Month: ஜூன் 2021

ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை நோக்கமாகக் கொண்டு சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை…

ஜனாதிபதி மகா நாயக்க தேரர்களிடம் தெரிவிப்பு… ஜனாதிபதி முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மகா சங்கத்தினர் பாராட்டு… ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை நோக்கமாகக் கொண்டு, சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அஸ்கிரிய மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, விவசாயிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இரசாயனப் பசளை பயன்பாட்டின் காரணமாக, நாட்டின் பல…

இலங்கையின் தடுப்பூசி கொள்வனவு கொள்முதல் நடைமுறைகளுக்கு உலக வங்கி பாராட்டு…

வைத்தியசாலைகளின் ஊடாக தடுப்பூசி ஏற்றுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்மொழிவு… கொவிட் ஒழிப்பு தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் கொள்முதல் நடைமுறைகளில், இலங்கை பின்பற்றும் முறைமை குறித்து, உலக வங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும்போது பின்பற்றப்படும் வெளிப்படைத்தன்மை மற்றும் முறைமை காரணமாக, தெற்காசிய நாடுகளில் உள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தை முன்னிலையில் உள்ள நிறுவனமாக உலக வங்கி அடையாளப்படுத்தியுள்ளதென, கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இதற்காக வழங்கப்படும்…

ஜனாதிபதி அவர்கள்  நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

சங்கைக்குரிய மகா சங்கத்தினர்களே! சமயத் தலைவர்களே! இலங்கைவாழ் சகோதர, சகோதரிகளே! நண்பர்களே! அன்பின் பிள்ளைகளே! எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.8 மில்லியன் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அபிவிருத்தியடைந்த நாடுகள், தற்போது அதன்…

போதாகம சந்திம தேரரினால் கொவிட் ஒழிப்பு மருத்துவ, சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு…

களனி, பொல்லேகல மானெல்வத்த விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய போதாகம சந்திம தேரர், 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொவிட் ஒழிப்பு மருத்துவ, சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களை அன்பளிப்புச் செய்துள்ளார். இன்று (25) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம், தேரர் அவர்கள் இந்த உபகரணங்களைக் கையளித்தார். இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, அரச மருத்துவ அதிகாரிகள்…

ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச பொசன் விழா…

மிஹிந்தலை புண்ணிய பூமி ஜனாதிபதியினால் ஒளியேற்றப்பட்டது… அரச பொசன் விழா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்தலை புண்ணிய பூமியில் இன்று (24) இடம்பெற்றது. இவ்வருட பொசன் நோன்மதித் தினத்துடன், மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகைத் தந்து 2329 வருடங்கள் நிறைவடைகின்றன. “உலகவாழ் அனைத்து மக்களுக்கும் நலம் கிட்டும்” என்பதே இவ்வருட அரச பொசன் விழாவின் கருப்பொருளாகும். மிஹிந்தலை புண்ணிய பூமியை மையமாகக் கொண்டு, 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி…

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை…

ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை நாளை (25) இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒளி / ஒலிபரப்பு செய்யப்படும்.

ஜனாதிபதி அவர்களின் பொசன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி

உன்னதமான தேரவாத பௌத்த போதனைகளைச் சுமந்துகொண்டு எமது நாட்டுக்கு வருகைதந்த மஹிந்த தேரரின் வருகையை நினைவுகூரும் பொசன் நோன்மதி தினம், இலங்கை வாழ் பௌத்தர்களால் மறக்க முடியாத ஒரு பெறுமதியான நாளாகும். பொசன் நோன்மதி தினத்தில், புத்த பெருமானின் உயர்ந்த பண்புகளை நினைவுகூர்ந்து, மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு, மஹிந்த தேரருக்கு எங்கள் நன்றியைத் தெரிவிப்பது, பழங்காலத்திலிருந்தே நாம் மேற்கொண்டு வரும் வழக்கமாகும். மஹிந்த தேரர்,  புத்த பெருமான் போதித்த ஞானத்தை எடுத்துரைக்கும் வகையில், தேவனம்பியதிஸ்ஸ…

ஜூன் 21முதல் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்…

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடரும்… கொவிட் அல்லாத மரணங்களுக்கு, 24 மணி நேரத்துக்குள் இறுதிக் கிரியை நடத்த அனுமதி… ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், உரிய  அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஜூன் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை, முன்னர் போன்று…

சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்தியா உதவி…

“சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரச கட்டிடங்கள், சமய ஸ்தாபனங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வீடுகளின் பங்களிப்பைப் பெற்று, சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய திட்டமாகும். இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் வீடுகளுக்கான பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரச நிறுவனங்களில் மின்சாரத்துக்காக செலவாகும் அதிக தொகையைக்…

உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் சத்தியப்பிரமாணம்…

மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில், இன்று (14) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக, மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவும் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஷி மஹேந்திர, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.