Month: ஜூலை 2020

ஜனாதிபதியினால் வெல்லஸ்ஸ உரிமையை பாதுகாப்பதற்கு வேலைத்திட்டம்

கும்புக்கன் நீர் வழங்கல் செயற்திட்டம் நடைமுறைக்கு… புண்ணிய தளங்களின் வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளுக்கு அல்லது தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளுக்கு அழிவை ஏற்படுத்துவதற்கு எவர் ஒருவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அனைத்து வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் பாதுகாப்பதுடன், வெல்லஸ்ஸ உரிமையை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (31) மொனராகலை வெல்லவாய பிரதான பேருந்து…

விவசாயத்தை கைவிட்டவர்களை ஈர்க்கும் வகையில் விவசாயப் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்

        –  ஜனாதிபதி மொனராகலையில் தெரிவிப்பு…  இளைஞர் தலைமுறை விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு செல்வதை நிறுத்தி, விவசாயத்துறைக்கு அவர்களை ஈர்க்கும் வகையில் விவசாயப் பொருளாதாரம் ஒன்று மொனராகலை மாவட்டத்தில் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். சிறிய நிலப்பரப்பில் குறைந்த உற்பத்திச் செலவுடன் உயர் தொழிநுட்ப முறையை பயன்படுத்தி அதிக தரம் வாய்ந்த, கூடுதலான அறுவடையைப் பெறக்கூடிய விவசாயப் பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவது தனது கொள்கையாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பொதுஜன…

கிராமங்களுக்கு வருகை தந்து மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கும் ஜனாதிபதிக்கு மக்களின் பாராட்டு

கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னெடுத்து வருகின்ற புதிய வழிமுறைக்கு மக்கள் தமது பாராட்டை தெரிவித்தனர். பொதுக் கூட்டத்திற்கு மாற்றமாக பின்பற்றிவரும் புதிய வழிமுறையின் மூலம் வீண்செலவுகள், பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவைகளால் சூழல் மாசடைவதும் தடுக்கப்பட்டுள்ளது. உண்மையான நிலையை ஜனாதிபதி அவர்கள் அறிந்துகொள்வதோடு அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதும் பாராட்டுக்குரியது என்று மக்கள் தெரிவித்தனர். பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அபேட்சகர்களின்…

‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1549  மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1549 மில்லியனாக அதிகரித்துள்ளது. ஸ்ரீ நாகல ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய வரத்தன தம்மானந்த தேரர் 100,000 ரூபாவையும் திம்புல ஆரன்ய சேனாசனாதிபதி சங்கைக்குரிய தொலுவே தம்மரத்தன தேரர் 25,000 ரூபாவையும் கொட்டவகம ஸ்ரீ போதிராஜாராம விகாராதிபதி சங்கைக்குரிய யட்டலமத்தே தம்மிஸ்ஸர தேரர் 60,000 ரூபாவையும் வடமேல் மாகாண சபையின் அரச அதிகாரிகள் 22,686,240.82 ரூபாவையும்…

வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளையும் பெருமைகளையும் பாதுகாக்கக்கூடிய களனி நகரத்தை கட்டியெழுப்புவேன்

 – ஜனாதிபதி தெரிவிப்பு…. போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழித்து வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளையும் பெருமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இன்று (30) கம்பஹா மாவட்டத்திற்கு இரண்டாம் தடவையாகவும் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், களனி ரஜமகா விகாரை பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இவ்வாறு…

தேர்தல் பிரச்சாரத்திலும் அரசியல் கலாசாரத்திலும் புதிய மாற்றம்.

மக்கள் ஜனாதிபதிக்கு பாராட்டு குறுகிய காலப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திலும் அரசியல் கலாசாரத்திலும் மேற்கொண்டுள்ள மாற்றத்திற்கு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் மோதல்கள் இல்லாத புதிய தேர்தல் பிரச்சார போக்கொன்று நாட்டில் உருவாகியுள்ளது. அது ஜனாதிபதி தேர்தலில் இருந்து இது வரை அரச தலைவராக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளின் மகிழ்ச்சியான பெறுபேறாகும் என மக்கள் தெரிவித்தனர். பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும்…

அரச சேவையில் ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி

ஜனாதிபதி களுத்துறையில் தெரிவிப்பு… ஊழல், மோசடிகளை ஒழித்து வினைத்திறனான அரச சேவையை தாபிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். 15 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அரச சேவையில் உள்ளனர். எனினும் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து நாளாந்தம் தகவல்கள் வருகின்றன. இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடியை ஒழித்து மக்களுக்காக அர்ப்பணித்த அரச சேவை ஒன்றை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில்…

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றுவேன்

– ஜனாதிபதி குருணாகலையில் தெரிவிப்பு… மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி வேண்டுகோள்… குழுவொன்றை அமைத்து காணி பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை… “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அதற்குத் தேவையான பாராளுமன்ற அதிகாரத்தையும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கான மக்கள் ஒத்துழைப்பையும் வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (26)…

முன்பள்ளி பாடசாலைகள் முறைமை அமைச்சு ஒன்றின் கீழ்

முன்பள்ளி பாடசாலைகள் முறைமையினை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வந்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக ஜனாதிபதி அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்பள்ளி பாடசாலைகளில் ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. சென்ற வியாழக்கிழமை காலியில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் தமது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடினர். இது குறித்து கவனம் செலுத்திய…

தொல்பொருளியல் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கவனம்…

சட்டத்தை ஆராய்வதற்கு குழுவொன்று நியமனம்… நிதி ஏற்பாடுகளை அதிகரிப்பதற்கும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கும் நடவடிக்கை.. கலந்துரையாடி பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு பணிப்புரை… வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தொல்பொருள்களை கொண்டு வருவதற்கு முன்மொழிவு.. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை பாதுகாக்கும் யுகத்திற்கு மகாசங்கத்தினர் ஆசிர்வாதம்.. தொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதி செய்வதற்கு தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார். இச்சட்டம் எவ்வாறு திருத்தப்பட வேண்டுமென்பது குறித்து ஆராய்வதற்கு மகாசங்கத்தினர்…