Month: ஜூன் 2020

டெங்கு ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் விசேட கவனம்

சுற்றுச்சூழல் சுத்தத்திற்கு முன்னுரிமை சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை டெங்கை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சி தலைவர்களுக்கு சுகாதார குழுக்களை உடனடியாக கூட்டுமாறு பணிப்புரை நோயாளிகள் கண்டறியப்படும் இடங்கள் குறித்து உடனடி கவனம் தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை குறைந்துவரும் நிலையில் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சி தலைவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை…

முன்னாள் ஆளுநர் மாஷல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை செலுத்தினார்

ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர், ஜனாதிபதி சட்டத்தரணி மாஷல் பெரேரா அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (01) இறுதி மரியாதை செலுத்தினார். பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், நினைவுப் புத்தகத்தில் அனுதாபச் செய்தியொன்றையும் பதிவுசெய்தார். மாஷல் பெரேரா அவர்களின் மனைவியான திருமதி தயாபந்து, மகன் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி டிலான் பெரேரா மற்றும் மகள் கிசோலி ஆகியோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக பதவிப் பிரமாணம்

சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி புதிய அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மறைவையடுத்து இந்த அமைச்சுப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களும் இதன் போது பிரசன்னமாகியிருந்தார்.