Month: ஏப்ரல் 2020

குறைகள் மற்றும் தவறுகளை கருத்திற்கொண்டு கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது என ஜனாதிபதி தெரிவிப்பு

Ø  நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சுதேச மருந்துகளை பயன்படுத்துவது குறித்து கவனம் Ø  பரிசோதனை உபகரணங்களை நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை Ø  நிறுவனங்களை நடத்திச்செல்ல வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் நடைமுறையாகின்றனவா என்பது குறித்து கவனம் Ø  வீடுகளில் உள்ள பிள்ளைகளின் உள ஆரோக்கியத்தை பாதுகாக்க நடவடிக்கை குறைகள் மற்றும் தவறுகளை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அரசாங்கம் வைரஸை ஒழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகின் அனைத்து நாடுகளைப்…

விவசாய மற்றும் ஏனைய பொருட்களின் வர்த்தக பரிமாற்றத்திற்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஜனாதிபதி ஆராய்வு

விவசாயிகள், நுகர்வோர் மற்றும் உற்பத்திகளை விநியோகிப்போருக்கு இடையிலான பொறிமுறைக்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார். விவசாயம், உள்நாட்டு வர்த்தகம், நுகர்வோர் நலன்பேணல், பெருந்தோட்ட, ஏற்றுமதித்துறை அமைச்சிக்களின் செயலாளர்கள் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. வர்த்தகம், ஏற்றுமதி, உரம் உள்ளிட்ட சேவைகளை வழங்குதல், மொத்த விநியோகஸ்தர்கள், மொத்த கொள்வனவாளர்கள், பொருட்களை சேகரிப்போர், ஹோட்டல்கள் போன்ற பாரிய கொள்வனவாளர்கள் முதல் அன்றாட நுகர்வோர் வரையிலான விவசாய பயிர்களின் விற்பனைக்கு…

கொரோனாவுக்கு பிந்திய இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு உதவ சீனா தயார்

“இலங்கை சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக தொடர்ச்சியான சுமுகமான உறவுகள் இருந்துவருகின்து. அண்மையில் நாம் கொவிட் 19 அனர்த்தத்திற்கு முகம்கொடுத்திருந்த போது நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள். கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க சீனா தயாராகவுள்ளது” என்று இலங்கையின் பதில் சீன தூதுவர் ஹு வெய் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போது தெரிவித்தார். ஜனாதிபதியுடன் சுமுகமான கலந்துரையாடலொன்றில் ஈடுபட்ட பதில்…

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மவாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை, ஏப்ரல் 30 வியாழன் இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04 ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்ப நிதியத்தின் வைப்பு மீதி 878 மில்லியனாக அதிகரிப்பு

திஸ்ஸமகாராம சந்தகிரி உபய ரஜமகா விகாராதிபதி மாத்தற கந்தபடபத்துவ உள்ளிட்ட ஹம்பாந்தோட்டை தலைமை சங்கநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன தேரர் 1.5மில்லியன் ரூபா நிதியை இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் அன்பளிப்பு செய்தார். இலங்கை விமான சேவையின் நிறைவேற்று சங்கம் ஒரு மில்லியன் ரூபாவையும் Generation Next Communication Lanka (Pvt) Ltd நிறுவனம் 02 மில்லியன் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்ததுடன் அதற்கான காசோலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பன்னிபிடிய…

லங்கா மின்சார தனியார் நிறுவனம் அன்பளிப்பு செய்த 05 மில்லியன் ரூபா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனங்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.குணரத்ன தனது சம்பளத்தை சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தார். நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 871மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ சங்க சபையின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் மற்றும் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். கொவிட் 19 நோய்த்தொற்று குறித்த தற்போதைய நிலைமைகளை கேட்டறிந்த தம்மாலங்கார மகாநாயக்க தேரரும் கார்டினல் அவர்களும் வைரஸை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டினர். நோய்த்தொற்றை விரைவில் கட்டுப்படுத்த…

முப்படை முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஓய்வுபெற்ற பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் வழிகாட்டலுடன் இராணுவ முகாம்களில் முழுமையான சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்து, அதனை நடைமுறைப்படுத்தும், கண்காணிக்கும் பொறுப்பு புதிய ஜனாதிபதி செயலணியொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ‘மக்களையும் முப்படை அதிகாரிகளையும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பது…

கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக மைக்ரோ கார் லிமிடற் நிறுவனம் 90லட்சம் பெறுமதியான பஸ் வண்டியொன்றை அன்பளிப்பு செய்தது. பஸ் வண்டி இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைக்ரோ கார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி லோரன்ஸ் பெரேரா அவர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட்ட 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 866 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. மிஹின்தலை ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய வலகாஹெங்குனு வௌ தம்மரத்ன தேரர் ஒரு மில்லியன் ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார். களனி ரஜமகா விகாரை ஒரு மில்லியன் ரூபா, கதிர்காமம் ரஜமகாவிகாரை ஒரு மில்லியன் ரூபா, பம்பலப்பிட்டிய ஸ்ரீ வஜிராராம சங்கம் 96000 ரூபா, சனச அபிவிருத்தி வங்கி 05 மில்லியன் ரூபா, வரையறுக்கப்பட்ட சனச காப்புறுதி நிறுவனம் ஒரு மில்லியன் ரூபா, அவுஸ்திரேலியா நிவ் சவுத் வேல்ஸில் உள்ள ஆனந்தா…