கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்….
கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர்கள் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக அநுராதா யகம்பத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வடமத்திய மாகாணத்திற்கான ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திரிகள் தெரிவிப்பு
இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். ஜனாதிபதி அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக உறுதியளித்தார். மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் புதிய தொலைநோக்குடனான நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டிய தூதுவர், அதனை வெற்றிபெறச் செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை…
சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள செய்தி
விசேட தேவையுடையவர்களினால் நாட்டின் அபிவிருத்திக்கு பெற்றுக்கொடுக்கப்படும் பங்களிப்பினை மிகுந்த கௌரவத்துடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்த வண்ணமே விசேட தேவையுடையவர்களுடனும் அவர்களது குடும்ப உறவினர்களுடனும் இணைந்து இவ்வருட சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை நாம் கொண்டாடுகின்றோம். “விசேட தேவையுடையோர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களது தலைமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கு 2030 அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுதல்” 2019ஆம் ஆண்டின் சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தின் தொனிப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 18ஆம் திகதி நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக…
புதிய நோக்குடன் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத்தருவதாக இத்தாலி மற்றும் நோர்வே தூதுவர்கள் தெரிவிப்பு
இலங்கைக்கான இத்தாலி தூதுவர் ரீட்டா ஜி. மெனல்லா (Rita Giuliana Manella) இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இத்தாலி அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்த இத்தாலி தூதுவர், புதிய நோக்குடன் முன்னோக்கி பயணிக்கும் இலங்கையுடன் பரந்த ஒத்துழைப்புடன் செயற்பட தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் புதிய வேலைத்திட்டத்துடன் பொருளாதாரம், சமூகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும்…
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். விசாரணை ஆணைக்குழுவின் செயற்பணிகள் மற்றும் ஒழுங்கமைப்பினை தெளிவுபடுத்திய ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜானக்க டி சில்வா இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார். தாக்குதல் ஒன்று நடாத்தப்படுமென முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்…
பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்
பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (02) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல தமது நாடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். இலங்கையுடன் நெருங்கிய நட்புறவை பேணிவரும் தமது நாடு, பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு பற்றிய…
கனடா உயர் ஸ்தானிகர் மற்றும் சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் சந்திப்பு
இலங்கைக்கான கனடா நாட்டின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் (Daved Mckinnon) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி அவர்கள் உயர் ஸ்தானிகருடன் சுமூகமாக கலந்துரையாடியதுடன், உயர் ஸ்தானிகர் கனடா அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி அவர்களுக்குத் தெரிவித்தார். இதேநேரம், சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் விசேட பிரதிநிதியும் சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் நாயகமுமான இலங்கைக்கான முன்னாள் சீன…
ஊடக அறிவித்தல்
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் நிவாரணம் வழங்குதல். சீரற்ற வானிலை காரணமாக தற்போது நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களது நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படக்கூடிய மண்சரிவு, மண்மேடுகள் சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிந்து விழுதல் போன்ற…
ஊடக வெளியீடு
சுவிட்சர்லாந்து தூதரக ஊழியர் தொடர்பானதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த புதிய தகவல் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் உள்நாட்டில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் தொடர்பாக கூறப்படும் குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசு தீவிர கவனம் செலுத்தி, 2019 நவம்பர் 25 திங்கள் அன்று இந்த விவகாரம் குறித்து உடனடியான முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது. இன்று மாலை (டிசம்பர் 1, 2019) வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத ஆர்யசிங்ஹ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன மற்றும் தொடர்புடைய…
புதிய சுவாசம்
உலகில் கண்கவர் வனப்புமிக்க ஒரு நாடு என்ற வகையிலேயே ஆதிகாலம் முதல் இலங்கை ஏனையோரின் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்கு எமது நாட்டின் அமைவிடம் மாத்திரமன்றி ஒரு தேசமாக நாம் பெற்றுள்ள உயரிய பெறுமானங்களும் காரணமாகும். எனினும் காலப்போக்கில் இலங்கையரின் தனித்துவ அடையாளத்திற்கு சவாலாக அமையக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை எமது நாடு எதிர்நோக்க நேர்ந்தது. சுற்றாடலுக்கு கூருணர்வு அற்ற சமூகமொன்று உருவாகி வந்தமையே இதற்கான முதன்மை காரணமாக அமைந்தது. எமது மூதாதையர் இயற்கையுடன் மிக நெருங்கிய பிணைப்பினைக்…