Month: ஏப்ரல் 2020

கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் முறையாக முன்னெடுப்பு : அனைத்து தீர்மானங்களும் நிபுணர்களின் ஆலோசனையுடன்

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான  கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய வைரஸின் உலகளாவிய பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினார். நாட்டினுள் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளின் காரணமாக இந்த சுகாதார பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச் செல்ல இடமளிக்காது முகாமைத்துவம் செய்ய முடிதுயுமாக இருந்ததாக இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. கொரோனா நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ள சில மாவட்டங்கள் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் தற்போது இல்லை. எதிர்வரும் புத்தாண்டு காலம் நிறைவுறுவதுடன் இடர் நிலைமை இல்லாத மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே புத்தாண்டு நிறைவுறும் வரை கொரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலைமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாட இணக்கம் காணப்பட்டது. ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அரசாங்கம் இதுவரையில் செயற்பட்டதைப் போன்று வைரஸை ஒழிக்க தொடர்ந்தும் சுகாதார, மருத்துவ, பாதுகாப்பு மற்றும் சட்டம் உள்ளிட்ட குறித்த துறைகளின் நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். நோயின் உலகளாவிய பரவலை கண்காணித்து உலக சுகாதார தாபனம் அவ்வப்போது செய்யும் பரிந்துரைகளை ஆராய்ந்து பொருத்தமான வகையில் பின்பற்றுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் முறையாக தொடர்ந்தும் முன்னெடுக்க கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. தொற்றுக்குள்ளானவர்கள், தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட ஏனைய நாடுகளும் இத்தகைய நடைமுறைகளையே பின்பற்றியுள்ளன. தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை சரியாக இனம்காண முடிந்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, முன்னாள் ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் அதிகாரிகள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தின் தலைவர் ஜயன்த டி சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு எனக் கூறி நிதி திரட்டுவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன

Ø  நிதியத்தின் வைப்பு மீதி 314 மில்லியனாக அதிகரிப்பு கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு எனக் கூறி நிதி சேகரிக்கும் சில நிகழ்வுகள் குறித்த தகவல்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. நிதியத்திற்கு நேரடியாக பணம் மூலமாகவோ காசோலைகள் மூலமோ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வேறு வழிகளின் ஊடாக பங்களிப்பதை தவிர வேறு எவறுக்கும் அல்லது நிறுவனத்திற்கும் நிதியை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசாங்கம் “சுகாதார நோய்த்தடுப்புக்காக” அனைத்து மக்களையும் உட்படுத்தியுள்ளது. அவர்களின் உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் உற்பத்தி, விநியோகம் சுகாதார அதிகாரிகளினதும் தேர்தல் ஆணைக்குழுவின் சட்டதிட்டங்கள், அறிவுரைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இத்தகைய மோசடி நடவடிக்கைகள் குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார். 011 – 2354479 / 011 – 2354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும். வங்கிக்கு நேரடியாக செய்யப்பட்ட வைப்புகளுடன் இன்று (02) வரை நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டுள்ள தொகை 314.5 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. டெலிகொம் பொறியியலாளர்கள் நலன்பேணல் நிதியம் மற்றும் இலங்கை மின்சார சபையின் சுதந்திர பொறியியலாளர்கள் சங்கத்தினால் தலா ஒரு மில்லியன் ரூபாவும், காகில்ஸ் (சிலோன்) நிறுவனம் 50 மில்லியன் ரூபாவும் இன்று நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல்

