Month: மார்ச் 2020

முறையான தேசிய கல்விக்கொள்கையொன்றை உடனடியாக உருவாக்குவது தொடர்பாக ஜனாதிபதி கவனம்

அமைச்சர்களின் படங்கள் மற்றும் செய்திகள் பாடசாலை, பாட புத்தகத்திலிருந்து நீக்கம்….  தரம் 05திற்கு மேற்பட்டவர்களுக்கு கணனிக் கல்வி….. முன்பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையிலான கல்வி முறைமையில் மாற்றம்… குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒன்றிணைக்க திட்டம்…. 19 கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழ பீடங்களாக தரம் உயர்த்துதல்… கால மாற்றங்களுக்கு பொருத்தமான வகையில் முறையான கல்விக்காக தேசிய கொள்கையொன்றை உடனடியாக உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். ஜனாதிபதி அல்லது கல்வி அமைச்சர் மற்றும்…

அடுத்த பிம்ஸ்டெக் மாநாடு இலங்கையில்

பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறவிருப்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் எம்.சஹிதுல் இஸ்லாம் (M. Shahidul Islam) அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். பொதுச் செயலாளர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களை சந்தித்தபோதே இதனை குறிப்பிட்டார். 2018 – 2020 ஆம் ஆண்டு வரை பிம்ஸ்டெக் தலைமை பொறுப்பை இலங்கை ஏற்றுள்ளது. இம்மாநாடு செப்டெம்பர் மாதம் நடைபெறும்.…

அபிவிருத்தி பின்னடைவினால் ஏற்பட்டுள்ள சவாலை வெற்றிகொள்வதே மக்கள்மைய பொருளாதார மாதிரியின் நோக்கம்  – ஜனாதிபதி

   தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் முக்கிய சவால் உடனடி பொருளாதார அபிவிருத்தியை அடைந்துகொள்வதென்றும் கடந்த காலத்தில் நாம் முகங்கொடுத்த பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்பட்டதற்கான காரணம் வரப்பிரசாதமற்ற மக்கள் கூட்டத்தினர் பொருளாதாரத்தை சுரண்டியமையுமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இனம், மதம், மொழி அல்லது வாழும் பிரதேசத்தை கவனிக்காது சமுதாயத்தில் அனைவருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமாயின் இவ்வாறான பேதங்கள் இலங்கையில் ஏற்படாதென்றும் நம்பிக்கை வெளியிட்டார். தான் முன்வைத்துள்ள மக்கள்மையப்பட்ட…

பற்றாக்குறையாவதற்கு இடம் வைக்காது சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க ஜனாதிபதி பணிப்பு

பற்றாக்குறைக்கு இடம் வைக்காது எதிர்வரும் சிறுபோகத்திற்கு தேவையான உரத்தினை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். எதிர்வரும் சில தினங்களில் உர தொகுதி நாட்டை வந்தடைய உள்ளது. தாமதமின்றி உரத்தினை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், விவசாயிகளை ஒருபோதும் அசௌகரியத்திற்குள்ளாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். உரத்தினை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற…

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விநியோகம் இறுதிக்கட்டத்தில்

வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தகுதி பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. தொழிலை எதிர்பார்ப்போர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட முதல் பட்டம் அல்லது அதற்கு நிகரான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிப்ளோமா பாடநெறியை 2019.12.31க்கு முன்னர் நிறைவு செய்திருக்க வேண்டும். 70,000திற்கும் மேற்பட்ட தொழில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 56,000 விண்ணப்பங்கள் அடிப்படை தகைமைகளுக்கேற்ப தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவ்விண்ணப்பப்படிவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டங்கள் மற்றும் டிப்ளோமா சான்றிதழ்களை உறுதி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. முதலாவது இடைக்கால அறிக்கை 2019 டிசம்பர் 20ஆம் திகதி கையளிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் 2019 செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.…

“முப்பது வருட மஹிந்தானந்தய” பாராட்டு விழா ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமவின் அரசியல் வாழ்வின் முப்பது வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று (01) பிற்பகல் கண்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் மேல் மாகாண ஆளுநர் சீத்தா அரம்பேபொல ஆகியோர் “நான் கண்ட மஹிந்தானந்த” என்ற தொனிப்பொருளில் விசேட உரையாற்றினர். “முப்பது வருட மஹிந்தானந்தய” நூல் மகாசங்கத்தினர், ஜனாதிபதி மற்றும்…

ஜனாதிபதியின் உருவப் படத்தை காட்சிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் புகைப்படம் அல்லது கையினால் வரையப்பட்ட அவரின் உருவப்படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வரையப்பட்ட உருவப்படம், ஓவியங்கள் (Portrait) மற்றும் புகைப்படங்களை கண்காணிப்பின்றி பாதையோரங்களில், பொது விழாக்கள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. தமது உருவத்தை வரையும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஜனாதிபதி அவர்கள், அதேவேளை அவ்வாறு செய்வதினை தவிர்த்துக்கொள்ளுமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனிநபர் பிரபல்யத்தை தான் விரும்பவில்லையென அவர் மேலும்…

ஜனாதிபதி வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (01) முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றார். அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், தேரரின் நலன் விசாரித்தறிந்தார். அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதித்தார். ஜனாதிபதி…

மெடரம்ப ஹேமரத்தன தேரருக்கு சன்னஸ் பத்திரம் வழங்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்

மல்வத்தை மகா விகாரையின் தென்னிலங்கை பிரதான சங்கநாயக்கர் பதவியைப் பெற்றுக்கொண்ட சங்கைக்குரிய மெடரம்ப ஹேமரத்தன நாயக்க தேரருக்கு சன்னஸ் பத்திரம் வழங்கும் புண்ணிய நிகழ்வு காலி உனவட்டுன யட்டகல ரஜமகா விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றது. சங்கைக்குரிய மெடரம்ப ஹேமரத்தன நாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் ஜனாதிபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், பிரதமரினால் விஜினிபத்த வழங்கி வைக்கப்பட்டது. முப்பது வருடகால தீவிரவாதம்…