Month: மே 2020

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் எமது நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பிருந்து புதிய பிறை பார்த்து கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இஸ்லாமிய சமய நாட்காட்டியில் ஒரு முக்கிய பண்டிகையாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான அஸ் ஸவ்ம் அல்லது ரமழான் நோன்பு உலகாயத ஆசைகளில் இருந்து விலகி ஒரு தூய முன்;னுதாரணமான வாழ்வொழுங்கைப் பின்பற்றி வாழ்வதன்…

கொவிட் பிரச்சினைக்கு மத்தியில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இந்திய-இலங்கை தலைவர்கள் இணக்கம்

இன்று (23) முற்பகல் சுமுகமான தொலைபேசி உரையாடலொன்றில் ஈடுபட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான உறவுகளையும் கொவிட் பிரச்சினைக்கு மத்தியிலும் மேலும் மேம்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர். ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இந்திய பிரதமருடன் உரையாடிய ஜனாதிபதி அவர்கள் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி கருத்துக்களை பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தற்போதைய கஷ்டமான காலகட்டத்தில் இலங்கைக்கு செய்த உதவிகள் தொடர்பில் பிரதமர்…

செவ்வாய் முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகிறது

மே 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும். மே 26 செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும். நாளை, 24 ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி

தேசிய கல்விக் கொள்கை விரைவில் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் போதைப் பொருள் பிரச்சினையை ஒழிக்க அதிகபட்ச நடவடிக்கை பௌத்த ஆலோசனைக் குழுவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிவடைவது குறித்து பல்வேறு தரப்பினர் விடயங்களை முன்வைத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த…

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். மே 24, ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை 23, சனி இரவு 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 26, செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும். இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்…

இலங்கை போக்குவரத்து சபையை கட்டியெழுப்ப ஜனாதிபதியிடமிருந்து முன்மொழிவுகள்

வீதி நெறிசலுக்கு தீர்வாக Park and Drive முறைமை பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து பாடசாலை பஸ் சேவை மேம்படுத்தப்படும் ஊழியர்களை வலுவூட்டுவதற்கு வீண்விரயம் மற்றும் திருட்டுக்கு முற்றுப்புள்ளி இலங்கை போக்குவரத்து சபையை, இலாபமீட்டும் முன்னணி நிறுவனமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்கு பதிலாக திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும் அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை  மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்து சபையின் தற்போதைய நிலை…

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி  1136 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1136 மில்லியனாக அதிகரித்துள்ளது. Canowin Hotel @ SPAS (Pvt) Ltd நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளதுடன், அதற்கான காசோலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. Mascons (Pvt) Ltd நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவையும், Built Element…

இடைத்தரகர்களை நீக்கி மருந்து விநியோகத்தை முறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனங்கள் இரண்டினது தலைவர்களுடன் மருந்துப் பொருட்கள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பில் கேட்டறிந்தார். நாட்டினுள் மருந்து விநியோகம் எப்படி இடம்பெறுகிறது என ஜனாதிபதி அவர்கள் வினவியதற்கு பதிலளித்த அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன மூன்று முறைமைகளின் கீழ் மருந்து விநியோகம் இடம்பெறுவதாகவும் அவை அரச துறை உற்பத்தி, தனியார் துறை உற்பத்தி மற்றும் இரு…

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் ‘இடுகம’ என்ற சின்னத்துடன் முன்னோக்கி…

‘கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் தற்போது ‘இடுகம‘ (செய்கடமை) என்ற சின்னத்துடன் செயற்படுத்தப்படுகிறது. இதற்கு ‘இடுகம– கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் என பெயரிடப்பட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு அன்பளிப்புகளை மேலும் கவரும் வகையில் இச்சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் கடந்த மார்ச் 23ஆம் திகதி இந்நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி நிதியம் அதற்காக 100 மில்லியன் ரூபாவை வழங்கியது. கொவிட்-19 நோயத்தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்ததாக…

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1128 மில்லியனாக அதிகரிப்பு

விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் பணிக்குழாம் அன்பளிப்பு செய்த 2,205,448.89 ரூபா இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சர் டலஸ் அழகப்பெறும அவர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார். அமைச்சர் மஹிந்த அமரவீர தனது மே மாத சம்பளத் தொகையான 66000 ரூபாவை ஜனாதிபதியிடம் கையளித்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் அன்பளிப்பு செய்த 1,326,449.00 ரூபா சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.…