Month: ஆகஸ்ட் 2020

வறுமையை ஒழிப்பதற்காக குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் செப்டெம்பர் 02இல் ஆரம்பம்

தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம். வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 02ஆம் திகதி ஆரம்பம். அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு. எவ்வித கல்வித் தகைமையும் இல்லாத அல்லது க.பொ.த சாதாரண தரத்தை…

“பின்னோக்கி செல்ல மாட்டேன் எடுத்த தீர்மானங்களை நிலையான கொள்கையிலிருந்து செயற்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைப்பேன்”

                 –  வாழ்க்கைச் செலவு உப குழுவிற்கு ஜனாதிபதி தெரிவிப்பு. மரக்கறி, தேங்காய் நேரடியாக நுகர்வோரின் கைகளுக்கு…. பொருளாதார மத்திய நிலையங்களை சரியான பொறிமுறையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை… முன்வைத்த காலை பின்வைக்காது, எடுத்த தீர்மானங்களை நிலையான கொள்கையிலிருந்து செயற்படுத்தி வாழ்க்கைச் செலவை குறைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். உள்நாட்டு விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாக மஞ்சல்…

இரண்டு மாகாண ஆளுநர்கள் இடமாற்றம்

வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம்.முஸம்மில் அவர்கள் ஊவா மாகாண ஆளுநராக இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகொல்லுரே அவர்கள் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.  

அல்தயர் வதிவிட மற்றும் வர்த்தக கட்டிடத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்

பேர வாவிக்கு முன்னாள் நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்தயர் வதிவிட மற்றும் வர்த்தக கட்டிடத்தை நேற்று (31) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பார்வையிட்டார். இக்கட்டிடத்தின் பணிகள் நிறைவுபெற்றதும் கொழும்பில் உள்ள உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றாக அல்தயர் கட்டிடமும் இருக்கும். பேர வாவியுடன் இணைந்ததாக இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இக்கட்டிடத்தின் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்டிடத்தின் நிலமாடி 40,000 சதுர அடிகளை கொண்டதாகும். 404 அதி சொகுசு வீடுகளையும் உயர்தரமான கடைத் தொகுதிகளையும் இது…

கோட்டே ரஜமகா விகாரை வருடாந்த பெரஹரவின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

வரலாற்று முக்கியத்துவமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விகாரையின் வருடாந்த ஸ்ரீ தலதா மகா பெரஹர நேற்று (29) இரவு வீதி உலா வந்தது. விகாரைக்கு புனித தந்தம் அடங்கிய பேழையை கொண்டு வரும் நிகழ்வு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் அனுசாசன உரையை நிகழ்த்தினார். விகாராதிபதி சங்கைக்குரிய அளுத்நுவர அனுருத்த தேரர் சமயக்…

சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி லங்காகமயில் தெரிவிப்பு

நெலுவ – லங்காகம வீதி புனர்நிர்மாணப் பணிகள் 90 நாட்களில்… பாதுகாக்கப்பட்ட வனப் பூங்காவிற்கும் சுற்றாடல் முறைமைக்கும் எவ்வித பாதிப்பையும் செய்யக் கூடாது… வாரத்தில் 7 நாட்களும் பயணிப்பதற்கு பஸ் போக்குவரத்து… லங்காகம சங்கிலிப் பாலம் நீக்கப்பட்டு நிலையான பாலம்… வனப் பூங்காவிற்கு ஒரு வீட்டுக்கு 03 மரக்கன்றுகள் வீதம் 2100 கன்றுகள்… சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தனது எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நெலுவ – லங்காகம…

கொவிட் 19 நிதியத்திற்கு ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கி 500,000 அமெரிக்க டொலர்கள் அன்பளிப்பு….

ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கி இட்டுகம கொவிட் 19 சுகாதார சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 500,000 அமெரிக்க டொலர்களை (92.5 மில்லியன் ரூபா) நிதியை அன்பளிப்பு செய்துள்ளது. ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கியின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு.பிங்கு மால் தெவரதந்ரீ  அதற்கான காசோலையை நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தார். இலங்கையில் கொவிட் 19க்கு எதிரான நடவடிக்கைகளிற்கு தமது பங்களிப்பை வழங்கி இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் வங்கி அன்பளிப்பை மேற்கொண்டுள்ளது.…

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதிக்கு அணிவிப்பு….

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது. இலங்கை முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உப்புல் பெரேராவினால் முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதி அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. உலகப் போரில் உயிரிழந்த படை வீரர்களை நினைவுகூர்ந்து இலங்கை முன்னாள் படை வீரர்களின் சங்கம் 1944ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பொப்பி மலர் தினத்தை ஏற்பாடு செய்து…

கடல் உணவுகள் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைப்பதற்கு ஜனாதிபதி திட்டம்….

நாட்டுக்கு அவசியமான கப்பல்களை தயாரிக்கும் பணிக்கு உள்நாட்டு நிறுவனங்கள்… நன்னீர் மீன் உற்பத்தி மூலம் கிராமிய மக்களின் புரத தேவை நிறைவு செய்யப்படும்… அலங்கார மீன் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும்… செயற்கை மீன் இனவிருத்தி மத்திய நிலையம் கடலுக்கு அருகில்… கடல்சார் உணவு இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைக்கக்கூடிய பல்வேறு விடயங்களை திட்டமிட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். மீன், கருவாடு, மாசி மற்றும் டின்மீன் இறக்குமதிக்காக வருடாந்தம் அரசு சுமார் 500…

கிராமத்துக்குள் வரும் யானைகளை காட்டுக்கு திருப்பி அனுப்பும் பொறிமுறை ஒன்றை உருவாக்கவும்-ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

காட்டு யானைகள் கிராமங்களுக்கு வருவதற்கு பதிலாக காட்டுக்கே திருப்பி அனுப்பக்கூடிய பொறிமுறை ஒன்றை தயார் செய்து யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயுள்ள மோதலுக்கு இரண்டு வருடங்களுக்குள் நிலையான தீர்வொன்றை வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். பல்வேறு மாவட்டங்களில் மக்கள் முகங்கொடுத்து வருகின்ற காட்டு யானைகள் கிராமங்களுக்கு வரும் பிரச்சினை பற்றி சுமார் 40 வருட காலங்களாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. பல்வேறு தீர்வுகளை செயற்படுத்தினாலும் பிரச்சினை தீரவில்லை. மனிதர்களையும் யானைகளையும் பாதுகாக்கக்கூடிய உடனடி மற்றும்…