Month: ஏப்ரல் 2020

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (ஏப்ரல் 09) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 04.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும். இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 14 செவ்வாய் காலை 06.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 04.00 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை தெளிவுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் புத்தாணடு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் அவ்வப்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்தரங்களை பெற்றுக்கொள்வதற்காக அதிகளாவனவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் ஒன்றுகூடுவது கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெரும் தடையாகும். எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவினால் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான புதிய முறைமையொன்று…

Ø  நிதியத்தின் வைப்பு மீதி 420 மில்லியனாக அதிகரிப்பு பாதுகாப்பு அமைச்சின் கீழ் சேவையில் உள்ள 1200 பேர் தன்னார்வமாக அன்பளிப்பு செய்த ஒரு கோடி ரூபா நிதியை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர அவர்களிடம் கையளித்தார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விசேட நிதியத்திலிருந்து 05 கோடி ரூபாவினை பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன கொவிட் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தார். இன்று பிற்பகலாகும் போது…

கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு

Ø  நிதியத்தின் வைப்பு மீதி 380 மில்லியனாக அதிகரிப்பு இரண்டு நாட்களில் கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 314 மில்லியன் ரூபாவாக இருந்த மீதி தற்போது 380 மில்லியனாக அதிகரித்துள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெறும தனது அமைச்சுப் பதவிக்கு உரித்தான ஏப்ரல் மாத சம்பளத்தையும் அமைச்சர் காமினி லொக்குகே 10 மில்லியன் ரூபாவையும் இன்று (06) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் அன்பளிப்பு செய்தனர். தேசிய லொத்தர சபை 25 மில்லியன் ரூபாவையும், தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியல் சங்கம் ஆகியன தலா 2.5 மில்லியன் ரூபாவும், காணி மறுசீரமைப்பு…

மெக்னிபிகா சொகுசு கப்பலில் சேவைசெய்த இலங்கை இளைஞரின் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றினார்

உலகின் எந்தவொரு துறைமுகத்தினாலும் பொறுப்பேற்கப்படாத எம்.எஸ்.சீ. மெக்னிபிகா (MSC Magnifica) கப்பலில் சேவை செய்த ஒரேயொரு இலங்கை இளைஞரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் கடற் படையினர் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இக்கப்பலில் பயணிகள் மற்றும் பணிக்குழாமினர் உட்பட 2700 பேர் உள்ளனர். ஜனவரி 05 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த இக்கப்பல் உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அவுஸ்திரேலியாவில் சுற்றுலா பயணத்தை நிறுத்தியது. உருவாகியுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு கப்பலை பொறுப்பேற்க எந்தவொரு துறைமுகமும் முன்வரவில்லை. இதன் காரணமாக இத்தாலி…

Ø  நிதியத்தின் வைப்பு மீதி 380 மில்லியனாக அதிகரிப்பு இரண்டு நாட்களில் கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 314 மில்லியன் ரூபாவாக இருந்த மீதி தற்போது 380 மில்லியனாக அதிகரித்துள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெறும தனது அமைச்சுப் பதவிக்கு உரித்தான ஏப்ரல் மாத சம்பளத்தையும் அமைச்சர் காமினி லொக்குகே 10 மில்லியன் ரூபாவையும் இன்று (06) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் அன்பளிப்பு செய்தனர். தேசிய லொத்தர சபை 25 மில்லியன் ரூபாவையும், தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியல் சங்கம் ஆகியன தலா 2.5 மில்லியன் ரூபாவும், காணி மறுசீரமைப்பு…

கஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு

Ø  வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராட்டு Ø  நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் குறித்த பரிசோதனை Ø  பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சேவைக்கு பாராட்டு Ø  இந்தியாவிலிருந்து பல்வேறு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தருவிப்பு Ø  நாட்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைமை Ø  தொழில் நிமித்தம் வருகை தந்து, கிராமங்களுக்கு செல்ல முடியாதிருக்கின்றவர்கள் குறித்து கவனம் செலுத்துமாறு தொழில் வழங்குனர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள்…

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்பட்டது. இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 09 வியாழன் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 04 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். இன்று ஏப்ரல் 06 ஆம் திகதி திங்கள் முதல் 10 ஆம் திகதி வெள்ளி வரையான வேலை நாட்கள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வீடுகளில் இருந்து…

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

நாளை ஏப்ரல் 06 ஆம் திகதி திங்கள் முதல் 10 ஆம் திகதி வெள்ளி வரையான வேலை நாட்கள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்திய வராமும் வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல்…

2961 கைதிகள் பிணையில் விடுதலை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று (04) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அவர்கள் சிறைச்சாலை வளாகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது கைதிகள் அவரிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரில் நிவாரணம் வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பரிந்துரையை ஜனாதிபதியின் செயலாளரிடம் முன்வைத்திருந்தது. தண்டப் பணம் செலுத்த முடியாமை, பிணை வழங்கப்பட்டிருந்த போதும் பிணை நிபந்தனைகளை முழுமைப்படுத்த முடியாமை, மிகவும் சிறிய குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள், தண்டனைக் காலத்தில் பெரும் பகுதியை நிறைவுசெய்துள்ள, மிகவும் பாரதூரமான சுகாதார காரணங்களினால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறையிலிருப்பவர்கள் மற்றும் பிணை வழங்குதல் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படாத சிறைக் கைதிகள் தொடர்பில் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டதாக ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்தார். சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கான இட வசதி பத்தாயிரம் பேருக்கானதாகும். எனினும் இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிறைக் கைதிகளாக உள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நிலைமைகளும் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணத்தை மீறாது, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றி சிறந்த முறையில் சமூகத்தில் வாழ வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.