Month: ஜூன் 2020

காணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். காணிப் பதிவின்போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்யும்…

மதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு

மதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார். சேவைப்பிரமாணத்தை தயாரிக்கும் பணிகளை விரைவுப்படுத்தவும் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிறுவன மட்டத்தில் தீர்வுகளை கண்டறிவதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். இலங்கை மதுவரி திணைக்களத்தின் தொழிற்சங்க கூட்டமைப்புடன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பதிவு…

தனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு

இரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்… கல்விச் சேவை வரியை திருத்துவது குறித்து கவனம்…. சுகாதார பரிந்துரைகளை கடைப்பிடித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க அனுமதி… தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக அகில இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் முன் வைத்த ஆலோசனைகள் பலவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டார். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கற்பித்த தனியார் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 250 ஆக மட்டுப்படுத்துவது கடினம் என்று…

சட்ட பரிந்துரைகளுக்கேற்ப ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்- ஜனாதிபதி மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல்  

பிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட ஆலோசனைகளைப் பெற்று வைப்பாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். ஜனாதிபதி அலுவலகம், மத்திய வங்கி, திறைசேரி மற்றும் வைப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவொன்றை அமைத்து எதிர்கால செயற்பாடுகளை கண்காணிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். ETI மற்றும் த பினான்ஸ் வைப்பாளர்களுக்கு நிதியை மீள வழங்கும் வழிகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி…

“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பார்வையிட்டனர்

“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் சென்றிருந்தனர். கொழும்பு One Galleface – PVR திரையரங்கில் நேற்று (28) பிற்பகல் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. சரத் கொத்தலாவல மற்றும் குமார திரிமாதுர ஆகியோரின் இணை  இயக்கத்தில் உருவான “த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, ரவிந்திர குருகே மற்றும் எச்.டி.பிரேமசிறி ஆகியோர் ஆவர். ஜூலை 02ஆம் திகதி முதல்…

MCC மீளாய்வு அறிக்கை மூன்று இணையத்தளங்களில்

“மிலேனியம் சவால்” MCC தொடர்பான மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை கீழ் வரும் இணையத்தளங்களின் ஊடாக தற்போது பொதுமக்கள் பார்வையிட முடியும். www.president.gov.lk Link 1: https://www.president.gov.lk/si/ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட-mcc-மீளாய்வு அறிக்கை Link 2: https://www.president.gov.lk/wp-content/uploads/2020/06/இறுதி அறிக்கை.pdf www.presidentsoffice.lk Link 1: https://www.presidentsoffice.gov.lk/index.php/2020/06/25/mcc-review-final-report-presented-to- president-2/?lang=si www.pmdnews.lk Link 1: http://www.pmdnews.lk/si/mcc-review-final-report-presented-to-president/ MCC திட்டத்தை மீளாய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், 2020 ஜனவரி 01ஆம் திகதி நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தார்.…

ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது

இன்று ஜூன் (28) ஞாயிறு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசை தடுக்கும் வகையில் மார்ச் 20ஆம் திகதி முதன்முதலாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், ஜூன் 13ஆம் திகதி முதல் தினந்தோறும் இரவு 12.00மணி முதல் அதிகாலை 4.00 மணி வரையில் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறு வியாபார துறையினரின் சுதந்திரமான முன்னேற்றத்திற்கு இடமளியுங்கள் – ஜனாதிபதி

அரசாங்கம் தேவையற்ற வகையில் தலையிடுவது சிறியளவிலான வியாபாரத் துறைகளின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையக் கூடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அரசாங்கம் செய்ய வேண்டியது வசதிகளை வழங்குவதும் அபிவிருத்திக்கு உதவுவதுமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அழகுக் கலை, சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். அழகுக் கலை, சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழிற்திறனை மேம்படுத்துவதும்,…

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட MCC மீளாய்வு இறுதி அறிக்கை மக்கள் பார்வைக்கு

“மிலேனியம் சவால்” MCC மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து குழுவின் அறிக்கை மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. நிபுணர் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், நபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள், முன்மொழிவுகளை ஆராய்ந்து 06 மாதகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் MCC உடன்படிக்கைகளில் இரண்டு…

இலாபமீட்டுவதற்காக வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு நிறுவனத்திற்கு (Lanka salt Ltd) ஜனாதிபதி ஒரு வருடகால அவகாசம்

2018ஆம் ஆண்டு முதல் நட்டத்தில் இயங்கிவரும் வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு நிறுவனத்திற்கு (Lanka salt Ltd) இலாபமீட்டுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஒரு வருடகால அவகாசம் வழங்கியுள்ளார். வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு நிறுவனத்தின் 2016ஆம் ஆண்டில் இலாபம் 70 கோடி ஆகும். 2017ஆம்  ஆண்டாகும்போது இலாபம் 32 கோடிகளாக குறைவடைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு 28 இலட்சங்களாகவும் 2019ஆம் ஆண்டு ஒரு கோடியே தொன்ணூற்றி ஒரு இலட்சமாக இந்நிறுவனம் நட்டமடைந்துள்ளது. மூன்று வருட காலத்திற்குள் ஏற்பட்ட நட்டத்தை…