Day: April 25, 2021

எதிர்வரும் இரு வாரங்கள் அனைத்து அரச தனியார் விழாக்களையும் நிறுத்த அரசாங்கம் தீர்மானம்….

இன்று (25) முதல் எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோன்று எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த தனியார்துறையின் அனைத்து விழாக்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களின் கீழ் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட் 19 நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

கொவிட் நோய்த் தொற்று பிரச்சினைக்கு தீர்வு தடுப்பூசி : அரசாங்கம் அதற்குத் தயார்…

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் பொறுப்பு – ஜனாதிபதி       தெரிவிப்பு. கொவிட் 19  நோய்த் தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும். மக்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது. இந்த சவாலை சிறப்பாக வெற்றிகொள்வதற்கு கொவிட் நோய்த் தொற்று பரவிய முதல் சுற்றின்போது செய்ததைப் போன்று சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ள அனைத்து சட்டதிட்டங்கள், வழிகாட்டல்களை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். உலக சுகாதார தாபனம்…