Archives

ஆழமாக சிந்தித்து வழங்கப்பட்ட நியமனங்களை எந்தவொரு அழுத்தங்கள் காரணமாகவும்  மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது  –  ஜனாதிபதி தெரிவிப்பு

அண்மையில் ஜனாதிபதி அவர்கள் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை செயற்படுத்துவதற்காக மிகவும் சிறந்த விடயங்களை கருத்திற்கொண்டே வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று நியமிக்கப்பட்டவர்களின் தேசப்பற்று, தகைமைகள் மற்றும் பின்புலம் பரீட்சிக்கப்பட்டு சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கையை சிறப்பாக முன்னெடுப்பதற்கு இயலுமான வகையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். ஆழமாக சிந்தித்து நியமிக்கப்பட்ட…

சிக்கலற்ற காணிகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் காணி உறுதிப்பத்திரம்

– ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை காணிக் கொள்கை சீர்திருத்தப்படும் காணி அபிவிருத்தியின் பின்னர் வேறு ஒருவருக்கு கைமாற்ற முடியாது பயன்படுத்தப்படாத LRC காணிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகள் மக்கள் பயன்படுத்தி வருகின்ற சிக்கலற்ற காணிகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். பல்வேறு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது காணி உறுதிப்பத்திரம் இல்லாமையே மக்கள் முன் வைத்த மிக முக்கிய பிரச்சினை…

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில்

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “நாட்டுக்காக வேலை” கலாசாரத்தை உருவாக்குவதற்காக 60,000 பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு அடையாள ரீதியாக நியமனங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 25 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எளிமையான இந்நிகழ்வு இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 50,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரி இருந்தாலும் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் 60,000 பேரை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.…

தனிப்பட்ட விழாக்களுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என வேண்டுகோள்

மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தவும் கீழ் மட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது அன்றாட பணிகளுக்கு மேலதிகமாக முன்னுரிமை அளித்திருப்பதால், தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காக நேரத்தை செலவிடுவதினால் விழாக்கள், பரிசளிப்பு நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள நேரம் இல்லாத காரணத்தினால் அத்தகைய சந்தர்ப்பங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என அனைவரிடமும் அன்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது நேரத்தை முழுமையாக மக்களின் முன்னேற்றத்திற்காக…

நாட்டின் அனைத்து வீதிகளும் நான்கு வருடங்களில் புனர்நிர்மாணம் செய்யப்படும்

செயற்திறமாக பங்களிப்பு செய்து தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்வாருங்கள்.                 –  மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் அனைத்து வீதிகளையும் அடுத்த நான்கு வருட காலப்பகுதியில் புனர்நிர்மாணம் செய்தவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். பல மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு செயற்திறமாக பங்களிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார். மாவட்ட…

வறுமையை ஒழிப்பதற்காக குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் செப்டெம்பர் 02இல் ஆரம்பம்

தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம். வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 02ஆம் திகதி ஆரம்பம். அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு. எவ்வித கல்வித் தகைமையும் இல்லாத அல்லது க.பொ.த சாதாரண தரத்தை…

“பின்னோக்கி செல்ல மாட்டேன் எடுத்த தீர்மானங்களை நிலையான கொள்கையிலிருந்து செயற்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைப்பேன்”

                 –  வாழ்க்கைச் செலவு உப குழுவிற்கு ஜனாதிபதி தெரிவிப்பு. மரக்கறி, தேங்காய் நேரடியாக நுகர்வோரின் கைகளுக்கு…. பொருளாதார மத்திய நிலையங்களை சரியான பொறிமுறையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை… முன்வைத்த காலை பின்வைக்காது, எடுத்த தீர்மானங்களை நிலையான கொள்கையிலிருந்து செயற்படுத்தி வாழ்க்கைச் செலவை குறைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். உள்நாட்டு விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாக மஞ்சல்…

இரண்டு மாகாண ஆளுநர்கள் இடமாற்றம்

வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம்.முஸம்மில் அவர்கள் ஊவா மாகாண ஆளுநராக இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகொல்லுரே அவர்கள் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.  

அல்தயர் வதிவிட மற்றும் வர்த்தக கட்டிடத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்

பேர வாவிக்கு முன்னாள் நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்தயர் வதிவிட மற்றும் வர்த்தக கட்டிடத்தை நேற்று (31) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பார்வையிட்டார். இக்கட்டிடத்தின் பணிகள் நிறைவுபெற்றதும் கொழும்பில் உள்ள உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றாக அல்தயர் கட்டிடமும் இருக்கும். பேர வாவியுடன் இணைந்ததாக இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இக்கட்டிடத்தின் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்டிடத்தின் நிலமாடி 40,000 சதுர அடிகளை கொண்டதாகும். 404 அதி சொகுசு வீடுகளையும் உயர்தரமான கடைத் தொகுதிகளையும் இது…

கோட்டே ரஜமகா விகாரை வருடாந்த பெரஹரவின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

வரலாற்று முக்கியத்துவமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விகாரையின் வருடாந்த ஸ்ரீ தலதா மகா பெரஹர நேற்று (29) இரவு வீதி உலா வந்தது. விகாரைக்கு புனித தந்தம் அடங்கிய பேழையை கொண்டு வரும் நிகழ்வு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் அனுசாசன உரையை நிகழ்த்தினார். விகாராதிபதி சங்கைக்குரிய அளுத்நுவர அனுருத்த தேரர் சமயக்…