Month: அக்டோபர் 2020

வாக்குறுதியை நிறைவேற்றி, சுற்றாடலை பாதுகாத்து நெலுவ – லங்காகம வீதி நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில்…

மக்களின் நீண்ட கால தேவையொன்றினை நிறைவேற்றும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட நெலுவ – லங்காகம வீதி நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி லங்காமவுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வீதியின் தற்போதைய நிலைமை பற்றி கேட்டறிந்து சுற்றாடலுக்கு பாதிப்பின்றி 90 நாட்களுக்குள் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்யுமாறு பணிப்புரை விடுத்தார். இராணுவத்தின் பொறியியல் பிரிவு, தேசிய கட்டிட ஆராய்ச்சு அமைப்பின் அனுமதியுடன் செப்டெம்பர் 02ஆம் திகதி வீதியின் நிர்மாணப் பணிகள்…

தேசிய மற்றும் பௌத்த கொடிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதாக ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு…

நாட்டின் தேசிய மற்றும் பௌத்த கொடி தேவையினை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு தனது அமைச்சு தயாராக உள்ளதாக பத்திக், கைத்தறி மற்றும் உள்நாட்டு சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உறுதியளித்தார். தேசிய மற்றும் பௌத்த கொடிகளை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் பெருந்தொகை அந்நியச் செலாவணி  செலவிடப்படுகின்றுது. அடுத்த வருடம் முதல் தேவையான கொடிகளை உயர் தரத்துடன் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பத்திக் மற்றும் கைத்தறித் துறையில் உள்ள…

மேல் மாகாண அரச நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்ளும் முறைமை மீண்டும் நடைமுறைக்கு…

கெரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் “வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ளும் முறைமையை“ மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு மேல் மாகாணம் மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் முதல் மே வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட “வீட்டிலிருந்து வேலை முறைமை“ மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களை பயன்படுத்தி அத்தியாவசிய மற்றும் வேறு சேவைகளை வழங்குவதற்கு மாற்றுத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுநிருபம் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர அவர்களினால் நேற்று (29)…

கொவிட் தகவல் திரட்டும் புதிய செயலி ஜனாதிபதிக்கு அறிமுகம்…

மருத்துவத் துறையிலும் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளக் கூடிய புதிய செயலி (APP) மேல் மாகாண சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அறிமுகம்செய்து வைக்கப்பட்டது. கொவிட் நோய்த் தொற்றாளர்கள், தொடர்புடையவர்கள், தனிமைப்படுத்தல், பீசீஆர் பரிசோதனை சேவைகள், கண்காணிப்பு, தீர்மானங்களை மேற்கொள்தல், நோய்த்தொற்றாளர்களுக்கு கிட்டிய பிரதேசங்களுடன் தொடர்புடைய தகவல்கள் உள்ளிட்ட தேவையான பல தரவுகளை இந்த புதிய செயலியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி அவர்களின்…

ஓய்வுபெற்றுச் செல்லும் விமானப் படை தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு…

36 வருட சேவையை நிறைவுசெய்து நவம்பர் மாதம் 02ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். 2019 மே மாதம் 29 ஆம் திகதி விமானப் படை தளபதியாக நியமிக்கப்பட்ட சுமங்கள டயஸ் இலங்கையின் 17வது விமானப் படை தளபதியாகும். முப்பது வருட பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெரும் பங்காற்றிய அவர் தனது சேவைக் காலத்தில் வடமராட்சி நடவடிக்கை…

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து சகோதரத்துவத்துடன் முஹம்மத் நபியவர்களின் மீலாத் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். முஹம்மத் நபியவர்கள் மனித குலத்திற்காக செய்த அர்ப்பணிப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வது சிறந்ததோர் அபிவிருத்தியடைந்த சமூகத்திற்கான அத்திவாரமாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும். அடுத்த மனிதர்களுடனான எமது உறவு நபிகளார் போதித்த ஒழுக்கப் பெறுமானங்களை மதித்து குரோதங்கள் மற்றும் சந்தேகங்களை ஒழிக்கும் வகையிலேயே அமைய வேண்டும். முன்னெப்போதுமில்லாத வகையில் பல்வேறு பிரச்சனைகளை தோற்றுவித்து உலகெங்கிலும்…

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவத் தயார் – அமெரிக்க இராஜாங்க செயலாளர் உறுதியளிப்பு…

சர்வதேச தொடர்புகளின் போது நாட்டின் சுயாதீனத்திற்கும் இறைமைக்கும் முதலிடம் – ஜனாதிபதி தெரிவிப்பு… முதலீட்டு மேம்பாட்டுக்கு முன்னுரிமை… போதைப்பொருள் ஒழிப்புக்கு உதவி… இந்து சமுத்திரம் சமாதான வலயமாக இருக்க வேண்டும்… பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு இலங்கையுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயற்பட தயார் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவிவரும் வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தனது நாட்டின்…

வெற்று கார்பன் பேனா குழாய்கள் மற்றும் பற் தூரிகைகள் மீள் சுலட்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்…

பாவனையின் பின் ஒதுக்கப்படும் வெற்று கார்பன் பேனா குழாய்கள் மற்றும் பற் தூரிகைகள் மீள் சுலட்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்ட முதலாவது கொள்கலன் நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டம் “நாம் வளம்பெற்று நாட்டை வளப்படுத்துவோம்“ என பெயரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு பாடசலைகளில் இருந்து ஒதுக்கப்படும் கார்பன் பேனா குழாய்கள் சுமார்…

“ஜனாதிபதி கிராமத்துடன் உறவாடல்” நிகழ்ச்சித்திட்டத்திற்கு பலன்

ஹிம்பிலியாகட அபவிருத்தி பணிகள் ஆரம்பம் காணி உறுதி பிரச்சனைகளுக்கும் தீர்வு மாத்தளை, வில்கமுவ, ஹிம்பிலியாகட கிராமத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய நிர்மாணப் பணிகள், சேவைகளை வழங்குவதற்கு முன்னுரிமையளித்து நிகழ்ச்சித்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த ஒக்டோபர் 02ஆம் திகதி மாத்தளை மாவட்டத்திற்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். கிராமிய மக்களின் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடி அவற்றை அதிகாரிகளுக்கு முன்வைத்து தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது…

ஒரு லட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஆரம்பம்…

முதற் சுற்றின் கீழ் 34818 பேருக்கு பயிற்சி சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (19) ஆரம்பிக்கப்பட்டது. முதற் சுற்றில் 34818 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். நியமனம் பெறுவோருக்கு அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பத்தின் பேரில் இனம்காணப்பட்டுள்ள 25 துறைகளின் கீழ் 06 மாதங்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி…