Archives

அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் இன்று நள்ளிரவு முதல் பிரகடனம்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் iiஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை…

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செப்டெம்பர் 06 அதிகாலை 4.00 மணி வரை…

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு நிலைமையை, செப்டெம்பர் 06ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இன்று (27) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்போது, தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதோடு, இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பிரதேசங்கள் காணப்படுமாயின், அவர்களுக்குத்…

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை முன்வைக்க ஆலோசனை சபை …

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கு ஏற்ப, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் ஆலோசனை சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்தார். முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான இந்த ஆலோசனை சபையின் ஏனைய உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆர்.ஹெய்யந்துடுவ மற்றும் ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

“நாட்டின் முன் எத்தகையச் சவால்கள், தடைகள் இருந்தாலும், நாம் கைவிட முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன…”

தலதா பெரஹர நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு   நாட்டின் முன் எத்தகையச் சவால்கள், தடைகள் இருந்தாலும், நாம் கைவிட முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அவற்றில், புனித தந்த தாதுவுக்காக நடத்தப்படும் புனித கிரியைகளுக்கு முதலாவது இடம் வழங்கப்படும் மரபு, பழங்காலத்திலிருந்தே ஆட்சியாளர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்றும், ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். வரலாற்று முக்கியத்துவமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா, இம்முறையும் மிக வெற்றிகரமாக நடத்தப்பட்டு…

ஜனாதிபதி  தலதா மாளிகையில் புனித தந்தத்தை வழிபட்டு ஆசிர்வாதம் பெற்றார்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (22) பிற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டு, புனித தந்தத்தின் ஆசிர்வாதங்களைப் பெற்றார். தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை தியவடன நிலமே நிலங்க தேல அவர்கள் வரவேற்றார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இறுதி ரந்தோலி பெரஹர நேற்று (22) வீதி உலா வந்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் அயோமா ராஜபக்ஷ அம்மையார் ஆகியோர் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பிருந்து …

ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

சங்கைக்குரிய மஹா சங்கத்தினர்களே, மதத் தலைவர்களே, நண்பர்களே, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம்வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தான், இலங்கைக்குத் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்காக, கடந்த காலங்களில் நான் விசேட ஆர்வம் காட்டியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்களுடன், இது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் உரையாடினேன். மேலும் பல நாடுகளின் அரச தலைவர்களுக்கு, நான் தனிப்பட்ட ரீதியில்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி…

  தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறக்கூடாது என்று கடுமையாக அறிவுறுத்தல் அத்தியாவசிய மற்றும் ஏற்றுமதிச் சேவைகள் தொடரும் இன்று (20) இரவு 10.00 மணி முதல் இம்மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை, நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை இலக்காகக் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், செப்டம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர்,…

அமைச்சரவையில் மாற்றங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால், இன்றைய தினம் (16) கீழ்க் காணப்படும் வகையில், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.   ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன அவர்கள் – கல்வி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அவர்கள் – போக்குவரத்து அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் – சுகாதார அமைச்சர் காமினி லொக்குகே அவர்கள் – மின்சாரத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவர்கள் – ஊடகத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் – இளைஞர்…

தொற்றா நோய்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துங்கள்… சுகாதார அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களில் இடம்பெற்ற மரணங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்  என்றும் இவர்களில் அதிக சதவீதத்தினர் 60 வயதுக்கு மேற்பட்ட, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும்…