இலங்கை ஜப்பானிய பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்த இணக்கம்
பொருளாதார முக்கியத்துவமுடைய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தவும் அதற்கான பிரதான துறைகளை இனங்கண்டு அர்ப்பணிப்புடன் செயற்படவும் இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம், கிழக்கு கொள்கலன் இறங்குதுறை உள்ளிட்ட துறைமுக உட்கட்டமைப்பு, வசதிகளின் அபிவிருத்தி, அதிவேக வீதிகள், விவசாயம், அதிநவீன தொலைக்காட்சி தரவுப் பரிமாற்றம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஜப்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மொதேகி டொசிமிட்சு (Motegi Toshimitsu)…
ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான் – ASEAN) நாடுகளின் தூதுவர்கள் குழுவினர் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர். தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் கொன்சியுலர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், அவர்கள் முதலில் தமது வாழ்த்துகளை ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவித்தனர். இலங்கைக்கும் தமது நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை விருத்தி செய்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடியதுடன், இதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்…
மின்சக்தி துறைசார்ந்த பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு
மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் மின்சக்தி, சக்திவலு அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை மின்சார சபை, இலங்கை பேண்தகு சக்திவலு அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், அந்நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான துரித தீர்வுகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மின் உற்பத்தி துறையில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் புதிய செயற்திட்டங்கள்…
ஊடக சுதந்திரத்திற்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி உறுதியளிப்பு…
ஊடகங்கள் நாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்கள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்…. நாட்டின் ஊடக சுதந்திரத்திற்கு தனது ஆட்சிக்காலத்தின்போது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என உறுதியளிப்பதாக மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். எந்தவொரு நியாயமான விமர்சனத்திற்கும் இடமுள்ளதென்றும் நாட்டுக்கும் நாட்டின் நற்பெயருக்கும் ஏற்றவகையில் ஊடகப் பணியில் ஈடுபட்டு, ஊடகங்களின்மூலம் நாட்டுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்குமென தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
ஆப்கானிஸ்தான் தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஷ்ரப் ஹைதரி இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். ஜனாதிபதி அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த தூதுவர், இருநாடுகளுக்கிடையிலும் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடினார்.
புதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) இன்று (06) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், புதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்குமிடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும்
மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் தன்னுடையவும் மாலைத்தீவின் ஜனாதிபதி மொஹமட் சாலிஹ் அவர்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் தற்போதைய முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர், இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பிராந்திய கூட்டுறவுகளையும் மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஜனாதிபதி…
கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்…
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான உடனேயே பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பதற்கான முறைமை ஒன்றை வகுத்தல்… வெற்றிடங்கள் உள்ள நிறுவனங்களை கண்டறிந்து வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் அவ்வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல்… நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்றவகையில் தொழிற்படை ஒன்றை உருவாக்குதல் மற்றும் அதற்கு உதவும் பாடத்திட்டத்தை தயாரித்தல்…. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துதல்…. தகவல் தொழிநுட்ப பாடத்திற்கு முன்னுரிமையளித்தல்… தனது கொள்கை பிரகடனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மேன்மைதங்கிய…
கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்….
கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர்கள் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக அநுராதா யகம்பத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வடமத்திய மாகாணத்திற்கான ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திரிகள் தெரிவிப்பு
இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். ஜனாதிபதி அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக உறுதியளித்தார். மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் புதிய தொலைநோக்குடனான நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டிய தூதுவர், அதனை வெற்றிபெறச் செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை…