Month: செப்டம்பர் 2020

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் பேண்தகு முகாமைத்துவத்திற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளோம் – ஐ நா உயிர் பல்வகைத்தன்மை மாநாட்டில் ஐனாதிபதி தெரிவிப்பு

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் பேண்தகு முகாமைத்துவத்திற்கும் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்  ஐ நா உயிர் பல்வகைத்தன்மை மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தார். இலங்கை மத்திய மலை நாடு, சிங்கராஜ மழைக் காடுகள் ஆகிய இரண்டு யுனெஸ்கோ இயற்கை மரபுரிமைகளின் தாயகமாக திகழ்கிறது. மேலும் எமது ஆறு இடங்கள் ஈர நிலம் பற்றிய ரம்சார் ஒப்பந்தத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எமது தனித்துவமான வளம் நிறைந்த உயிர் பல்வகைத்தன்மைக்கு பங்களிப்பு செய்யும் இந்த…

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை நடுநிலைமையை அடிப்படையாகக் கொண்டது

அபிவிருத்தி ஒத்துழைப்பு எமது முதலாவது முன்னுரிமை                                       ஜனாதிபதி புதிய தூதுவர்களிடம் தெரிவிப்பு “இலங்கை ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. எனவே எமது நாடு பல தரப்பினரையும் ஈர்த்துள்ளது. இந்த சூழ்நிலையில் இலங்கை நடு நிலைமையான வெளிநாட்டுக் கொள்கையை தெரிவு செய்துள்ளது. பரஸ்பர நன்மையுடன்கூடிய அபிவிருத்தி ஒத்துழைப்பு எமது முதலாவது முன்னுரிமையாகும். இந்நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இன்று (30) முற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள…

சேவை பரப்பை சரியாக விளங்கிக் கொண்டால், தபால் சேவைக்கு தேசிய பொருளாதாரத்தின் முக்கிய பங்குதாரராக ஆக முடியும்.  –   ஜனாதிபதி தெரிவிப்பு.

ஊடகவியலாளர்களுக்கு தொழிற் பயிற்சி நிலையம்… பத்திரிகை பேரவை சட்டத் திருத்தம்… சர்வதேச தபால் சேவை பற்றி கவனம் செலுத்தி வழங்க முடியுமான விரிவான சேவை வாய்ப்புகளை அறிந்துகொண்டால், இலங்கை தபால் சேவைக்கும் தேசிய பொருளாதாரத்தின் முக்கிய பங்குதாரராக விளங்க முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இலங்கை தபால் சேவைக்கு சொந்தமாக உள்ள பெருமளவு வளங்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலம் இலக்குகளை இலகுவாக அடைந்துகொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தபால் சேவைகள்…

தோட்ட மக்களுக்கு லயன் குடியிருப்புகளுக்கு அருகிலேயே புதிய வீடுகள்….

ஜனாதிபதி, பிரதமர் கவனம்…. தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும்போது லயன் குடியிருப்புகளை அண்மித்ததாக அவற்றை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் தோட்ட மக்களுக்காக 4,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரையில் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 669 ஆகும். உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்போது ஏற்படும் நடைமுறை பிரச்சினைகள் நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கு காரணமாகுமென அதிகாரிகள்…

சுற்றாடல் அழிவு தொடர்பான பொய்யான செய்திகளை சமூகமயப்படுத்த முயற்சி…   

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர், முன்னர் இல்லாத அளவில் சுற்றாடல் அழிக்கப்படுவதாக குறிப்பிடும் பொய்யான செய்திகளை பரப்புவதற்கு முயற்சிகள் எடுப்பது இனங்காணப்பட்டுள்ளது. காடுகளுக்கு தீயிட்டு அழிப்பதாகவும் இயற்கையாக காடுகளில் உள்ள மரங்களை வெட்டுவதாகவும் இந்த பொய்யான செய்திகளினால் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு முன்னர் எக்காலத்திலும் இவ்வாறான சுற்றாடல் அழிவுகள் நடைபெறவில்லை என்றும் அரசாங்கம் அவ்வாறன சட்ட விரோத செயல்களில் முன்னர் மௌனம் காப்பதாகவும் குறிப்பிட்டு இவ்வாறான செய்திகளை உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கின்றனர். இவ்வாறான செய்திகளில் முழுமையாக பொய்…

பாடசாலை மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் சீருடைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பாக ஜனாதிபதி அவதானம்.

