Archives

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய் நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது. அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், ‘சுபீட்சத்தின் ஆண்டாக’ ஆக்கும் திடவுறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடனேயே வரவேற்கின்றது. எமக்கே உரித்தான தொலைநோக்கினை கொண்டவொரு தேசமாக கடந்தகாலத்தில் நாம் அடைந்த வெற்றிகள் ஏராளமானவை. அத்தகைய எமது தனித்துவ அடையாளங்களையும் திறன்களையும் நவீன தொழிநுட்பத்துடன் ஒன்றிணைத்து…

அரச சேவையின் வினைத்திறனின்மைக்கு தமது பதவிக்காலத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்

மக்களின் நலன்கருதி அரச நிறுவனங்கள் வினைத்திறனாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செயற்பட வேண்டும்… சகல அரச சேவை வழங்கல்களும் இலகுவான நடைமுறைக்கு உட்படுத்தப்படல் வேண்டும்..  ஊழல், மோசடிக்காரர்களுக்கு எதிராக கடும் தண்டனை.. அடையாள அட்டை, சாரதி அத்தாட்சிப்பத்திரம், குடிவரவு குடியகல்வு தகவல்களை ஒரே தரவு தொகுதியில் சேகரிக்கத் திட்டம்.. சாரதி அத்தாட்சிப்பத்திரம் பெறுவதற்கான பூரண வைத்திய பரிசோதனை பார வாகனங்களுக்கு மட்டுமே… இதுவரை ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்கள் மீதும் மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த அரச சேவையின்…

வட மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமனம்

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக இன்று (30) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார். சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார்.

தனிநபர்கள் பற்றிய தகவல்களை ஒரே தேசிய தரவு நிலையத்தின் கீழ் சேகரிப்பதற்கு ஜனாதிபதி கவனம்

தேசிய ஆளடையாள அட்டை, சாரதி அத்தாட்சிப்பத்திரம், குடிவரவு, குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து தனிநபர் சார்ந்த தகவல்களையும் ஒரே தேசிய தரவு நிலையத்தின் கீழ் சேகரித்தல் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார். இதனூடாக நேரம், மனிதவலு மற்றும் பெருமளவு பணம் விரயமாகுவதைக் குறைக்க முடியுமென தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்…

செயற்திறன்மிக்க நாட்டைக் கட்டியெழுப்ப மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி   

சவால்களை வெற்றிகொண்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்… செயற்திறன்மிக்க நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளே காலத்தின் தேவையாகும்…. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அபிவிருத்தியை மீளக்கட்டியெழுப்ப துரித நடவடிக்கைகள்…. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார். அந்த குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கு நகர சபைகளும் பிரதேச சபைகளும் செயற்திறனுடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என்பதையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். செயற்திறன்மிக்க நாட்டை உருவாக்கும் நோக்கில் மாநகர சபைகள்,…

தொழிற்பயிற்சித் துறைக்கு மீண்டும் புத்துயிரூட்டுமாறு ஜனாதிபதி பணிப்பு….   

உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சந்தைகளுக்கேற்ற தொழிற்படையை உருவாக்குங்கள்… குறைந்த வருமானம்பெறும் மக்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு முன்னுரிமை…. தொழிற்பயிற்சித் துறையில் புத்தெழுச்சியை ஏற்படுத்தி, உயர் திறன்கொண்ட தொழிற்படையை உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார். திறன்விருத்தி தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சந்தைகள் குறித்து…

ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறி பாடசாலை அதிபரை அச்சுறுத்திய நபர் கைது

ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறிக்கொண்டு மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை அச்சுறுத்திய நபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (27) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்ரீயானந்த திஸ்ஸ டி அல்விஸ் என்ற அந்நபர் 11/9, புனித செபஸ்டியான் மாவத்தை மொரட்டுவை எனும் முகவரியை சேர்ந்தவராவார். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற இந்த நபரை நாளைய தினம் மொரட்டுவை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக…

வினைத்திறனுடன் கூடிய சிறந்த சேவையை வழங்குவது அரச ஊழியர்களின் பொறுப்பாகும் – ஜனாதிபதி

ஜனாதிபதி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகத்திற்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கும் திடீர் கண்காணிப்பு விஜயம்… காலி முகத்திடல் பாதுகாப்பு அமைச்சு வளாகத்திற்கும் விஜயம்.. சேவைகளை வழங்கும் போது எவ்வித முறைக்கேடுகளும் இடம்பெறக்கூடாது.. ஒரு மாதத்திற்குள் அனைத்தும் முறைப்படுத்தப்பட வேண்டும். “நான் மீண்டும் கண்காணிப்பதற்காக வருவேன்” – ஜனாதிபதி தெரிவிப்பு… சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து…

சுனாமியினால் உயிரிழந்தவர்களை ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

15 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று (26) நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தமது நெருங்கிய உறவுகளை இழந்து இன்றும் துயரத்தில் ஆழ்ந்துள்ள அனைத்து இலங்கையர்களுடனும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் இணைந்துகொண்டுள்ளார். “இலங்கை மக்கள் இதுவரை முகங்கொடுக்க நேர்ந்த மிகக் கொடூரமான இயற்கை அனர்த்தம் சுனாமி பேரலையாகும். அந்த பயங்கர அனுபவத்தின் துயர் மிகுந்த ஞாபகங்கள் ஒருபோதும் எமது மனங்களை விட்டு அகலாது.” அதனை…

ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசகர் எனக் கூறிக்கொண்டு மொரட்டுவையிலுள்ள பிரபல பாடசாலையின் அதிபருக்கு அழுத்தம் கொடுத்த நபரொருவர் பற்றி அறியக்கிடைத்துள்ளது. அவர் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அண்மையில் சில ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஜனாதிபதி அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவோர் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக்கொள்கின்றது.