“அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகள்” தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்…
அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில், ஜனாதிபதி அவர்கள் இன்று (01) முற்பகல் மிரிஹானவில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் ஒரு மஞ்சள் கன்றை நாட்டினார். வீட்டின் மஞ்சள் தேவையை தங்கள் சொந்த வீட்டுத் தோட்டத்திலிருந்து பூர்த்தி செய்வதற்காக, ஒரு குடும்பத்திற்கு 05 மஞ்சள் கன்றுகள் வீதம் 15 லட்சம் குடும்பங்களுக்கு கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன. உயர்தர கன்றுகளை…
ஜனாதிபதி அவர்களின் மே தின வாழ்த்துச் செய்தி
மக்களுக்கு உறுதியளித்தபடி எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் உறுதி செய்துள்ளது. மேலும், எமது பாரம்பரிய மரபுரிமைகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்தும் அதேநேரம், விவசாய பொருளாதாரத்தை அபிவிருத்திசெய்வதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை எமது சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான தெளிவான பொருளாதார திட்டத்தை நாங்கள் வகுத்து, முறையாக செயற்படுத்தி வருகிறோம். தற்போதைய கோவிட் 19 நோய்த்தொற்றினால் உலகில்…
ஜனாதிபதி அலுவலக சேவைகள் தொடர்பாடல் ஊடகங்களின் ஊடாக…
உருவாகியுள்ள கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நாளாந்த அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்த போதும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருவதன் சிரமத்தை கருத்திற்கொண்டு தொலைபேசி, தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க மற்றும் நிறைவேற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 வார காலப்பகுதியில், ஜனாதிபதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு…
சிரேஷ்ட ஊடகவியலாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ஜனாதிபதியின் ஊடக பேச்சாளராக நியமனம் …
சிரேஷ்ட ஊடகவியலாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ஜனாதிபதியின் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இருந்து அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். தனது 27 வருட ஊடக வாழ்க்கையில், பிரபல அறிவிப்பாளராக சிறந்து விளங்கிய அவர், ஒரு முன்னணி இலத்திரனியல் ஊடக அலைவரிசையில் நிகழ்ச்சி முகாமையாளராகவும், பணிப்பாளராகவும், பணிப்பாளர் நாயகமாகவும் மற்றும்…
இரசாயன உரங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றுவேன் … ஜனாதிபதி தெரிவிப்பு
எடுக்கப்பட்ட தீர்மானங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது … பேச்சுடன் மட்டுப்பட்டிருக்காமல், செயற்படுவோம் … சேதன உர உற்பத்தி மாவட்ட மட்டத்தில் ஊக்குவிக்கப்படும் … முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காமல் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை முழுமையாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இரசாயன உரங்களின் பயன்பாட்டிலிருந்து நீங்கிய எந்த நாடும் உலகில் இல்லாதிருப்பது இலக்கை அடைவதற்கு ஒரு தடையல்ல. பேசிப் பேசி இருக்காது…
ஜனாதிபதி மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் இருதரப்பு பேச்சுவார்த்தை…
இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் (Wei Fenghe) அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சீன பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்றனர். ஜனாதிபதி அவர்களுக்கும் தனக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக சீன பாதுகாப்பு அமைச்சர்…
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டிஆரச்சி நியமனம்…
சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டிஆரச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட சுதேவ ஹெட்டிஆரச்சி அவர்கள், எதிர்வரும் வாரத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான சுதேவ ஹெட்டிஆரச்சி, அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆவார். 25 வருடகால ஊடக வாழ்வில் பிரபலமான அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் முக்கிய ஊடக நிறுவனங்களில் உதவி முகாமையாளராகவும் முகாமையாளராகவும், உதவி பொது…
“கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்தை பார்வையிட ஜனாதிபதி ஹல்துமுல்லை விஜயம்…
“கிராமத்துடன் உரையாடல்” முதலாவது நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (26) முற்பகல் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை வெலங்விட கிராமத்திற்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். இதுவரை உரிய கவனத்தை பெற்றிருக்காத பின்தங்கிய கிராமிய மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அச்சந்தர்ப்பத்திலேயே அவற்றை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வுகளை வழங்கும் நோக்குடன் கடந்த செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. பதுளை மாவட்டத்தில்…
எதிர்வரும் இரு வாரங்கள் அனைத்து அரச தனியார் விழாக்களையும் நிறுத்த அரசாங்கம் தீர்மானம்….
இன்று (25) முதல் எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோன்று எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த தனியார்துறையின் அனைத்து விழாக்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களின் கீழ் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட் 19 நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் நோய்த் தொற்று பிரச்சினைக்கு தீர்வு தடுப்பூசி : அரசாங்கம் அதற்குத் தயார்…
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் பொறுப்பு – ஜனாதிபதி தெரிவிப்பு. கொவிட் 19 நோய்த் தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும். மக்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது. இந்த சவாலை சிறப்பாக வெற்றிகொள்வதற்கு கொவிட் நோய்த் தொற்று பரவிய முதல் சுற்றின்போது செய்ததைப் போன்று சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ள அனைத்து சட்டதிட்டங்கள், வழிகாட்டல்களை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். உலக சுகாதார தாபனம்…