உள்நாட்டில் தேசிய மற்றும் பௌத்த கொடிகளை உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிப்பு… எதிர்வரும் வருடத்திலிருந்து பாடசாலை மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் சீருடைகளுக்கு அவசியமான துணிகளை வழங்கும் பொறுப்பில் கூடிய வீதத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது அவதானத்தை செலுத்தியுள்ளார். பாரிய மற்றும் சிறியளவிலான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உயர் தரத்திலான துணி உற்பத்தியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இன்று (28) முற்பகல் தங்கொட்டுவ தொழிற்பேட்டை Dankotuwa Textile Mill…

மக்களை வாழ வைப்பது ஒரு போராட்டம். அப்பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்…

“கிராமத்துடன் கலந்துரையாடல்” ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி பதுளை, ஹல்துமுல்லையில் தெரிவிப்பு… அனைத்து வாய்மொழி ரீதியான உத்தரவுகளையும் சுற்றறிக்கை என கருத்திற்கொள்ளவும்… உத்தரவுகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை… 14 நாட்களுக்குள் சட்டம் செயற்படுத்தப்படும்… ஹல்துமுல்லை உட்பட பல பிரதேசங்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு… ப/குமாரதென்ன வித்தியாலயத்தின் அனைத்து குறைபாடுகளும் நிறைவு செய்யப்பட்டது…. மக்களின் பொது நலனுக்காக வழங்கப்படும் அனைத்து வாய்மொழி ரீதியிலான உத்தரவுகளையும் சுற்றறிக்கையாக கருதி செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை…

சமயத்தின் மீதும் அறநெறிகளின் மீதும் பற்றுகொண்ட ஆன்மீக பண்புகள் நிறைந்த தலைமுறையொன்று எதிர்காலத்திற்கு அவசியம்.  – ஜனாதிபதி

சமயத்தின் மீதும் அறநெறிகள் மீதும் பற்றுக்கொண்ட ஆன்மீக பண்புகள் நிறைந்த தலைமுறையொன்றை நாட்டின் பௌதீக அபிவிருத்தியுடன் இணைந்ததாக எதிர்காலத்திற்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இலங்கை நன்நெறிகளால் வளம்பெற்ற ஒரு நாடாக விளங்குவதற்கு பௌத்த சமயமும் ஏனைய சமயங்களும் போதிக்கும் சமய சகவாழ்வே காரணமாகும் என ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். அறநெறிப் பாடசாலைகள் மற்றும் பிரிவெனா கல்வியின் மேம்பாட்டின் ஊடாக ஒழுக்கப்பண்பாடான ஒரு பயணத்திற்கு பலமான அடித்தளத்தை இட முடியுமென்றும் ஜனாதிபதி…

எதிர்கால உலகிற்கும் பொருளாதாரத்திற்கும் மற்றும் அபிவிருத்திக்கும் பங்களிக்கக்கூடிய கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்

பல்கலைக்கழக பாடவிதானம் தொழிற்சந்தையை நோக்கமாகக்கொள்ள வேண்டும். தொழிநுட்ப விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழிநுட்ப பாடங்களுக்கு கூடிய அவதானம். எதிர்கால உலகிற்கு ஏற்ற பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பிரஜையை உருவாக்குகின்ற கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெளிவுபடுத்தினார். பல்கலைக்கழகங்கள், பட்டங்களை வழங்கக்கூடிய நிறுவனங்களாக மட்டும் இல்லாமல் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் அதேபோல் பட்டம் பெறுவோரும் அதன்மூலம் பயனை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார். நடைமுறை தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி,…

28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடல்…   

ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்பு… சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் மீளாய்வு… தேசிய வர்த்தக கொள்கை புதுப்பிப்பு… ஏற்றுமதி அபிவிருத்தி சபை 28 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் ஒன்றுகூடியது. 1979ஆம் ஆண்டில் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டது. ஏற்றுமதியாளர்களை வலுவூட்டி அத்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது அதன் நோக்கமாகும். கொள்கைகளை வகுத்தல், அங்கீகரித்தல் மற்றும் பரிந்துரைகளை செய்தல் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்…