Category: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கை: இன்று இரண்டு முக்கிய தீர்மானங்கள்

  திங்கள் காலை வரை ஊரடங்கு சட்டம்   அனைத்து குழு சுற்றுப் பயணங்களுக்கும் தடை கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேலும் சில நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு உதவும் வகையில் இன்று இரண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இன்று (20) மாலை 6.00 மணி முதல் 23 திங்கள் காலை 6.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் பரவுவதற்கு இடமளிக்கும் அனைத்து வகையான சுற்றுலாக்களும் மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் திங்கள்…

சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளுக்கு முற்றாக தடை

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உருவாகியுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவது நோய் பரவுவதற்கு காரணமாகும் என அறிவுறுத்தப்பட்டிருந்தபோதும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குழுக்களாக நாட்டினுள் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உள்நாட்டுப் பிரஜைகளும் சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய ஒன்றுகூடல்கள் நிறுத்தப்படவேண்டியுள்ளது. மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் ஒரு மீற்றர் தூரத்தில் தனிநபர் இடைவெளியை…

இன்று பிற்பகல். 6.00 மணி முதல் திங்கட்கிழமை முற்பகல் 6.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

இன்று (மார்ச் 20) பிற்பகல் 6.00 மணி முதல் திங்கட்கிழமை (23) முற்பகல் 6.00 மணி வரை நாடு முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறபிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.  

ஜனாதிபதியின் சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

உலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதம் இருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி தின கொண்டாட்டத்தில் இலங்கைவாழ் இந்துக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்துகொள்கின்றேன். இந்து சமய பஞ்சாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமயக் கிரியைகளின் மூலம் துர்க்குணங்களில் இருந்து விலகி உளத்தூய்மையை பெற்றுக்கொள்ள முடியுமென்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். பல்வேறு சிக்கல்கள், முரண்பாடுகளுக்கு மத்தியில் முன்னோக்கிச் செல்லும் இன்றைய உலகில், மனிதனுக்கு உள அமைதியை தருவது சமயமாகும்.…

அர்த்தபூர்வமான ஜனநாயகத்துடன் பொருளாதார சுதந்திரம்

பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களுக்கு இடமில்லை… சுதந்திரமாக சிந்திப்பதற்கும் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் முழுமையான சுதந்திரம்….. மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தேவையற்ற தடைகள் நீக்கப்படும்….. உலகப் பொருளாதார போக்குகளுடன் முன்னோக்கிச்செல்லும் நாடு…. 72வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி உறுதியளிப்பு… இலங்கையில் வாழ்கின்ற அனைத்து பிரஜைகளும் சுதந்திரமாகவும் பாதுகாப்போடும் வாழும், சுதந்திரமாக சிந்திக்கும் உரிமையையும் சுயாதீனமாக அபிப்பிராயம் கொள்ளும் உரிமை போன்று கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையையும் உறுதி செய்யும் அதேநேரம் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களுக்கு இந்நாட்டில் செயற்படுவதற்கு…

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இணைந்து கொள்கின்றேன். விவசாயத்தை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் இன்றைய நாளில் சூரிய பகவானை நோக்கி பக்தியுடன் வழிபாடாற்றி நன்றி செலுத்தி வாழ்வில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றனர். தைப்பொங்கல் கொண்டாட்டங்களினால் மக்கள் மத்தியில் உருவாகும் புதிய பிணைப்புக்கள் குடும்ப அலகுகளிலிருந்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விரிவடைந்து செல்கின்றன. இதனூடாக பெற்றோர் பிள்ளைகள், ஆசிரியர்கள் மாணவர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கிடையிலும் ஆட்சியாளர்கள்…

ஊடக அறிவித்தல்

முறையான வர்த்தக மற்றும் போட்டித்தன்மைமிக்க நடைமுறைகளை பின்பற்றாமை 2019 டிசம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், குறிப்பாக சில்லறை, தொகை மற்றும் இறக்குமதி பொருட்கள் விற்பனையின் போது வெட் வரி குறைக்கப்பட்டதனால் கிடைக்கப்பெறும் நன்மைகள் நுகர்வோரை சென்றடைவதில்லை என பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக ஜனாதிபதி செயலகத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதுடன் அவ்விடயம் தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின்றன. வரிச் சலுகை கிடைக்கப்பெற்ற பொருட்களுள் கட்டிட நிர்மாணப் பொருட்கள், பீங்கான் உற்பத்திகள்,…

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய் நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது. அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், ‘சுபீட்சத்தின் ஆண்டாக’ ஆக்கும் திடவுறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடனேயே வரவேற்கின்றது. எமக்கே உரித்தான தொலைநோக்கினை கொண்டவொரு தேசமாக கடந்தகாலத்தில் நாம் அடைந்த வெற்றிகள் ஏராளமானவை. அத்தகைய எமது தனித்துவ அடையாளங்களையும் திறன்களையும் நவீன தொழிநுட்பத்துடன் ஒன்றிணைத்து…

ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறி பாடசாலை அதிபரை அச்சுறுத்திய நபர் கைது

ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறிக்கொண்டு மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை அச்சுறுத்திய நபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (27) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்ரீயானந்த திஸ்ஸ டி அல்விஸ் என்ற அந்நபர் 11/9, புனித செபஸ்டியான் மாவத்தை மொரட்டுவை எனும் முகவரியை சேர்ந்தவராவார். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற இந்த நபரை நாளைய தினம் மொரட்டுவை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக…

ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசகர் எனக் கூறிக்கொண்டு மொரட்டுவையிலுள்ள பிரபல பாடசாலையின் அதிபருக்கு அழுத்தம் கொடுத்த நபரொருவர் பற்றி அறியக்கிடைத்துள்ளது. அவர் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அண்மையில் சில ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஜனாதிபதி அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவோர் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக்கொள்கின்றது.