Month: நவம்பர் 2020

வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டம்  வீடியோ தொழில்நுட்பத்தினூடாக …

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும்  அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர். கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. கோவிட் தொற்றுநோய் மட்டுமல்லாமல் செயல்திறன், வசதி, நேரம் மற்றும் செலவை மீதப்படுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வீடியோ அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் அதற்குப் பழக்கப்படுத்துவதற்கும் ஜனாதிபதி அவர்கள் முன்னுரிமை…

பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே  புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம் …

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க  அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இராஜாங்க அமைச்சர் இன்று (30) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான இராஜாங்க அமைச்சு புதிய இராஜாங்க அமைச்சாகும். ஆரம்ப சுகாதார சேவைகளை மிக உயர்ந்த தரத்திற்கு மேம்படுத்தி பராமரிப்பது…

ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு ஆலோசகருக்கும்  இடையே பயனுள்ள கலந்துரையாடல் …

நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகை தந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், நேற்று (28) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். ஜனாதிபதி அவர்களும் இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் அனைத்து வகையான இருதரப்பு உறவுகளையும் மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மிகவும் பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்து-லங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவை கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்களாகும்.…

புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

புதிய பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். சீ.டீ. விக்ரமரத்ன இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராவார். 1986 ஆம் ஆண்டு பயிலுனர் உதவி பொலிஸ் அதிகாரியாக சேவையில் இணைந்துகொண்ட அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தினதும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினதும் பட்டதாரியாவார். மேலும் பிரட்பேர்ட் பல்கலைக்கழகத்திலும் ஹாவார்ட் பல்கலைக்கழகத்திலும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா கற்கைநெறிகளை பயின்றுள்ளார். ஜனாதிபதி அவர்கள் புதிய பொலிஸ் மா அதிபருக்கு…

ஜனாதிபதி ராமன்ய மகா நிகாயவின் புதிய மகா நாயக்க தேரரை சந்தித்தார்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ராமான்ய மகா நிகாயவின்  புதிய மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய மகுலேவே விமல நாயக்க தேரரை சந்தித்தார். தேரர் அவர்கள் வசிக்கும் மீரிகம, மினிஒழுவ, வித்யாவாச பிரிவெனாவுக்கு இன்று (27) முற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள் புதிய மகா நாயக்க தேரரை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பௌத்த சாசனத்திற்கும், சமய மற்றும் தேசிய ரீதியாகவும் ராமான்ய மகா நிகாயவினால் மேற்கொள்ளப்படும் சேவைகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அப்பணிகளை தொடர்ந்தும்…

வீட்டு தனிமைப்படுத்தலை கண்காணிக்க பொறிமுறை …

கோவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு தனிமைப்படுத்தல் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய ஒரு கண்காணிப்பு பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணி கள அலுவலர்கள் குழுவொன்றுக்கு ஒதப்படைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், சமுர்தி அபிவிருத்தி, குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், கிராம அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இதில் அடங்குவர். கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய…

தொழில்நுட்ப அமைச்சு ஜனாதிபதியின் கீழ்…

பொதுமக்கள் பாதுகாப்புக்கு அமைச்சரவை அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நியமனம்… நவம்பர் 20 ம் திகதி அமைச்சு விடயத்துறைகளில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்திற்கு ஏற்ப பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள், இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷவும் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில்…

புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிப் பிரமாணம்…

புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரொருவரும் இராஜாங்க அமைச்சரொருவரும் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ரியர் அட்மிரல் சரத் வீரசேக்கர அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். சமல் ராஜபக்ஷ அவர்கள் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள், இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

நாபான பேமசிறி மகா நாயக்க தேரரின் சமய ஞானம், தூய்மை, நல்லொழுக்கம் சமூகத்திற்கு ஆசீர்வாதமும் முன்மாதிரியுமாகும் …

– தகனக் கிரியையின் போது ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கை ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க தேரரின் சமய ஞானம், தூய்மை, நல்லொழுக்கம் சமூகத்திற்கு ஆசீர்வாதமும் முன்மாதிரியுமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். தேரர் அவர்களின் மறைவு புத்த சாசனத்திற்கும் நாட்டிற்கும் உலகெங்கிலும் உள்ள பௌத்த சமூகத்திற்கும் மற்றும் தனிப்பட்ட முறையில் தனக்கும் பெரும் இழப்பாகும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று பிற்பகல் (22) கண்டி, குண்டசாலை…

ஜனாதிபதி தளதா மாளிகைக்கு விஜயம் …..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (22) முற்பகல் கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தளதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தை வழிபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார். ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி தேரரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அவர்கள் கண்டிக்கு சென்றுள்ளார். புனித தந்தத்தை வழிபட்ட ஜனாதிபதி அவர்கள், தியவதன நிலமே நிலங்க தேலவுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.