Month: பிப்ரவரி 2021

தீகவாபி சைத்தியவின் புனரமைப்புக்காக நிதி திரட்டும் “தீகவாபிய அருண“அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் …

தீகவாபி சைத்தியவின் புனரமைப்புக்காக நிதி திரட்டும் “தீகவாபிய அருண” நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் இன்று (12) முற்பகல் கொழும்பு 07 இல் உள்ள ஸ்ரீ சம்போதி விஹாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புனித இடங்களில் ஒன்றான தீகவாபி நாட்டின் நான்காவது பெரிய தாகபையை கொண்டுள்ளது. புத்தரின் புனித சின்னம் பிரதிஷ்டை செய்யப்பட்டு மன்னர் சத்தாதிஸ்ஸவினால் இந்த சைத்திய நிர்மாணிக்கப்பட்டது. தீகவாபி விகாரையின் தலைமை தேரர் சங்கைக்குரிய மஹஓய சோபித…

நாரஹேன்பிட “State Trust Center” (ரஜவாச) வர்த்தக கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி திறந்துவைத்தார்…

நாரஹேன்பிட பொருளாதார மத்திய நிலைய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “State Trust Center” (ரஜவாச) வர்த்தக கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) முற்பகல் திறந்து வைத்தார். இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கண்காட்சிகூடம் விரிவுபடுத்தப்பட்டு “ரஜவாச” வர்த்தக கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது 78 அரச மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களைக் கொண்டுள்ளது. “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்திற்கு அமைவாக, அரச தொழில்முயற்சியாளர்களினதும் சுதேச உற்பத்தியாளர்களினதும் தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒரே…

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விஜயம்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) முற்பகல் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் சபைக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளை செவிமடுத்தார். புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டத் தொடரில் உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி அவர்கள் சபைக்கு வருகைதந்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

புதிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கு நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன. அவர்களின் பெயர் விபரங்கள்                                        முன்னர் வகித்த பதவிகள் 01- செல்வி என்.கே.டி.கே. ஐ. நானாயக்கார –                     மாவட்ட நீதிபதி 02- திரு. ஆர்.எல். கொடவெல –                                             மாவட்ட நீதிபதி 03- திரு. வி. ராமகமலன் –                                                     மாவட்ட நீதிபதி 04-…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு முறைமையின் கீழ் மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை வழங்கும் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. முழு கல்வி முறையையும் தற்காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் மயமாக்குவதற்கான “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக மக்கள் வங்கியின் உதவியுடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மக்கள் வங்கி ரூ. 03 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இணைய இணைப்பு, மென்பொருள் பொதி மற்றும் 4 வருட…

காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாதிரி வர்த்தக கூடங்களை ஜனாதிபதி பார்வையிட்டார்…

கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாதிரி வர்த்தக கூடங்களை இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பார்வையிட்டார். காலி முகத்திடலை மையமாகக் கொண்ட அபிவிருத்தி திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக இந்த வர்த்தக கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இலங்கை கடற் படை புதிய திட்டத்தின் படி இந்த மாதிரி வர்த்தக கூடங்களை வடிவமைத்துள்ளது. காலி முகத்திடலுக்கு அழகு சேர்க்கும் வகையில் இந்த வர்த்தக கூடங்களை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன,…

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது ஒரு அரசியல் நாடகமோ அல்லது ஊடக காட்சிப்படுத்தலோ அல்ல …

மக்களிடம் செல்லாமல் அதிகாரிகளின் மூலம் மட்டுமே பிரச்சினைகளை கண்டறிவது எனது கொள்கை அல்ல ….                   திக்கெல்லகந்த ‘கிராமத்துடன் உரையாடலில்‘ ஜனாதிபதி தெரிவிப்பு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவுகளை சாட்டாக பயன்படுத்தி தவறு செய்பவர்களுக்கு இடம் கிடையாது … மக்கள் பணிகளுடன் மக்களிடம் செல்லுங்கள் – இளம் மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் … பொருளாதாரத்தை வலுப்படுத்தாமல் தேசியத்தை பாதுகாக்க முடியாது …. மாலிபொட நகரத்திற்கு முறையான திட்டமிடல் மற்றும் வீட்டுத் திட்டம் மக்களிடம் வந்து பிரச்சினைகளைத்…

தெற்காசியாவின் மிக நீளமான “நீர்ப்பாசன சுரங்கப்பாதை” நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்…

28 கி.மீ நீளமுள்ள தெற்காசியாவின் மிக நீளமான “நீர்ப்பாசன சுரங்கப்பாதை” நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (05) முற்பகல் அனுராதபுரம், பலுகஸ்வெவவில் ஆரம்பித்து வைத்தார். 5,000 குளங்களை புனரமைக்கும் ‘நீர்ப்பாசன சுபீட்சம்’ திட்டத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் வட மத்திய மாகாண பிரதான கால்வாய் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் இந்த சுரங்கப்பாதை நிர்மாணிக்கப்படுகிறது. மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் 6 வது மற்றும் இறுதி திட்டமாக வட மத்திய மாகாண பிரதான கால்வாய் திட்டம்…

நீங்கள் கேட்ட தலைவர் என்ற வகையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை குறைவின்றி நிறைவேற்றுவேன் – சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி உறுதியளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்ட, உதவி ஒத்தாசைகள் வழங்கிய எவரும் சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கப்பட மாட்டாது நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வெளிநாட்டினருக்கு விற்கப்பட மாட்டாது பௌத்த போதனைகளுக்கு அமைவாகவே நாட்டின் நிர்வாகம் ”நீங்கள் கேட்ட தலைவர் நான். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தேசிய சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களிடம் உறுதியளித்தார். ”வரலாறு முழுவதும், வலுவான நாகரிகங்கள் கட்டியெழுப்பப்பட்டதும், நாடுகள் அபிவிருத்தி…

இலங்கையின் 73வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரத்தை வென்றெடுக்க பல்வேறு தியாகங்களைச் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாயர், பரங்கியர் போன்ற பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் இன்றைய தினம் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். அதேபோன்று, தேசத்தின் சுதந்திரத்திற்காகவும், இறைமைக்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்த, பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்த படைவீரர்களையும் நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். சுதந்திரம் பெற்ற 73 ஆண்டுகளில், ஒரு தேசமாக நாம் பல்வேறு சவால்களுக்கு முகம்…