Month: அக்டோபர் 2020

காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்கி உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள்…   

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒரே இடத்தில்…  பால் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் குறித்து விசேட கவனம்…  வில்கமுவவிற்கு சிறுநீர் – இரத்த சுத்திகரிப்பு பிரிவு…  ஆசிரியர் – தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வு..                ஹிம்பிலியாகட “கிராமத்துடன் உறவாடலின்” போது ஜனாதிபதி பணிப்பு.. மொரகஹகந்த நீர்த் தேக்கத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது காணிகளை இழந்தவர்களுக்கு பொருத்தமான இடங்களில் காணிகளை வழங்கி தனக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அனைத்து அதிகாரிகளையும் ஒரே இடத்திற்கு…

பிள்ளைகளை வாசிப்பின் மீது ஆர்வமூட்டி உலக சிறுவர் தின கொண்டாட்டங்களில் ஜனாதிபதி இணைந்துகொண்டார்…

ஐந்து மாவட்டங்களில் உள்ள ஐந்து பாடசாலைகளுக்கு நூலகங்களை அன்பளிப்புச் செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உலக சிறுவர் தின கொண்டாட்டங்களில் இணைந்துகொண்டார். அனைத்து பாடசாலைகளுக்கும் நூலகங்கள் மற்றும் விளையாட்டு வசதிகளை வழங்குவதன் மூலம்; பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பேண முடியும் என்பதை தான் அண்மையில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களின் போது விளங்கிக் கொண்டதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். மிகவும் பின்தங்கிய பல பிரதேசங்களில் உள்ள பிள்ளைகளின் கோரிக்கையின் பேரில் பல…

ஜனாதிபதி அவர்களின் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

எமது சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள். அவர்களை அறிவு ரீதியாக வளப்படுத்தி திறன் விருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும். பிள்ளைகளின் உள, உடல், ஆரோக்கியத்தை வளப்படுத்துவதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போன்றே அவர்கள் நற்பண்புள்ளவர்களாக வளர்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும். ஒரு நாடு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எவ்வளவு உயர்ந்த அபிவிருத்திப் படிநிலைகளை அடைந்து கொண்டாலும், சமூகம் அன்பு, அறம் போன்ற அடிப்படை மானிடப் பண்புகளைப் பெற்றிருக்கவில்லை என்றால் அதனை ஒரு…

கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரருக்கு ஆசிவேண்டி இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.…   

இலங்கை அமரபுர மகாநிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரருக்கு ஆசி வேண்டி இன்று (30) இடம்பெற்ற போதி பூஜை அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார். சுகவீனமுற்றிருக்கும் கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரை சந்தித்து சுகதுக்கங்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், தேரர் அவர்களின் ஆரோக்கியத்திற்காக பிரார்த்தித்தார். சங்கைக்குரிய கங்துனே அஸ்சஜி மகா நாயக்க தேரர், சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவங்ச நாயக்க தேரர், சங்கைக்குரிய திருக்குணாமலையே ஆனந்த மகாநாயக்க தேரர், சங்கைக்குரிய…