் ஜீன் அசெல்போர்ன் இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். டில்லியில் உள்ள லக்சம்பர்க் தூதுவர் ஜீன் கிளாட் குகேனரும் அமைச்சருடன் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். லக்சம்பர்க்கும் இலங்கையும் மிகவும் ஒத்த தன்மைகளை கொண்டவை என்று அமைச்சர் குறிப்பிட்டார். இரண்டும் சிறிய நாடுகள் என்றும் இலங்கை, இந்தியாவையும் சீனாவையும் சக்திவாய்ந்த அண்டை நாடுகளாகக் கொண்டிருப்பதைப் போலவே, லக்சம்பர்க் பிரான்சிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் உள்ளது என்றும் அவர்…

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய மேலைத்தேய மற்றும் சுதேச சிகிச்சைகள் பற்றி கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை குணப்படுத்தக்கூடிய மேலைத்தேய மற்றும் சுதேச மருத்துவ முறைகள் பற்றி அத்துறையிலுள்ள நிபுணர்களை அழைத்து தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபாக்ஷ அவர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் சுகாதார, வெளிவிவகார, சுற்றுலா மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்தார். கொரோனா வைரஸ் தொற்றுடைய முதலாவது நோயாளி தற்போது நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளார்.…

உலக வங்கி – இலங்கை ஒத்துழைப்புக்கான புதிய துறைகள் இனங்காணப்பட்டுள்ளன

உலக வங்கியும் இலங்கையும் உலக வங்கியின் நிதியுதவியிலான தற்போதுள்ள திட்டங்களுக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான பல புதிய துறைகளை இனங்கண்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க சக்திவலு, குப்பைகளை அகற்றுதல், நீர்நிலை முகாமைத்துவம், ஏற்றுமதிக்கான பெருந்தோட்டப் பயிர், போக்குவரத்து நெரிசலை எளிதாக்குதல் மற்றும் பாதசாரிகள் மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகியவையே அவைகளாகும். இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை தெற்காசியாவிற்கான உலக வங்கியின் பிரதித் தலைவர் ஹார்ட்விக் ஷாபர் சந்தித்தபோது இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த உடன்பாடு…

மக்களை கஷ்டத்திற்குள்ளாக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்து விலகி முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை

பட்டதாரிகள் மற்றும் அதற்கு சமமான உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தேவையான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன. தேவையான நிதி ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்க, பகுதியளவு அரச மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கேற்ப பட்டத்திற்கு பொருத்தமான தொழில் ஒன்றை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு சுமார் 53,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கை மார்ச் மாதம் 01ஆம் திகதி ஆரம்பமாகும். பல்வேறு அரச நிறுவனங்களில் தற்காலிக மற்றும்…

சீனாவில் உள்ள இலங்கை மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்

விமானச் சீட்டுகளுக்கு 50 வீத விலைக் கழிவு….  வருகைத் தரும் மாணவர்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனை….  தேசிய சுகாதார செயலணி இன்று கூடுகின்றது…  அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன…  சீனவிலிருந்து வருகைத் தரும் விமானப் பயணிகளுக்கு தனியான வழி… சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். டியன்ஜினிலிருந்து 21 மாணவர்கள் இன்று பிற்பகல் இலங்கைக்கு தமது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. மாணவர்களை அழைத்துவரும் நடவடிக்கையினை ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார…

முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி பங்குபற்றினார்

நாரஹேன்பிட்டி அபயராமவின் தலைமைத் தேரரும் மேல் மாகாண சங்க நாயக்கருமான சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு விசேட அன்னதான நிகழ்வு இன்று (26) அவ்விகாரையில் இடம்பெற்றது. மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். பல வருடங்களாக பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருந்த மக்களுக்கு சுபீட்சமான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஒரு…

சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்துவர உடனடி நடவடிக்கை

அடுத்த 48 மணித்தியாலங்களில் முதலாவது குழு நாட்டை வந்தடையும்… கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வுஹான் (WUHAN) மற்றும் சிச்சுஆன் (Sichuan) மாகாணங்களில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை ஆகியன இணைந்து விசேட…

வறுமையை ஒழித்தல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற பிரதி திறைசேரி செயலாளர் எஸ்.பீ.திவாரத்னவின் தலைமையிலான இச்செயலணி பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவு மற்றும் அனுபவம் வாய்ந்த 12 உறுப்பினர்களை கொண்டுள்ளது. கடந்த காலங்களில் சுதேச பொருளாதாரத்தின் பலம் சர்வதேச மட்டத்தில் உரிய மதிப்பை பெறவில்லை. கிராமிய, தோட்ட மற்றும் நகரப் புறங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களின் திறன், இயலுமைகளைப்போன்றே பலவீனங்கள், சவால்கள் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்படாததன் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள்…

சக்தி வலு உற்பத்திக்கு நம்பகமானதொரு வலையமைப்பை நிறுவுவதற்கு இலங்கைக்கு உதவ கட்டார் அரசு முன்வந்துள்ளது. இது சக்தி வலுத் துறையில் உயர்மட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பை இந்த நோக்கத்திற்காக கொண்டு வரும். கட்டார் நாட்டின் சக்தி வலு விவகாரத்துறை அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி (Saad Sherida Al Kaabi) இன்று (26) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தபோது இந்த உறுதிமொழியை அளித்தார். அண்மையில் நடந்த தேர்தல் வெற்றிக்காக ஜனாதிபதி அவர்களுக்கு…

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கென்றே அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கென்றே அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையமான “ஆயத்தி“ தேசிய மத்திய நிலையம்” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (25) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது அங்கவீனம் என்பது ஒரு தேசிய பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளது. ஐந்து சிறுவர்களில் ஒருவர் (20%) உடல் அல்லது உள குறைபாடுகளை கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முற்கூட்டியே கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் அவர்களை சிறந்த முறையில் சமூகமயப்படுத்த முடியும். இதற்கு தீர்வொன்றை வழங்கும் வகையில்…