உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. முதலாவது இடைக்கால அறிக்கை 2019 டிசம்பர் 20ஆம் திகதி கையளிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் 2019 செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.…
“முப்பது வருட மஹிந்தானந்தய” பாராட்டு விழா ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமவின் அரசியல் வாழ்வின் முப்பது வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று (01) பிற்பகல் கண்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் மேல் மாகாண ஆளுநர் சீத்தா அரம்பேபொல ஆகியோர் “நான் கண்ட மஹிந்தானந்த” என்ற தொனிப்பொருளில் விசேட உரையாற்றினர். “முப்பது வருட மஹிந்தானந்தய” நூல் மகாசங்கத்தினர், ஜனாதிபதி மற்றும்…
ஜனாதிபதியின் உருவப் படத்தை காட்சிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் புகைப்படம் அல்லது கையினால் வரையப்பட்ட அவரின் உருவப்படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வரையப்பட்ட உருவப்படம், ஓவியங்கள் (Portrait) மற்றும் புகைப்படங்களை கண்காணிப்பின்றி பாதையோரங்களில், பொது விழாக்கள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. தமது உருவத்தை வரையும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஜனாதிபதி அவர்கள், அதேவேளை அவ்வாறு செய்வதினை தவிர்த்துக்கொள்ளுமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனிநபர் பிரபல்யத்தை தான் விரும்பவில்லையென அவர் மேலும்…
ஜனாதிபதி வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (01) முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றார். அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், தேரரின் நலன் விசாரித்தறிந்தார். அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதித்தார். ஜனாதிபதி…
மெடரம்ப ஹேமரத்தன தேரருக்கு சன்னஸ் பத்திரம் வழங்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்
மல்வத்தை மகா விகாரையின் தென்னிலங்கை பிரதான சங்கநாயக்கர் பதவியைப் பெற்றுக்கொண்ட சங்கைக்குரிய மெடரம்ப ஹேமரத்தன நாயக்க தேரருக்கு சன்னஸ் பத்திரம் வழங்கும் புண்ணிய நிகழ்வு காலி உனவட்டுன யட்டகல ரஜமகா விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றது. சங்கைக்குரிய மெடரம்ப ஹேமரத்தன நாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் ஜனாதிபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், பிரதமரினால் விஜினிபத்த வழங்கி வைக்கப்பட்டது. முப்பது வருடகால தீவிரவாதம்…
பொலிஸ் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்
பொலிஸ் பிரிவுகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (28) பிற்பகல் பம்பலப்பிட்டி பொலிஸ் விளையாட்டரங்கில் மிக விமரிசையாக இடம்பெற்றது. 83வது தடவையாக இடம்பெற்ற இவ்விளையாட்டுப்போட்டி தடகள மற்றும் மைதான போட்டிகளை கொண்டமைந்திருந்தது. மூன்று நாட்களாக நடைபெற்ற இவ்விளையாட்டுப்போட்டியில் 60 பொலிஸ் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றினர். பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பதிற் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன…
உயர் செயற்திறன்மிக்க அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கிவைப்பு
பாராளுமன்றத்தின் அரச கணக்காய்வு குழு 2018ஆம் ஆண்டுக்கான நிதிக்கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கமைய செயற்படுதல் தொடர்பான உயர் தரத்திலான பெறுபேற்றை வெளிக்காட்டிய நிறுவனங்களை பாராட்டும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (28) முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அரச கணக்காய்வு குழு 2018ஆம் ஆண்டில் அரச, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் 844 ஐ மதிப்பீடு செய்துள்ளது. அதில் தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்கள் 109க்கு விருதுகள் வழங்கப்பட்டன. 55 நிறுவனங்கள் தங்க விருதுகளையும்,…
பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் சீனத் தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கையில் சீனாவின் தூதுவராக கடமையாற்றக் கிடைத்தமை, தனக்கு கிடைத்த கௌரவமாகும் என சீன தூதுவர் செங்க்சியுஆன் குறிப்பிட்டார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையில் இருந்து விடைபெற்றுச்செல்லும் முன் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் தனது பதவிக்காலத்தில் மறக்க முடியாத பல நினைவுகள் காணப்படுவதாக குறிப்பிட்ட தூதுவர், தனது புதிய பதவியிலும் இலங்கைக்கு தன்னாலான அனைத்து வித உதவிகளையும் செய்வதாக குறிப்பிட்டார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட…
மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு நேரடி விஜயம்
முதலாவது சந்திப்பு காலி உடுகம ஹோமாதொளையில்…. சில பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள்….. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட தொடரின் முதலாவது கூட்டம் காலி மாவட்டத்தில் உடுகம ஹோமாதொல, ராஜகிரி லென் விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றது. புள்ளி விபரங்களின்படி காலி மாவட்டத்தில் மிகவும் வறிய கிராமமான உடுகம ஹோமாதொள கொத்தலாவலபுர கிராமம் ஜனாதிபதி அவர்களினால்…
மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க வழி செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு
மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் மீன்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இப்பணிப்புரையை விடுத்தார். ஏற்றுமதி சந்தை தொடர்பாக, கொள்கை அடிப்படையில் புதிய திட்டங்களை வகுக்கும்போது ஏற்றுமதியாளர்கள், மீன்பிடிப்படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றின் மூலம் செயற்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் தெளிவூட்டினார். சட்டத்திற்கு…