Archives

‘சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்று தீவிரமாக ஆராயுங்கள்’

நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில், அந்தந்தத் துறையினர் ஆராய்ந்துப் பார்க்க வேண்டுமென்று, கொவிட் ஒழிப்புச் செயலணி வலியுறுத்தியது. தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அதனால், மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தாதிருக்க, சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவது கட்டாயமென்று, சுகாதாரத் தரப்பு சுட்டிக்காட்டியது. நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற கொவிட் ஒழிப்புச்…

சிறுவர்தின வாழ்த்துச் செய்தி

தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளன. பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன, இன்னமும் எமது பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன. எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ள அந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும், மிகவும் பாதுகாப்பாக மீளப் பெற்றுக் கொடுப்பதே, அரசாங்கத்தின் முதல் கடமையாக உள்ளது. சிறுவர்களின் உலகத்தை அவர்களுக்கு மிக விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கே. எங்களுடைய ஒட்டுமொத்தத் திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. தமது பிள்ளைகள் மிகச் சிறந்தவர்களாக…

பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம்

ஐ.நா சக்திவலு தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு புவியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் சக்திவலு தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் ஓர் அங்கமாக, நியூயோர்க் நகரில் நேற்றைய…

நாடு திறக்கப்படும்போது பிறப்பிக்கப்படும் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் முழுமையான திட்டம்

 புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் பொருளாதாரத்தை இயக்குவோம்…  பாடசாலைகளைத் திறப்பது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு…  சுற்றுலா வலயங்களுக்கு அருகில் ஆயுர்வேத கொவிட் சிகிச்சை நிலையங்கள்…  ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக சுதேச மருந்துப் பொதி விநியோகிக்க ரூ.6,000 மில்லியன்…  தாமதமின்றி விமான நிலையத்தில் PCR பரிசோதனை… நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்கி நாட்டை மீண்டும் திறக்கும் போது பிறப்பிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை,…

செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 20 வருடப் பூர்த்தி விசேட நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களை இலங்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் 20 வருடப் பூர்த்தியையொட்டி, அமெரிக்காவின் மேன்ஹெடனில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார். 2001 செப்டெம்பர் 11ஆம் திகதியன்று, நியூயோர்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையம் மற்றும் வொஷிங்கடனின் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் ஆகியவற்றை இலக்கு வைத்து, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஐக்கிய நாடுகள்…

உலக நலனுக்காக உணவுக் கட்டமைப்பை நிலையானதாக மாற்ற வேண்டும்

 நிலையான உணவுக் கட்டமைப்பானது, இலங்கையின் வளமான சமூகக் கலாசாரம் மற்றும் பாரம்பரியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும்…  உலகுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வது, அனைத்து அரச தலைவர்களதும் நோக்கமாக இருக்க வேண்டும்…  நாங்கள் முகங்கொடுக்கும் சவால்கள் உலகளாவியன என்பதால், அவற்றுக்குத் தீர்வுகாண ஒன்றாகச் செயற்படுவோம்…  சேதன விவசாயத்துறை ஊக்குவிப்புக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகளை, இலங்கை அன்புடன் வரவேற்கிறது… உலகளாவிய சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு, உணவுக் கட்டமைப்பை மிகச் சிறந்த நிலையான…

கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல், சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலுக்குத் தீவிரம் காட்டுங்கள்

 நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 12-19 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை…  கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், நாளை (24) முதல் தடுப்பூசி ஏற்றல்…  தடுப்பூசி ஏற்றப்படும் அனைத்துச் சிறுவர்களும், சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்களால் கண்காணிக்கப்படுவர்…  வைத்தியசாலைகளுக்குள் மாத்திரமே தடுப்பூசி ஏற்றல்…  தடுப்பூசி தொடர்பில் உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் பரிமாறிக்கொள்ளுங்கள்…  சிக்கல்கள் இருப்பின், விசேட நிபுணர்களைத் தொடர்புகொள்ளுங்கள்… – ஊடகங்களிடம் விசேட கோரிக்கை கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல், தமது பிள்ளைகளுக்குத்…

செய்கடமை COVID – 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்தால் ரூ. 100 இலட்சம் நன்கொடை

லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து, செய்கடமை COVID – 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு, 100 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. அதற்கான காசோலை, இம்மாதம் 21ஆம் திகதியன்று முற்பகல், குறித்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி தீப்தி லொக்குஆரச்சி அவர்களினால், ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளரும் பணிக்குழாம் பிரதானியுமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ.எகொடவெல அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களும், இந்த அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு, நன்கொடைகளை வைப்புச் செய்து வருகின்றனர். காசோலை அல்லது…

ஐ.நா சபையில் ஜனாதிபதியின் உரை

தலைவர் அவர்களே, செயலாளர் நாயகம் அவர்களே, அரச தலைவர்களே, கௌரவத்துக்குரிய உறுப்பினர்களே, அனைவருக்கும் வணக்கம்..! இன்று நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளக் கிடைத்தமையிட்டு, நான் பெருமையடைகிறேன். 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மேதகு அப்துல்லா ஷாஹிட் (Abdulla Shahid) அவர்களுக்கு, என்னுடைய வாழ்த்துகளை முதற்கட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். தலைவர் அவர்களே, நீங்கள் இலங்கையின் நீண்டகால நண்பராக இருக்கிறீர்கள். எதிர்வரும் காலங்களிலும், உங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிப் பணியாற்ற நாங்கள்…

இலங்கை மற்றும் லாட்வியா குடியரசுக்கு இடையில் இருதரப்பு தொடர்புகளை முன்னேற்ற இரு நாடுகளினதும் அரச தலைவர்கள் அவதானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் (Egils Levits) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரினது அரச தலைவர்கள் மாநாட்டுக்கு மத்தியில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருபத்து ஐந்து வருடகால தூதரகத் தொடர்புகளைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்காக, பலமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பது, இரு அரச தலைவர்களதும் கருத்தாக அமைந்திருந்தது. கொவிட் தொற்றுப்…