Month: ஜனவரி 2021

புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் பழைய சுற்றறிக்கைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட  வழக்குகளை மீளப்பெறுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு …

“கிராமத்துடன் உரையாடலில்” அடையாளம் காணப்பட்ட சிக்கலற்ற 17,000 காணி உறுதிகளுக்கு ஜனாதிபதி கையெழுத்து…. கிராமப்புற பிரச்சினைகளை தீர்ப்பதில் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகளுடனும் மக்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் … ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு நிவர்த்திக்கப்படும்… ஏழு தசாப்த கால மக்கள் கனவுகளை நிறைவேற்றும் வகையில் கும்புக்கன் ஓயா திட்டம் ஆரம்பம் … பாரம்பரியமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலங்களை விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பயிரிட அனுமதிக்கும் புதிய சட்ட திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் பழைய…

கோவிட் தடுப்பூசிகளின் முதல் தொகுதியை ஜனாதிபதி  விமான நிலையத்தில் கையேற்றார் …

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நாளை முதல்… விருப்பமில்லாதவர்கள் தவிர்ந்திருக்க முடியும்… இந்திய அரசாங்கம் வழங்கிய கோவிட் தடுப்புசிகளின் முதல்  தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களினால் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட்…

ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் அக்கமகா பண்டித சங்கைக்குரிய  கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். தேரர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (26) முற்பகல் கல்கிஸ்ஸ தர்மபாலராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், நாயக்க தேரர் அவர்களை சந்தித்து அவருக்கு நோய் நொடியில்லாத ஆரோக்கிய வாழ்வுக்காக பிரார்த்தித்தார். மகா நாயக்க தேரரை ஆசீர்வதிப்பதற்காக ஐம்பது மகா சங்கத்தினர் கலந்து கொண்ட ஒரு அன்னதான…

எட்வின் ஆரியதாச அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபச் செய்தி

ஊடகத் துறையின் சிறப்பான வளர்ச்சிக்கும், கலை மற்றும் பல்வேறு மானிடவியல் துறைகளின் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளரும் புலமைவாய்ந்த அறிஞருமான கலாகீர்த்தி கலாநிதி எட்வின் ஆரியதாச அவர்களின் மறைவு பற்றிய செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. பல்வேறு துறைகளில் அவர் கொண்டிருந்த பரந்த அறிவால் மக்களின் மனங்களை வளப்படுத்துவதற்கு அவர் செய்த பணிகளை நான் மிகுந்த கௌரவத்துடன் நினைவு கூர்கிறேன். பெரும்பான்மையான மக்கள் கலாநிதி எட்வின் ஆரியதாச அவர்களை ஊடகத் துறையில் ஒரு தலைசிறந்த முன்னோடி…

கோவிட் தடுப்பூசி முதல் தொகுதி  27 ஆம் திகதி  நாட்டை வந்தடையும் …

தடுப்பூசி ஏற்றுதல் மறுநாள் முதல்… நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவொரு வளமும் வேறொரு நாட்டிற்கு வழங்கப்பட மாட்டாது …. நாட்டைப் பற்றி தவறான கருத்து உலகிற்கு வழங்கப்படவும் மாட்டாது …. நிறுவனங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் ….                           யட்டபாத்த “கிராமத்துடன் உரையாடலில்” ஜனாதிபதி தெரிவிப்பு. இந்திய அரசு இலவசமாக வழங்கும் கோவிட் தடுப்பூசியின் முதலாவது தொகுதி எதிர்வரும் 27  ஆம் திகதி புதன்கிழமை நாட்டுக்கு கொண்டு…

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய  ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்…

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இது போன்ற கடுமையான குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களின் காண்புகள் குறித்து விசாரிக்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (21) வெளியிடப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதி திரு. ஏ.எச்.எம்.டி. நவாஸ் விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற பொலிஸ் மா…

பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை பாரம்பரிய பயிர்ச்செய்கையில் ஈடுபட விவசாயிகளுக்கு முழுமையான அனுமதி…

காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு நிரந்தர தீர்வுகள் … நாட்டின் பாடசாலைகளில் இடை நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து அபிவிருத்தி பணிகளும் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் … வெடிகச்சிய கிராமத்திற்கு வீடமைப்பு திட்டம் … மெதிரிகிரிய விவசாய நிலங்களுக்கு மான்களினால் ஏற்படும் சேதங்களை தடுக்க வேலி நிர்மாணம் … இரண்டு போகங்களிலும் பயிரிட நீர் … மாவட்டத்தில் தொழில் பயிற்சி வாய்ப்புகளை விரிவாக்க கவனம் …               ‘கிராமத்துடனான உரையாடலில்‘ ஜனாதிபதி தீர்மானம் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை எந்தவித இடையூறும் இல்லாமல்…

உழைப்பின் மகிமையை பாதுகாக்கும், திறன் கொண்ட சமூகமொன்றை உருவாக்கும் கல்வி முறை ஏற்படுத்தப்படும் –   ஜனாதிபதி

பி.சி.ஐ வளாக பட்டப் பதிவுகள் ஆரம்பம் … “புதிய இயல்பு நிலையின்” கீழ் உழைப்பின் மகிமையை பாதுகாக்கும் மற்றும் திறன்கள் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். விரைவான அபிவிருத்திக்காகவும், குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார இலக்குகளை அடையவும் தேசிய கல்வி கொள்கை ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (15) பிற்பகல் நீர்கொழும்பில் உள்ள 16வது பெனடிக்ட் கத்தோலிக்க உயர் கல்வி…

“Park & Ride” பஸ் சேவை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்…

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட “Park & Ride” பஸ் சேவையின் முதல் கட்டம் கொட்டாவை, மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்தை மையப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (15) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பயணிகளுக்கு வசதியான, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து பேருந்து சேவையை வழங்குவதன் மூலம் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதன் நோக்கம். இது சூழல் மாசடைதல்,…

தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை ஜனாதிபதி திறந்து வைத்தார்…

தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேட்டர் டயர் உற்பத்தி ஆலையான “ஃபெரெண்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ நிறுவனம் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. ஹொரன வகவத்த முதலீட்டுச் சபை கைத்தொழில் வலயத்திற்கு சொந்தமான 155 ஏக்கர் நிலத்தில் இந்த கைத்தொழில்த வளாகம் அமைந்துள்ளது. முதல் கட்டத்திற்கான முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் உலகின் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. SUV வாகனங்கள், மோட்டார் கார்கள்,…