Month: மே 2020

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு ஏற்ப வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு வழங்கப்படும் அனுமதி ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டுமே ஏற்புடையதாகும் என அறியத்தரப்படுகின்றது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு இது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது கிராமம் இடர் வலயமாக குறிப்பிடப்பட்டிருந்தால் அத்தகைய வலயங்களுக்குள் பிரவேசிக்கவோ அல்லது அங்கிருந்து வெளிச் செல்லவோ எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி வரலாற்று முக்கியத்துவமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் இடம்பெற்ற சமயக் கிரியைகளில் ஜனாதிபதி பங்கேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி நேற்று (02) பிற்பகல் அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் இடம்பெற்ற சமயக் கிரியைகளில் பங்குபற்றினார் அநுராதபுரம் புனித பூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் அடமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். ருவன்வெலி மகா சேய வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற பூஜையிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு  நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி…

நாளாந்த இயல்புவாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருதல் மே 11 ஆம் திகதி ஆரம்பம்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருதல் மே 11 திங்கள் ஆரம்பமாகும். இம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை தொடருதல் உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் திங்கள் முதல் திறக்கப்பட வேண்டும். சேவைகளின் தேவையை கவனத்திற் கொண்டு அதற்குத் தேவையான திட்டங்களை இப்போதிருந்தே தயாரிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களை திறந்து பணிகளை…

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என ஜனாதிபதி எதிர்க்கட்சிக்கு தெரிப்பு

எதிர்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் கடந்த 26ஆம் திகதி தனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒன்றிணைந்த அறிக்கைக்கு நேற்று முன்தினம் (29) பதிலளித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாதென தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள தரப்பினர் தேர்தல் நடத்தத் தேவையில்லை என சிந்திப்பதாக தெரிகிறது என்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கையை பாதுகாப்பதற்கு முழு அரச இயந்திரமும் அர்ப்பணிப்புடன் உள்ள…

எதிர்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் கடந்த 26ஆம் திகதி தனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒன்றிணைந்த அறிக்கைக்கு நேற்று முன்தினம் (29) பதிலளித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாதென தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள தரப்பினர் தேர்தல் நடத்தத் தேவையில்லை என சிந்திப்பதாக தெரிகிறது என்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கையை பாதுகாப்பதற்கு முழு அரச இயந்திரமும் அர்ப்பணிப்புடன் உள்ள…

ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ அவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மங்கள சமரவீர கடந்த 28ஆம் திகதி தனக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு தனது செயலாளரின் மூலம் இன்று (30) பதில் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். திரு. மங்கள சமரவீரவின் கடிதம் பல்வேறு பிழையான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகையதொரு கடிதம் அனுப்பிவைக்கப்படுவது கவலைக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ‘உருவாகியுள்ள பிரச்சினையை அரசியலமைப்புக்கு அமைவாக தீர்ப்பதற்கும் அரச…

ஜனாதிபதியின் மேதினச்  செய்தி

கொவிட் 19 நோய்த்தொற்றின் காரணமாக நாடு முகம்கொடுத்துள்ள சவால்களுக்கு மத்தியில் பெரும் அர்ப்பணிப்புகளை செய்து வரும் உழைக்கும் மக்களுக்கு எனது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்துவதற்கு இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தை சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றேன். வரலாறு நெடுகிலும் நாம் முகம் கொடுத்த, வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் நேரடி பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களும் முன்னிற்பவர்களும் நாட்டின் உழைக்கும் மக்களாகும். கடந்த காலத்தின் அனைத்து கஷ்டமான சந்தர்ப்பங்களையும் உழைக்கும் மக்களுடன் சேர்ந்து வெற்றிகொண்ட நாம் கொவிட்…