Month: மே 2021

ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருப்பதற்கு ஜனாதிபதி தீர்மானம்…

அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்கு நடமாடும் சேவை…  தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக… ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். கொவிட் தடுப்பு விசேட குழு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி அவர்கள் இத்தீர்மானத்தை எடுத்துள்ளார். பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும்…

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு…

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஒரு முறையான திட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் இணைத்து, விரிவான பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். ஆரோக்கியமான உற்பத்தித்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத்தன்மையற்ற உணவை பெற்றுக்கொள்வதற்கான மக்களின் உரிமை “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனை யதார்த்தமாக்குவதற்கு நாட்டின் விவசாய துறையை முழுமையாக சேதனப் பசளைக்கு…

புதிய சட்ட மா அதிபர் பதவிப்பிரமாணம்…

புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சஞ்செய் ராஜரத்னம் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். திரு.சஞ்செய் ராஜரத்னம் நாட்டின் 48வது சட்ட மா அதிபராவார். சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 34 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள திரு.ராஜரத்னம், அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல், சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக பதவி…

“எம்வீ எக்ஸ் – பிரஸ்  பர்ள்” (MV X- Press Pearl) கப்பலின் மூலம் சமுத்திர சுற்றாடல் முறைமைக்கு  ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு ஜனாதிபதியின் பணிப்புரையில் பல நடவடிக்கைகள்…

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான எம்வீ எக்ஸ் – பிரஸ் பர்ள் கப்பலின் மூலம் சமுத்திர சுற்றாடலுக்கும் கடற்கரைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வழங்கிய பணிப்புரையின் பேரில் சமுத்திர சுற்றாடல் அதிகாரசபை, பாதுகாப்புத்துறை மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து விரிவான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கப்பலை சூழவுள்ள கடற்பகுதியில் எண்ணெய் பரவக்கூடிய நிலை ஏற்பட்டால் தற்போதைய காலநிலைக்கு முகங்கொடுத்து அதனை குறைப்பதற்கு அதிக கவனம்…

“சைனோபாம்” இரண்டாவது தொகுதி தடுப்பூசிகள்,  இன்று முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு…

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் இரண்டாவது தொகுதி “சைனோபாம்” தடுப்பூசிகளை இன்று முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார். அந்த வகையில் சுகாதார துறைகளின் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளித்து, நாட்டின் சில மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5 இலட்சம் தடுப்பூசிகளுடன் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.869 விமானம் இன்று (26) அதிகாலை 12.05க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கான சீன…

புனித வெசக் நோன்மதி தினச் செய்தி   

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசக் நோன்மதி தினம் பௌத்தர்களான எமது அதி உன்னத சமய பண்டிகையாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த புனித நாளில், புத்த பெருமான் மீதான பக்தியுடனும் பற்றுறுதியுடனும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர். புத்த பெருமானின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்க்கையை வடிவமைத்து ஈருலக முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பிள்ளைகளுடன் சேர்ந்து வெசக் காலத்தில் சமயச் சடங்குகளை செய்வதும் பழங்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் எமது…

பசுமை சமூக பொருளாதாரத்திற்கான வீதி வரைவு திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு…

காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளைக்கொண்ட பசுமை சமூக பொருளாதாரம் ஒன்றுக்காக திட்டமிடப்பட்ட வீதி வரைவு திட்டம் அமைச்சர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளைக்கொண்ட பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகளுடன் நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இத்திட்டங்கள் கையளிக்கப்பட்டது. உரப்பாவனை, நிலம், உயிர்ப்பல்வகைமை, கழிவு முகாமைத்துவம், வளிமண்டலம், கைத்தொழில், மீள்ப்பிறப்பாக்க சக்திவலு, நகர் மற்றும் சுற்றாடல் கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அடைந்துகொள்ள வேண்டிய…

ஓய்வுபெறும் சட்ட மா அதிபர் ஜனாதிபதியை சந்தித்தார்…

ஓய்வுபெறும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். திரு. தப்புல டி லிவேராவின் சேவையை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அவரது ஓய்வு வாழ்க்கைக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். திரு. தப்புல டி லிவேரா, நாட்டின் 47வது சட்ட மா அதிபர் ஆவார். பதில் சொலிஸிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் புதிய சட்ட மா அதிபராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.  

பயணக் கட்டுப்பாடு ஜூன் 07 வரை நீடிப்பு…

மே 25, 31 மற்றும் ஜூன் 04 ஆகிய தினங்களில் பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும்… கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் தினங்களில் அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு வீட்டிலிருந்து ஒருவர் அண்மையில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு செல்வதற்கு அனுமதி… மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதை இலகுபடுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் நடமாடும் விற்பனை வாகனங்கள்… ஜூன் 07 வரை மதுபானக் கடைகள் முழுமையாக மூடப்படும்… பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோர் குறித்து தகவல்களை கண்டறிவதற்கு ட்ரோன் தொழிநுட்பத்தை பயன்படுத்தி…

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் போது மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாதிருக்க ஜனாதிபதியினால் பல தீர்மானங்கள்

கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக இன்று (21) இரவு 11.00 மணி முதல் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கும் போது மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாதிருக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார். கோவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் விளக்கினார். பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் காலப்பகுதியில் தொழிற்சாலைகளை தொடர்ச்சியாக நடத்திச் செல்லுதல், மருந்தகங்களை…