Month: டிசம்பர் 2020

புதிய 20 ரூபா நினைவு நாணயம் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது …

இலங்கை மத்திய வங்கிக்கு 70 வது ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் அவர்களினால் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்த நாணயம் 7 பக்க வடிவத்துடன் அலுமினியம் மற்றும் வெண்கலத்தால் ஆனது. 3,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது புழக்கத்திற்கு விடப்படமாட்டாது. மத்திய வங்கி தலைமையகம் மற்றும்…

சேவையிலிருந்து அகற்றப்பட்ட 273 இ.போ.ச பஸ் வண்டிகள் மீண்டும் சேவையில் …

ஜனாதிபதியின் தலைமையில் நிகழ்வு… முழுமையாக பழுதடைந்த காரணத்தினால் சேவையில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 273 பஸ் வண்டிகளை புதுப்பித்து மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (31) முற்பகல் காலி முகத்திடலில் இடம்பெற்றது. இந்த பஸ் வண்டிகள் நாடு முழுவதும் கிராமப்புற வீதிகளில் பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படவுள்ளன. இந்த திட்டம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள் மற்றும் புகையிரத பெட்டிகள், மோட்டார்…

“கிராமத்துடன் உரையாடல்” – ஜனாதிபதி கெபிதிகொல்லேவ விஜயம் …

விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட மக்களுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம். திட்டங்களை மேற்கொள்ளும் போது இடம்பெயர்ந்தோருக்கு விரைவான தீர்வுகளை வழங்குங்கள்.                               ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு கனுகஹவெவவை ஒரு மாதிரி கிராமமாக அபிவிருத்தி செய்யும் பணி விமானப் படையிடம் ஒப்படைப்பு… 21 குளங்கள் மற்றும் பல கால்வாய்கள் விரைவில் புனரமைக்கப்படும் … காணி பிரச்சினைக்கு விரைவான தீர்வுகள் … பிரதான மற்றும் சிறிய வீதிகள் அபிவிருத்திக்கு நடவடிக்கை… பண்ணை வளர்ப்புக்கு புல்வெளிகள் … சுகாதார, கல்வி, போக்குவரத்து பிரச்சினைகளுக்கு…

மஞ்சள், சோளம் உள்ளிட்ட அறுவடைகளை கொள்வனவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளை நிறுத்துங்கள்

இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு …. மதுசாரம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கு சோளம் பயன்படுத்துவது முழுமையாக தடை… விவசாயிகளிடமிருந்து மஞ்சள், சோளம் உள்ளிட்ட அறுவடைகளை கொள்வனவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க தலையிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இத்துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார் உள்நாட்டு விவசாயிகள் மஞ்சள் மற்றும் சோளம் பயிர்ச்செய்கையை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளனர். எதிர்வரும் பெரும்போகத்தில் அறுவடையை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்…

சேனா படைப்புழு தாக்கம் பற்றி ஜனாதிபதி விவசாயிகளிடம் நேரில் சென்று கேட்டறிந்தார்…

இன்று (26) பிற்பகல் அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு  சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சேனா படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழு தாக்கத்தினால் பல மாவட்டங்களில் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் விளைச்சல் அதிகளவு குறைந்துள்ளது என்று விவசாயிகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். காட்டு யானைகளினால் தோட்டங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் விவசாயிகள் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்தனர்.…

ஜனாதிபதி புனித  தளதா மாளிகைக்கு விஜயம்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (26) பிற்பகல் கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தளதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தை வழிபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றார். தளதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றார். ஜனாதிபதி அவர்கள் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து, அவரது சுகதுக்கங்கள் பற்றி கேட்டறிந்தார். மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதர்ம தேரரையும்…

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும். இது இயேசு நாதர் போதித்த மற்றும் நடைமுறையில் வாழ்ந்துகாட்டிய அமைதி, அன்பு, இரக்கம், சகவாழ்வு, கருணை போன்ற பண்பட்ட மனித சமூகத்தின் அடித்தளத்தை வடிவமைக்கும் உன்னத பெறுமானங்களை உள்ளடக்குகிறது. சமூக ரீதியாக, நத்தார் கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கும், பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கும், பகைமைகளை மறந்து பிணைப்பினை புதுப்பிப்பதற்குமான…

தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் பல தேசிய கொள்கைகளுக்கான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி வெற்றிபெற்றுள்ளார் -பௌத்த ஆலோசனை சபை தெரிவிப்பு

தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு பல தேசிய கொள்கைகளுக்கான உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வெற்றிபெற்றுள்ளார் என்று பௌத்த ஆலோசனை சபை தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும் எண்ணிக்கையான மக்களின் எதிர்பார்ப்பாகவிருந்தது ஒரு தேசிய சிந்தனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் ஒரு தலைமையாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தொழில்கள் மற்றும் சலுகைகள் போன்ற குறுகிய விடயங்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அத்தகையவர்களின்…

சுவசரண சுகாதார நிதியத்தால் களுத்துறை மாவட்டத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட பி.சி.ஆர் இயந்திரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

ஹொரனை குருந்துவத்தை விகாராதிபதி சுவசரண சுகாதார நிதியத்தின் ஆலோசகர் சங்கைக்குரிய உடுகல்மோட்டே சிறிவிமல தேரர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நன்கொடையாளர்களின் பங்களிப்பில் வாங்கப்பட்ட புதிய பி.சி.ஆர் இயந்திரம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. மாவட்டத்தின் தேவைகளுக்காக களுத்துறை சுகாதார நிறுவனத்தில் இந்த புதிய பி.சி.ஆர் இயந்திரம் வைக்கப்படும். சங்கைக்குரிய உடுகல்மோட்டே சிறிவிமல தேரர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஜனாதிபதியிடம் வழங்கினார். அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ஆகியோர்…

அலுத்நுவர சுமனதிஸ்ஸ நாயக்க தேரரின் உருவச்சிலை திறப்பு  ஜனாதிபதியின் பங்கேற்புடன்…

கோட்டே, மாதிவெல ஈயம்போருவ கங்காதிலக விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, காலம்சென்ற சங்கைக்குரிய அலுத்நுவர சுமனதிஸ்ஸ நாயக்க தேரரின் உருவச்சிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (23) பிற்பகல் திறந்து வைத்தார். பன்னிப்பிட்டி கிழக்கு எரவ்வல ஸ்ரீ விஜயசிறிவர்தனாராமய, கோட்டே மாதிவல ஈயம்போருவ கங்காதிலக விகாரை மற்றும் அமெரிக்கா லொஸ்எஞ்சல்ஸ் லங்காராமய ஆகிய விகாரைகளின் விகாராதிபதியாகவும் தென் அமெரிக்காவின் தலைமை சங்க நாயக்கராவுகம் இருந்த சங்கைக்குரிய அலுத்நுவர சுமனதிஸ்ஸ நாயக்க தேரர் 2019 ஆம் ஆண்டு மே மாதம்…