Month: பிப்ரவரி 2020

பொலிஸ் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

பொலிஸ் பிரிவுகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (28) பிற்பகல் பம்பலப்பிட்டி பொலிஸ் விளையாட்டரங்கில் மிக விமரிசையாக இடம்பெற்றது. 83வது தடவையாக இடம்பெற்ற இவ்விளையாட்டுப்போட்டி தடகள மற்றும் மைதான போட்டிகளை கொண்டமைந்திருந்தது. மூன்று நாட்களாக நடைபெற்ற இவ்விளையாட்டுப்போட்டியில் 60 பொலிஸ் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றினர். பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பதிற் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன…

உயர் செயற்திறன்மிக்க அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கிவைப்பு

பாராளுமன்றத்தின் அரச கணக்காய்வு குழு 2018ஆம் ஆண்டுக்கான நிதிக்கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கமைய செயற்படுதல் தொடர்பான உயர் தரத்திலான பெறுபேற்றை வெளிக்காட்டிய நிறுவனங்களை பாராட்டும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (28) முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அரச கணக்காய்வு குழு 2018ஆம் ஆண்டில் அரச, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் 844 ஐ மதிப்பீடு செய்துள்ளது. அதில் தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்கள் 109க்கு விருதுகள் வழங்கப்பட்டன. 55 நிறுவனங்கள் தங்க விருதுகளையும்,…

பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் சீனத் தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

 இலங்கையில் சீனாவின் தூதுவராக கடமையாற்றக் கிடைத்தமை, தனக்கு கிடைத்த கௌரவமாகும் என சீன தூதுவர் செங்க்சியுஆன் குறிப்பிட்டார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையில் இருந்து விடைபெற்றுச்செல்லும் முன் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் தனது பதவிக்காலத்தில் மறக்க முடியாத பல நினைவுகள் காணப்படுவதாக குறிப்பிட்ட தூதுவர், தனது புதிய பதவியிலும் இலங்கைக்கு தன்னாலான அனைத்து வித உதவிகளையும் செய்வதாக குறிப்பிட்டார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட…

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு நேரடி விஜயம்

 முதலாவது சந்திப்பு காலி உடுகம ஹோமாதொளையில்….  சில பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள்…..  ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட தொடரின் முதலாவது கூட்டம் காலி மாவட்டத்தில் உடுகம ஹோமாதொல, ராஜகிரி லென் விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றது. புள்ளி விபரங்களின்படி காலி மாவட்டத்தில் மிகவும் வறிய கிராமமான உடுகம ஹோமாதொள கொத்தலாவலபுர கிராமம் ஜனாதிபதி அவர்களினால்…

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க வழி செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் மீன்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இப்பணிப்புரையை விடுத்தார். ஏற்றுமதி சந்தை தொடர்பாக, கொள்கை அடிப்படையில் புதிய திட்டங்களை வகுக்கும்போது ஏற்றுமதியாளர்கள், மீன்பிடிப்படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றின் மூலம் செயற்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் தெளிவூட்டினார். சட்டத்திற்கு…

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சோபித ராஜகருணா பதவிப்பிரமாணம்

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் மரக்கறி விலைகளை கட்டுப்படுத்துவற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

அதிகரித்த மரக்கறி விலைகளை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் நிகழ்ச்சித்திட்டமொன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மரக்கறிகளின் அதிகரித்த விலை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு பெரிதும் பாதிப்பினை செலுத்துகின்றது. அதனை கட்டுப்டுத்துவதற்கு உடனடியாக தலையிட வேண்டியுள்ளதென ஜனாதிபதி அவர்கள் மகாவலி அபிவிருத்தி அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.…

கடந்த 100 நாட்களில் ஜனாதிபதி அவர்களின் செயற்பாடுகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்று 2020.02.25 ஆம் திகதிக்கு 100 நாட்கள் நிறைவடைகின்றன. கடந்த நூறு நாட்களில் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு முன்னுரிமையளித்து மக்களின் எதிர்பார்ப்புகளை  நிறைவேற்ற மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளின் சாரம்சம் பின்வருமாறு. கல்வி மற்றும் எதிர்கால தலைமுறைக்காக… ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல். உயர் தரம் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை உறுதி செய்தல் கல்வியினால் பூரணத்துவமடைந்த சமூகத்தை நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட…

இலங்கைக்கு முழுமையாக உதவ பாக்கிஸ்தான் தயார்

பாதுகாப்பு, வர்த்தகம், அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தல் போன்ற துறைகள் உள்ளிட்ட வேறு எந்தவொரு துறையிலும் இலங்கைக்கு தேவையான முழுமையான உதவியை வழங்குவதற்கு பாக்கிஸ்தான் தயாராக உள்ளது. இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டாக் அவர்கள்  (Muhammad Saad Khattak) இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையில் தற்போதும் சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு இருந்து வருவதால் இலங்கைக்கும்…

ஹம்பாந்தோட்டையையும் மத்தளையையும் கொழும்புடன் இணைக்கும் தெற்கு அதிவேகப் பாதையின் இறுதிக் கட்டம் மக்கள் பாவனைக்கு

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலையம் வர்த்தக நகரான கொழும்புடன் இணையும் தெற்கு அதிவேகப் பாதையின் இறுதிக் கட்டமான பாலட்டுவ தொடக்கம் பரவகும்புக்க வரையான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (23) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. கொடகம, பாலட்டுவ வெளியேறும் வாயிலுக்கு அருகில் பாதையை திறந்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் பாலட்டுவ தொடக்கம் தெற்கு அதிவேகப் பாதையினூடாக பரவகும்புக்க வரை…