Month: அக்டோபர் 2020

மதுரங்குளி மக்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு பலன்…

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதானம், ஜீவனகம – கஜுவத்த வீதி மற்றும் கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் மதுரங்குளி – மஹகும்புக்கடவல ஊடாக ஆண்டிகம வரையிலான வீதி அபிவிருத்திப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி புத்தளம் மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த அபிவிருத்திப் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜனாதிபதி அவர்கள் மதுரங்குளி முன்மாதிரிப் பாடசாலைக்கு சென்ற…

விவசாயிகளுக்கு அதிக விலையும் நுகர்வோருக்கு சலுகை விலையும் கிடைக்கும் சந்தையொன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி கவனம்…

விவசாயிகளுக்கு அதிக விலையும் நுகர்வோருக்கு சலுகை விலையும் கிடைக்கும் வகையிலான சந்தையை உருவாக்கவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார். நாட்டின் அனைத்து பிரதேசங்களினதும் அறுவடைகளை இடைத்தரகர்களின் சம்பந்தமின்றி விற்பனை செய்யும் வசதியை விவசாயிகளுக்கே நேரடியாக கிடைக்கும் சூழலை ஏற்படுத்தி அதனை ஆரம்பிக்க முடியும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். வாழ்க்கைச் செலவு குழுவுடன் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். அத்தியாவசிய…

‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1659 மில்லியனாக அதிகரிப்பு…

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1659 மில்லியனாக அதிகரித்துள்ளது. பிரதமர் அலுவலகம் 82,906.97 ரூபாவையும்,  சிறுமி ஆர்.ஜீ.ஐ. சிதுமினி பண்டார 6000 ரூபாவையும், கம்பஹா மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் நலன்புரி சங்கம் 100,000 ரூபாவையும், இலங்கை வங்கியின் ஓய்வூதிய சங்கம் 2,500,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். மேற்படி அன்பளிப்புகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ…

அத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம்…

தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கூடிய கஷ்டங்களை கவனத்திற் கொண்டு அரசாங்கத்தினால் பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. வரி நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று இரவு முதல் டின் மீன் (பெரியது) 200 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 85 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும். இந்த அத்தியாவசிய பொருட்கள் உட்பட 500…

பொது மக்களுக்கு அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம்…

கொவிட் 19 நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொது மக்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதருதல் மற்றும் அலுவலகத்தில் குறைந்தளவான அலுவலர்கள் சேவையை வழங்குதல் என்பவற்றின் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை கவனத்திற் கொண்டு, அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக முன்வைக்கப்படும் பொது மக்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு, ஒம்புட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்துடன் பின்வரும் இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ள…

இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்தும் உதவும்: சீன தூதுக்குழு ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு

இலங்கையுடனான உறவுகளுக்கு சீன ஜனாதிபதி ஷீ முன்னுரிமை… சர்வதேச மன்றங்களில் இலங்கைக்காக குரல்கொடுக்கப்படும்… துறைமுக நகர திட்டம் விரைவில் நிறைவுசெய்யப்படும்… சீனாவுக்கு சமமான அபிவிருத்தியை நாட்டில் ஏற்படுத்துவது தனது இலக்காகும் என ஜனாதிபதி தெரிவிப்பு வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்திக்க உதவுங்கள்.. இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளை வெற்றிபெறச் செய்வதற்கு தொடர்ச்சியாக உதவுவதாக தற்போது இலங்கைக்கு வருகைதந்துள்ள சீன மக்கள் குடியரசின் உயர் மட்ட தூதுக்குழுவின் தலைவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உறுதியளித்தார். சீனா இலங்கை இருதரப்பு உறவுகள்…

அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் உள்ள ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாகவும் முறையாகவும் மேற்கொள்ளுமாறு  ஜனாதிபதி பணிப்பு…

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தகைமை சான்றிதழ்கள் உள்ள பயிற்றப்பட்ட ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாகவும் முறையாகவும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். அதன் மூலம் நாட்டுக்கும் ஊழியர்களுக்கும் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், தொழில் பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைத்துவ இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற…

எஸ். வியாழேந்திரன் புதிய இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்…

பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக திரு.சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.  

கொவிட் நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்கு மற்றும் PCR பரிசோதனையை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி பணிப்பு…

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர்… தொற்று நோய்த் தடுப்பு சட்டதிட்டங்களை வர்த்தமானியில் வெளியிட அவதானம்… தெரிவின் அடிப்படையில் பரிசோதனைகளை நடாத்துமாறு அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஆலோசனை… அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும் நோயாளர்களை அடையாளம் காணும் PCR பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உரிய தரப்பினருக்கு…

சமூக ஊடகங்களில் பரவுகின்ற போலிப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

நாளை (06) நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவுகின்ற போலிப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்று அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொள்கிறது. மக்களை தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அல்லது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற விசேட ஊடக அறிக்கை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் மாத்திரம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.