Month: டிசம்பர் 2020

இங்கிலாந்தில் இருந்து பயணிகளை அழைத்து வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது – கோவிட் குழு கூட்டத்தில் ஜனாதிபதி தீர்மாணம்

தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் கோவிட் 19 புதிய வைரஸின் காரணமாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (22) முடிவு செய்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் கூடும் கோவிட் குழுவுடனான இன்றைய (22) சந்திப்பின் போது கோவிட் புதிய வைரஸ் மற்றும் அதன் பரவலை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு இன்று வரவுள்ள பயணிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்…

“விரு அபிமன்“ கோவிட் 19 காப்புறுதி பாதுகாப்பு சான்றிதழ் ஜனாதிபதியிடம் கையளிப்பு…

“விரு அபிமன்“ கோவிட் 19 காப்புறுதி பாதுகாப்பின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து காப்புறுதி பாதுகாப்பு சான்றிதழ் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் வெல்லவத்தவினால் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. கோவிட் 19 தொற்றுநோய் அபாயத்துடன் இலங்கை காப்புறுதி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் காப்புறுதித் திட்டத்தின் முதல் கட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இது கோவிட் ஒழிப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களையும், முப்படையினர்…

‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்துடன் ஜனாதிபதி மீண்டும் கிராமத்திற்கு …

பாரம்பரியமான மக்கள் வாழ்க்கைக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் –  ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்… ராவணாகந்தவுக்கு 04 வீதிகள் மற்றும் 03 புதிய பாலங்கள் …. கித்துல் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் … மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு … காணி பிரச்சினைக்கு விரைவான தீர்வுகள் ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பலாங்கொட இம்புல்பே ராவனாகந்த கிராமத்திற்கு விஜயம் செய்தார். இது ஜனாதிபதி அவர்கள் பங்கேற்ற…

பண்டிகை காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சலுகை வட்டிக்கு நிதி வசதிகள்…

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய சலுகை வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த கடன் வழங்கல் 03 பிரிவுகளின் கீழ் இடம்பெறும். மாதத்திற்கு ரூ. 50,000 க்கு மேல் சம்பளம் அல்லது வருமானம் பெருவோருக்கு ரூ. 50,000 கடனாக பெறலாம். மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ .25,000 க்கும் ரூ .50,000 க்கும் இடைப்பட்டவர்களுக்கு ரூ.25,000 கடன்…

“மீள்பிறப்பாக்க சக்திவளத்தை“ விரைவில் மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சாத்தியம் பற்றி ஜனாதிபதி ஆராய்வு…

மீள்பிறப்பாக்க சக்திவள மூலங்களான காற்று, சூரிய வெப்பம் மற்றும் இயற்கை வாயு போன்றவற்றை மின் கட்டமைப்புடன் விரைவாக இணைப்பதற்கான சாத்தியம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆராய்ந்துள்ளார். இன்று உலகின் பல நாடுகள் மின் உற்பத்தியில் மீள்பிறப்பாக்க சக்தி வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கி நகர்கின்றன. “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கை திட்டத்தின் படி, 2030 ஆம் ஆண்டாகும் போது மீள்பிறப்பாக்க சக்தி மூலங்களிலிருந்து மொத்த மின்சார தேவையில் 70% ஐ பூர்த்தி செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. மீள்பிறப்பாக்க…

நீண்ட கால பொருளாதார மறுமலர்ச்சி குறித்து ஜனாதிபதி தனியார் துறையுடன் கலந்துரையாடல் …

  ”எல்லாவற்றையும் இறக்குமதி செய்து விற்பனை செய்வது எளிதானது. நாம் அவ்வாறு செய்தால் ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியாது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். இதற்கு தனியார் துறையின் பங்களிப்பு மற்றும் புதிய அணுகுமுறைகள் மிக முக்கியமாகும்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (10) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் தனியார்துறை தொழில்முயற்சியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்தார். பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியைக் கொண்டுவருவதே…

சிறைக் கைதிகளை மனிதாபிமானத்துடன் நோக்கி தேவையான வசதிகளை உடனடியாக வழங்குங்கள் – ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு …

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு … சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி செயலணி … சிறைக்கைதிகள் தொடர்பில் மனிதாபிமானமாக நோக்கி அவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதன் காரணமாக 12,000 க்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர். அவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி புனர்வாழ்வு திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். சிறைச்சாலைகளில்…

கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கோவிட் நோய்த்தொற்றை தடையாக கொள்ள வேண்டாம் -ஜனாதிபதி கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவிப்பு

முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வித்துறை முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கோவிட் நோய்த்தொற்றை தடையாக கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மனிதவள அபிவிருத்தி என்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். நாட்டின் எதிர்கால தலைமுறையினரை உற்பத்தித் திறன்மிக்க பிரஜைகளாக உருவாக்க அவர்கள் புதிய அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இடையூறு ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். கல்வி…

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள செய்தி

ஊழல் என்பது அபிவிருத்திக்கு மிகப்பெரிய தடையாகும், அது சமூக அல்லது பொருளாதார தளமாக இருப்பினும் சரியே. ஊழலானது நிறுவனங்கள் அவற்றின் அதிகபட்ச திறனை அடைவதைத் தடுத்து இறுதியில் ஒரு நாட்டின் வளர்ச்சியையே தடுத்துவிடுகிறது. கண்காணிப்பு பொறிமுறைகளில் உள்ள குறைபாடுகளின் காரணமாக தேவையற்ற சுரண்டல்களுக்கு இடமளிக்கும் நெருக்கடியான காலகட்டங்களில் இதனை மிகத் தெளிவாக காணலாம். ஒரு நாட்டின் குடிமக்கள் இந்த வெறுக்கத்தக்க நடைமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வையும் மனவிருப்பத்தையும் கொண்டிருக்கும்போது அந்த நாடு ஊழலை சிறப்பாக எதிர்த்துப் போராட…

திஸ்ஸ அத்தநாயக்க எழுதிய இரண்டு நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு…

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எழுதிய “நொகியு கதா“ (சொல்லப்படாத கதைகள்) நூல் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. திஸ்ஸ அத்தநாயக்க சிறையில் இருந்தபோது ஜனாதிபதி அவர்கள் அவரது சுகதுக்கங்களை கேட்டறிய அங்கு சென்றிருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு விசேட சந்தர்ப்பமாக கருதி “நொகியு கதா“ மற்றும் “திஸ்ஸ“ ஆகிய இரு நூல்களும் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.