Month: செப்டம்பர் 2020

புத்தாக்க உற்பத்திக்கான முதலீட்டாளர்களை கண்டறியுங்கள் – ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவருவதற்கு பிரச்சார நிகழ்ச்சித்திட்டம்… உள்நாட்டு வர்த்தகர்கள் சர்வதேச சந்தைக்கு.. வீழ்ச்சியடைந்துள்ள நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நிவாரணம்… பங்குச் சந்தையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை… முதலீட்டாளர்களை இனங்கண்டு நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக திட்டமிடப்பட்டுள்ள புத்தாக்க உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். பல நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் பிரதிபலனாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு புத்தாக்க உற்பத்திகள் திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றை…

கன்னங்கரா நினைவு தின வைபவம் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்…

இலவசக் கல்வியின் தந்தை என்று போற்றப்படும் கலாநிதி சீ.டப்ளியு,டப்ளியு.கன்னங்கரா அவர்களின் 51 வது நினைவு நாள் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் நேற்று (23) முற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் தாபிக்கப்பட்டுள்ள கன்னங்கரா அவர்களின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி அவர்கள் மற்றும் பிரதமர் அவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயம் மற்றும் பிலியந்தலை மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் கன்னங்கரா நினைவு கீதத்தை பாடினர்.…

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கங்களுக்கு உதவுவது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாகும்

      ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு…. சர்வதேச சமூகம் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கைக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். யுத்தத்தின் வேதனைகளை அனுபவித்த நாடு என்ற வகையில் உலக சமாதானத்திற்கு அர்ப்பணிப்பு… சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குறித்து தீவிர கவனம்… கண்டு பிடிக்கப்படும் கொவிட் – 19 தடுப்பு மருந்து தேவையான அனைவருக்கும் பெற்றுக்கொள்ள முடியுமாக இருப்பது அவசியம் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கங்களுக்கு உதவுவது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாகும்…

வீடமைப்பு அதிகார சபையின் நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம்…

வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். சேவை பெறுநர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி அவர்கள் இன்று (23) பிற்பகல் இவ் அலுவலகத்திற்கு சென்றார். சேவை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பல தடவைகள் வருகை தந்தபோதும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்பதுடன், போதுமானளவு பணிக்குழாமினர் இல்லை எனக் கூறி அச்சேவை நிறைவேற்றப்படவில்லை என முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார். அலுவலகத்தை கண்காணித்த ஜனாதிபதி அவர்கள், போதுமானளவு…

புத்தாக்கத் துறையில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி

உயர் கல்வி சட்ட திருத்தத்திற்கு நடவடிக்கை… புத்தாக்கத் துறைகள் ஒரே நிறுவனத்தின் கீழ்… புத்தாக்கத் துறையில் உலகில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளின் கேள்விக்கு ஏற்ற வகையில் சர்வதேச தரம் வாய்ந்த வினைத்திறன்மிக்க தொழிநுட்ப வல்லுனர்களை உருவாக்குவது முக்கிய தேவையாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். சாதாரண தரம் அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த, சித்தியடையாத அனைவருக்கும் தொழிநுட்பம் மற்றும் தொழிற்…

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு விஜயம்….

முதலாவது சந்திப்பு ஹல்துமுல்லையில் : பிரச்சினைகளை தெரிவிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு…. மக்கள் மத்தியில் சென்று அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக கிராமங்களுக்குச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திட்டமிட்டுள்ளார். மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளை தான் நேரடியாகக் கண்டு அவர்களின் கவலைகளை கேட்டு சரியான தெளிவொன்றை பெற்று நிவாரணங்களை வழங்குவது அவரின் எதிர்பார்ப்பாகும். முதல் விஜயமாக பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது.…

நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கு ஐ.நா உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்

– ஐ.நா. உயர் மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நேற்று (21) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். “உலகம் ஒரு பொதுவானதும் நிகரற்றதுமான…

அரசாங்கத்தின் உயர் முன்னுரிமை கல்விக்கு – ஜனாதிபதி தெரிவிப்பு

முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்விக்கு விசேட கவனம்…. அனைத்து பாடசாலைகளுக்கும் அதிகாரிகளின் சமனான தனிப்பட்ட அவதானம்…. அனைத்து பாடசாலைகளினதும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி துரிதப்படுத்தப்படும்… பணம் அறவிடப்படாத முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு.. அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்காக பிரிதொரு வேலைத்திட்டம்…. பெண்கள் தொடர்பான தேசிய குழு பாராளுமன்றத்திற்கு… எதிர்கால சந்ததியினர் கல்வியில் கைவிடப்படாமல் இருப்பதற்காக முன்பள்ளி முதல் உயர் கல்வி வரை அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கிய வகையில் அமைந்த திட்டமொன்றை தயாரித்து செயற்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான குறிக்கோள் என்று ஜனாதிபதி…

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு…

மதுரங்குளி விவசாய தொழிநுட்ப நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது…. முன்மாதிரி பாடசாலைக்கு விளையாட்டு மைதானம்… ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (19) புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி அவர்கள் தனது பயணத்தை ஆரம்பித்து மதுரங்குளி பாலச்சோனை விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை கேட்டறிந்து கொண்டார். 900 ஏக்கர் நிலப்பரப்பில் தேங்காய், மரக்கறிகள் உள்ளிட்ட பல பயிரினங்கள் பயிரிடப்பட்டுள்ளன. 10 ஏக்கர்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையும்…

ஆலோசனைகளை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதிக்கு பௌத்த ஆலோசனை சபை பாராட்டு.….

மகா சங்கத்தினரின் உபதேசங்கள் மற்றும் ஆலோசனைகளை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு பௌத்த ஆலோசனை சபை தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் பின்பற்றுகின்ற வழி முறைகள் சிறந்த மற்றும் நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு காரணமாக அமையுமென்று ஆலோசனை சபையின் உறுப்பினர் நாயக்க தேரர் தமது நம்பிக்கையை வெளியிட்டார். அரசாங்கத்தின் கொள்கைகளை செயற்படுத்துவதற்காக மகா சங்கத்தினரின் உபதேசங்கள் மற்றும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதன் பொருட்டு பௌத்த ஆலோசனை சபை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர்…