Archives

நாட்டின் தனித்துவத்தை பாதுகாத்து ஏனைய நாடுகளுடன் சமநிலையை பேணக்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பணிகள் ஆரம்பம்

கடந்த 50 தினங்களில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தேசிய அபிமானத்தையும் இறைமையையும் பாதுகாத்து எந்தவொரு நாட்டுடனும் சமநிலையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளத்தக்க கௌரவமிக்க ஆட்சி  ஏற்படுத்தப்படும், என எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் ”சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றுகையில் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இதற்காக கடந்த 50 நாட்களுக்குள் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் உலகளாவிய கேள்விக்கும் ஏற்ற தொழிற்படையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பாடசாலை…

சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். ஜனாதிபதி அவர்களும் அமைச்சர் சண்முகமும் இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் முக்கியமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, இணையப் பாதுகாப்பு, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும்…

அவுஸ்திரேலிய பிரதமருடன் ஜனாதிபதி துயர் பகிர்வு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை இன்று (07) தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது அந்நாடு எதிர்நோக்கியுள்ள வரலாற்றில் மிகக் கொடிய காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். வருடத்தில் இக்காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவுகின்றமை ஒரு சாதாரண நிகழ்வாயினும் தற்போது பரவியுள்ள காட்டுத்தீ முன்னொருபோதும் இல்லாதவாறு உக்கிரமானதாக காணப்படுகின்றது. இந்த பயங்கர காட்டுத்தீயினால் தற்போது சுமார் முப்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களுள் மீட்புப் பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர். உயிரிழந்துள்ள…

வீடு மற்றும் சிறிய வியாபார நிர்மாணத்திட்டங்களுக்கு ஒரே நாளில் அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு…

உறுதிச் சான்றிதழ் ஒரே நாளில்… முதன்முறையாக வீடிடொன்றை கொள்வனவு செய்யும்போது நீண்டகால கடன் மற்றும் நிவாரண வட்டி வீதம்… கொழும்பு தலைநகரை அண்டிய பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவம் முறையான திட்டத்தின் கீழ்… நாடளாவிய ரீதியில் சிறிய நகரங்கள் அழகிய முறையில் அபிவிருத்தி… வேரெஸ்ஸ கங்கைத்திட்டப் பணிகள் துரிதம்… வீடொன்றை அல்லது சிறிய வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்கும் திட்டங்கள் உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருப்பின் அதற்கான அனுமதியை ஒரே நாளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை…

முதலீட்டுக்கான ஒரு மையம் என்ற வகையில் இலங்கையை சாதகமாக பார்க்குமாறு ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவிப்பு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நெதர்லாந்தின் தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப்,  இத்தாலி தூதரகத்தின் பிரதித் தலைவர் அலெக்ரா பைஸ்ட்ரோச்சி, ருமேனியாவின் தூதுவர் கலாநிதி விக்டர் சியுஜ்தியா, பிரான்சின் தூதுவர் எரிக் லாவெர்டு மற்றும் ஜெர்மனியின் தூதுவர் ஜோன் ரோட் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். தூதுவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக முதலில் தமது வாழ்த்துக்களை…

விபஜ்ஜவாத தம்ம சங்காயன மற்றும் திரிபீடக அன்பளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

பௌத்த சமயத்தின் இருப்பை பாதுகாக்கும் உன்னத நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விபஜ்ஜவாத தம்ம சங்காயன மற்றும் தேரர்களுக்கு திரிபீடகத்தை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு ஐயாயிரம் மகாசங்கத்தினரின் பங்கேற்புடன் இன்று (04) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது திரிபீடக பூஜையின் நிறைவு நாள் நிகழ்வு இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது. தூய பௌத்த கொள்கையை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாக்கும் நோக்குடன் அநுராதபுர லபுனோருகந்த ஆரண்ய சேனாசனவின் சங்கைக்குரிய மான்கடவல…

நாட்டின் இறைமையையும் தேசிய அபிமானத்தையும் பாதுகாத்து எந்தவொரு நாட்டுடனும் சமநிலையில் கொடுக்கல் வாங்கல் செய்யும் கௌரவமான ஆட்சியை நாம் உருவாக்குவோம் என ஜனாதிபதி உறுதியளிப்பு…..

நாட்டின் நிலப் பிரதேசங்கள் அல்லது பௌதீக வளங்கள் ஒருபோதும் வேறொரு நாட்டின் உடமையாவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.. சவால்ளை வெற்றிகொண்டு வரலாறு தற்போதைய தலைமுறையிடம் ஒப்படைத்துள்ள பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முன்வருமாறு கோரிக்கை…நாட்டின் பாதுகாப்பு, இறைமை மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்…. இராஜதந்திர உறவுகளின் போது அல்லது சர்வதேச வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் போதும் எந்தவொரு வெளிநாட்டின் முன்னிலையிலும் மண்டியிடாத நாட்டின் இறைமையை எப்போதும் பாதுகாக்கின்ற, எந்தவொரு நாட்டுடனும் சமநிலையில் கொடுக்கல் வாங்கல் செய்யும் தேசிய அபிமானத்தைப்…

வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த அரச சேவைக்கு அனைத்து அரச ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

ஜனாதிபதியின் செயலாளர் புத்தாண்டுப் பணிகளை ஆரம்பிக்கும் அனைத்து அரச ஊழியர்களிடமும் வேண்டுகோள்…. “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை” அடிப்படையாகக்கொண்டு வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த அரச சேவைக்கு அனைத்து அரச ஊழியர்களும் நேர்மையான முறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அவர்கள் தெரிவித்தார். நாட்டைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்தில் அரச சேவைமீது ஜனாதிபதி அவர்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் ஊழியர்கள் புத்தாண்டில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில்…

“வளம்பெறும் நாட்டிற்கு – பலன்தரும் மரங்கள்” தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் ஜனாதிபதி இணைவு

“வளம்பெறும் நாட்டிற்கு – பலன்தரும் மரங்கள்” எனும் தொனிப்பொருளில் பத்து இலட்சம் மரங்களை நாட்டும் தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் இன்று (01) முற்பகல் இணைந்துகொண்டார். மிரிஹானையில் அமைந்துள்ள தனது தனிப்பட்ட உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டிய ஜனாதிபதி அவர்கள், நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள மரநடுகை செயற்திட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இலங்கையில் தற்போது 29 சதவீதமாக காணப்படும் வன அடர்த்தியை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 32 சதவீதம் வரை…

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய் நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது. அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், ‘சுபீட்சத்தின் ஆண்டாக’ ஆக்கும் திடவுறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடனேயே வரவேற்கின்றது. எமக்கே உரித்தான தொலைநோக்கினை கொண்டவொரு தேசமாக கடந்தகாலத்தில் நாம் அடைந்த வெற்றிகள் ஏராளமானவை. அத்தகைய எமது தனித்துவ அடையாளங்களையும் திறன்களையும் நவீன தொழிநுட்பத்துடன் ஒன்றிணைத்து…