Ø  வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு ஐதேக பாராட்டு Ø  மக்கள் வாழ்க்கைக்கு தடை ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகளை பேணுவது குறித்து இரு தரப்பும் கவனம் Ø  இரண்டு மணி நேரம் சுமுகமான சந்திப்பு கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும்  தலைமையில் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி ஜனாதிபதி அவர்கள் விரிவாக விளக்கினார். தற்போது வைரஸ் தொற்றுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நோய்த்தடுப்பு மத்தியநிலையங்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் அல்லது இதற்கு முன்னர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு மத்தியிலிருந்து அடையாளம் கண்டு கொண்டதும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். மக்கள் வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கு அத்தியாவசிய சேவைகள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறை மற்றும் விசேட செயலணி நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி அதன் தலைவரும் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான பசில் ராஜபக்ஷ அவர்கள் விளக்கினார். நாட்டில் இனம்காணப்பட்ட 65 லட்சம் குடும்பங்களில் 53 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் 5000 ரூபாவை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். வைரஸ் தொற்று பரவுவதை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்படக்கூடிய தடைகளை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இருதரப்பினதும் கருத்தாகவிருந்தது. இந்நிகழ்ச்சித்திட்டம் அரசியல் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதிலும் இரு தரப்பினரும் உடன்பட்டனர். நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் வீழ்ச்சியுறாது தொடர்ச்சியாக பேணுவதும் அரச ஊழியர்கள், வர்த்தகர்கள், பெருந்தோட்டத்துறை மக்கள் மற்றும் நாளாந்தம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் முகம்கொடுத்துள்ள கஷ்டங்கள் குறித்தும், அவற்றுக்கு வழங்க முடியுமான தீர்வுகள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர். மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பினரின் அர்ப்பணிப்பும் இரு தரப்பினரினதும் பாராட்டுக்குள்ளானது. கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் மாவட்ட மட்டத்தில் தமது கட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவூட்டுவதற்கும் உடன்பட்டதுடன், இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேல் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் மிகவும் சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் இடம்பெற்றது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவங்ச, பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, டலஸ் அழகப்பெரும ஆகியோரும் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி உப தலைவர் ரவீ கருணாநாயக, அர்ஜுன ரணதுங்க, ருவன் விஜேவர்த்தன, தயா கமகே, பாலித ரங்கேபண்டார, நவீன் திஸாநாயக, லக்ஷ்மன் விஜயமான்ன ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு டீ. லக்ஷ்மன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடல்…

கொவிட் 19 தொற்று பரவலுடன் உருவாகியுள்ள பொருளாதார நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (31) இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகளை சந்தித்தார். மத்திய வங்கியின் ஆளுநர், பிரதி ஆளுநர்கள், வங்கி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு பொறுப்பான உதவி ஆளுநர் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பணிப்பாளர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் நிதி திரவத்தன்மையை பேணுதல் மற்றும் நிதி வசதிகளுக்கான ஏற்பாடுகள் குறித்த வழிநடத்தல் முகாமைத்துவத்திற்காக இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது. அந்நியச் செலாவணி வரவு செலவுத்திட்டம் மற்றும் வெளி கையிருப்பு முகாமைத்துவத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள் இலங்கையின் பிணைமுறிகளில் முதலீடு செய்வோரிடம் அதிகபட்ச நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கி அதிகாரிகளிடம் குறிப்பிட்டார். அனைத்து வங்கிகளையும் திறந்து வைக்குமாறு மத்திய வங்கிக்கு அறிவித்த ஜனாதிபதி அவர்கள், கொவிட் 19 பிரச்சினைக்கு பின்னரான காலத்திற்குறிய பொருளாதார மூலோபாயங்களை வகுக்குமாறும் பணிப்புரை வழங்கினார். திறைசேறி செயலாளரும் கலந்துரையாடலில் பங்குபற்றினார்.

உலக உதவி நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்

சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் செய்கின்றவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் கடன், பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளில் தங்கியுள்ள பொருளாதாரங்களை கொண்டுள்ள இலங்கை போன்ற இடர்நிலைக்கு உள்ளாகியுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி அவர்கள், கடன் தவணை உரிமையை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், உலக வங்கியின் தலைவர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மற்றும் இருதரப்பு கடன் வழங்கும் முன்னணி நாடுகளின் தலைவர்களின் இணக்கத்தை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும். இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 06, திங்கள் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிககு மீண்டும் அமுல்படுத்தப்படும். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக…