Month: மே 2020

ஜனாதிபதி வரலாற்று முக்கியத்துவமிக்க சோமாவதி புண்ணிய பூமிக்கு விஜயம்

மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி பொலன்னறுவையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோமாவதி விகாரையில் இன்று (30) முற்பகல் இடம்பெற்ற சமயக் கிரியைகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்குபற்றினார். சோமாவதி புண்ணிய பூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார். சோமாவதி விகாரையில் இடம்பெற்ற பூஜை நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். சோமாவதி புண்ணிய பூமி பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வெள்ள நிலைமைக்கு உட்படுவதுண்டு.…

நாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்

நாளை, மே 30 சனிக்கிழமை நுவரெலியா மாவட்டத்தில் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். நேற்று 28, வியாழன் அறிவிக்கப்பட்டவாறு மே 31, ஞாயிறு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். ஜுன் 01 திங்கள் முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் விதம் குறித்து நேற்றைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட விபரங்களில் மாற்றங்கள் இல்லை.

புதிய இந்திய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இலங்கையின் இராஜதந்திர உறவுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கடந்த மே 14 ஆம் திகதி வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக அவர் தனது நற்சான்றுப் பத்திரத்தை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார். சந்திப்பின் பின் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை கண்டறிந்து இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான இருநாடுகளினதும் அர்ப்பணிப்பை…

கொவிட் -19 மற்றும் அதற்கு பின்னரான காலங்களில் அபிவிருத்திக்கான நிதியுதவி குறித்த உயர்மட்ட நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை

கனடா, ஜமைக்கா மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆகியோரால் 2020 மே 28 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட கொவிட் –19 மற்றும் அதற்கு பின்னரான காலங்களில் அபிவிருத்திக்கான நிதியுதவி குறித்த உயர்மட்ட நிகழ்வில் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை இந்த கூட்டத்தை ஒன்றுகூட்டிய கனடா மற்றும் ஜமைக்காவின் பிரதமர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முதலாவதாக, இந்த அழிவுகரமான வைரஸால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும்…

அமைச்சர் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை…

காலம்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (28) முற்பகல் இறுதி மரியாதையை செலுத்தினார். அமைச்சரின் பூதவுடல் பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டிலிருந்து இன்று முற்பகல் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. பாராளுமன்ற வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற…

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

ஜுன் 06 சனிக் கிழமை வரையிலும் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஊரடங்கு சட்டம் பின்வருமாறு அமுல்படுத்தப்படும். மே 31 ஞாயிறு, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். ஜுன் 01 திங்கள் முதல் ஜுன் 03 புதன் வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும். ஜுன் 04 வியாழன் மற்றும் ஜுன் 05 வெள்ளி…

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி  1,182 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,182 மில்லியனாக அதிகரித்துள்ளது. சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் ஒரு லட்சம் ரூபாவையும், பிலியந்தலை ஹெடிகம, ஸ்ரீ சுதர்ஷனாராமாதிபதி சங்கைக்குரிய நாகியாதெனியே பேமரத்ன தேரர் ஒரு லட்சம் ரூபாவையும், பிலியந்தலை வேவல, உத்யோகிபுர, ஸ்ரீ விஜயாராமாதிபதி மேல்மாகாண தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய வேபன இர ஹேமாலோக நாயக தேரர் ஒரு லட்சம் ரூபாவையும் நிதியத்திற்கு…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை…

கொவிட் 19 நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் நிர்க்கதியாகவுள்ள அல்லது பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக புதிய முறைமையொன்று தயாரிக்கப்படவுள்ளது. நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது புதிய நிகழ்ச்சித்திட்டம் குறித்து தீர்மானிக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் ஜுன் மாத விமானப் பயணம் அதற்கு ஏற்ப திட்டமிடப்படும். நோய்த்தொற்று உலகளாவிய ரீதியில் உள்ள காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை  நாட்டுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின்…

ஆகஸ்ட் 01 முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைக்காக விமான நிலையத்தை திறக்க முன்மொழிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே அனைத்து நடவடிக்கைகளும் ஏப்ரல் 30க்கு பின்னர் சமூகத்தில் கொவிட் தொற்றுடையவர்கள் எவரும் இனம்காணப்படவில்லை முதலில் சுற்றுலா அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளை திறக்க நடவடிக்கை                                                       கொவிட் ஒழிப்பு…

நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 வரை…

நாளை, 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளை மேற்கொள்ளும் போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று நீக்குதல், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை…