Month: பிப்ரவரி 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய  குழு நியமனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கை  ஆகியவற்றின் காண்புகள் மற்றும் பரிந்துரைகள் தொர்பாக விரிவாக ஆராய்ந்து அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கையிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குழுவொன்றை நியமித்துள்ளார். அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரனதுங்க, ரோஹித அபேகுணவர்தன…

முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள அதிகாரிகள் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் கலந்துகொள்வது கட்டாயமாகும்

நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்கு முன் களத்திற்கு சென்று பாருங்கள் … காட்டு யானைகள் பிரச்சினைக்கு நீண்டகால நிலையான தீர்வு … தவறான விளக்கங்களால் மக்களின் பிரச்சினைகளை மறைக்க இடமளிக்க வேண்டாம் …                        புத்தளத்தில் இடம்பெற்ற ‘கிராமத்துடன் உரையாடல்‘ நிகழ்ச்சியில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்… மக்கள் திட்டங்களை செயற்படுத்த மாவட்ட மற்றும் பிரதேச அபவிருத்திக் குழு கூட்டங்களில் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஅவர்கள் வலியுறுத்தினார். பொறுப்பான அதிகாரிகளின்…

தேசிய பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இரண்டு இராஜாங்க அமைச்சுகளின் கீழ் ….

தேசிய பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதுவரை இருந்துவந்த தேசிய பாதுகாப்பு, இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு தேசிய பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் என இரண்டு இராஜாங்க அமைச்சுக்களின் கீழ் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.

சவால்களை வெற்றிகொண்டு சுற்றுலாத் துறையின் புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் – சுற்றுலா தொழில்முயற்சியாளர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு…

தற்போதுள்ள கோவிட் -19 நிலைமைகளுக்கு மத்தியில் பொது மக்கள் பாதுகாப்புக்கு விதிக்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளைத் தவிர சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுலா துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இலக்காக இருப்பதால், சவால்களை வெற்றிகொண்டு இந்த தொழிற்துறையின் ஒரு புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களிடம் தெரிவித்தார். சுற்றுலாத் துறை அபிவிருத்தி குறித்து இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற…

இலங்கை உலகளாவிய மாற்றங்களுடன் வேகமாக தகவமைதல் வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்து…

தனியார் துறை, அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுங்கள் … கல்வித் துறை எதுவானாலும் அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவு … உயர் சாதனையாளர்களை ஈர்க்க பல்கலைக்கழகங்கள் போட்டித் தன்மையுடன் செயற்பட வேண்டும் …. கல்வித் துறையை திட்டமிட்டு நிர்வகிக்க பல்கலைக்கழகங்களுக்கு சுதந்திரம் … உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கை வேகமாக தகவமைதல் வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார். “நாங்கள் பின்தங்கியிருக்க முடியாது. விரைவாக…

பேராசிரியர் சன்ன ஜயசுமன பதில் சுகாதார அமைச்சராக நியமனம் …

            ரொஷான் ரணசிங்கவுக்கு புதிய இராஜாங்க அமைச்சுப் பதவி… சுகாதாரத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் மீண்டும் சேவைக்கு திரும்பும் வரை பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார். பதில் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜயசுமன இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பேராசிரியர் சன்ன ஜயசுமன மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார். திரு. ரொஷான்…

ஜப்பானிய அரசு பொலிஸ் திணைக்களத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு …

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு ஜப்பான் அரசு நன்கொடையாக வழங்கிய 31 ஜீப் வண்டிகள், 04 பேருந்துகள் மற்றும் 10 வேன்கள் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இந்த வாகனங்களை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிர சுகியாமா கையளித்தார். ஜனாதிபதி அவர்கள் வாகனங்களைப் பார்வையிட்டதுடன், தூதுவருடன் சுமுகமாக கலந்துரையாடினார். இலங்கை பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணை நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் ஜப்பான் அரசு இந்த நன்கொடையை வழங்கியுள்ளது. ரூ.1250 மில்லியன்…

“கெகுலு துரு உதானய” சிறுவர் மர நடுகை தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் …

“கெகுலு துரு உதானய” சிறுவர் மர நடுகை தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (15) முற்பகல் கம்பளை அட்டபாகை விமலதர்ம தேசிய பாடசாலை வளாகத்தில் ஆரம்பமானது. நாட்டில் ஒவ்வொரு வருடமும் முதலாம் வகுப்பில் சேரும் பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ஆகும். அவர்களை சூழலை நேசிக்கும் பிரஜைகளாக மாற்றுவதும் “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டம் அறிமுகப்படுத்திய நிலையான சூழல் கொள்கைக்கு ஏற்ப எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழல்…

கிராமத்தைப் போலவே கிராம வாழ்க்கையும் அழகாக இருக்க வேண்டும் – மீமுரே “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு

கிராமவாசிகளினால் சூழலுக்கு எந்தத் தீங்கும் இல்லை… “கிராமம் அழகானது. அது போலவே கிராம வாழ்க்கையும் அழகாக இருக்க வேண்டும் ”என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கிராமவாசிகளினால் கிராமப்புற சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவது இல்லை. கிராமவாசிகள்தான் இதுவரை கிராமச் சூழலைப் பாதுகாத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நமது மூதாதையர்களின் காலத்திலிருந்து பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய நடவடிக்கைகளை சூழலுக்கு தீங்கு விளைவிப்பவையாக நான் காணவில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (13) முற்பகல் கண்டி மாவட்டத்தில்…

எல்லா கருத்துக்களுக்கும் பதிலளிக்கச் செல்வதால் வேலை செய்வதற்கான காலம் விரயமாகிறது – விமர்சனங்கள் சகஜமானவை என கருதி நாட்டை வழிநடத்துங்கள்

நாம் வைத்துள்ள நம்பிக்கையில் எவ்வித குறைவும் இல்லை, எப்போதும் எமது ஆசீர்வாதம் உள்ளது…                                 பௌத்த ஆலோசனை சபை ஜனாதிபதியிடம் தெரிவிப்பு… எல்லோருடையவும் எல்லா கருத்துக்களுக்கும் பதிலளிக்கச் செல்வதன் மூலம் வேலை செய்வதற்கான பெறுமதியான நேரம் விரயமாகிறது. விமர்சனங்களை நியாயமாகக் கருதி சுய சிந்தனையுடன் நாட்டை வழிநடத்துவதே தேவை என பௌத்த ஆலோசனை சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்துள்ளது. பட்டம் பதவிகள் கிடைக்காத சிலர் என்ன சொன்னாலும், மகா சங்கத்தினரும் மக்களும் ஜனாதிபதி அவர்கள்…